Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மாட்டுக்கறி சாப்பிட்டால் உடம்புக்குக் கெடுதலா?

மாட்டுக் கறியை சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும், இல்லை, அது கெடுதலானது என்று இன்னொரு பாதி மக்களும் கருதுகின்றனர்.
மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது. இந்த நிலையில், மாட்டுக்கறியை அதிகமாக உண்பதால் நமது வாழ்நாள் குறையும் என்றும், கோழிக் கறியை அதிகமாக உண்டால் வாழ்நாள் நீடிக்கும் என்றும் புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவு மாட்டுக்கறியை உண்பதால் இதய நோய் வருமாம். ஏனெனில் அந்த இறைச்சியில் அதிகமான அளவு கொழுப்புகள் நிறைந்துள்ளது. அதனால் தமனிகளில் செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதோடு, வீரியம் குறைந்த நாள்பட்ட நோயையும் ஏற்படுத்தும்.
ஆனால் அதேசமயம், மாட்டுக் கறியே சாப்பிடக் கூடாது என்று அவர்கள் சொல்லவில்லை. மற்ற இறைச்சிகளைப் போல இதையும் அளவோடு எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். அரிசி, வெண்ணெய், சீஸ் போன்றவற்றில் கூட கொழுப்புகள் உள்ளன. இருப்பினும் அவற்றை எவ்வாறு சாப்பிடுகிறோமோ, அது போலவே அந்த மாட்டுக்கறியையும் அளவோடு உண்ண வேண்டும்.
மாட்டுக்கறியைச் சாப்பிடுவதால் தமனிகளில் தடிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டாம். ஏனெனில் மிருகத்தின் கொழுப்பானது தமனிகளில் தங்கி, இரத்த ஒட்டத்தை தடுக்கும். அதனால் மாரடைப்புகள் கூட ஏற்படும் என்கிறார்கள்.
மாட்டுக்கறியை அதிக அளவில் உண்போருக்கு குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாம். இருப்பினும் இதை நிரூபிக்க இதுவரை எந்த சான்றும் இல்லை. மாட்டுக்கறியில் உள்ள கார்சினோஜென், புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள். ஆகவே அளவுக்கு அதிகமாக மாட்டுக்கறியை உண்டால் உடலில் கார்சினோஜென்னின் அளவு அதிகரிக்கும். இதனால் புற்று நோய் வரலாம் என்று கணிக்கப்படுகிறது.
மாட்டுக்கறியில் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை அதிகமாக உண்டால் உடலானது அதிக எடை அடையும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் எந்த சாப்பாட்டைச் சாப்பிட்டாலும் போதிய உடல் இயக்கம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சாதாரணச் சாப்பாடு சாப்பிட்டாலும் கூட எடை கூடத்தான் செய்யும்.
எதுவாக இருந்தால் என்ன, அளவோடு உண்டால் வளமோடும், நலமோடும் வாழலாம். அது மாடாக இருந்தாலும் சரி கோழியாக இருந்தாலும் சரி...
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications