For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓவர் டென்சன் பார்ட்டியா? உடம்புக்கு ஆகாது!!

By Mayura Akilan
|

Hypertension
இன்றைக்கு உள்ள இளைய தலைமுறயினர் பத்தில் ஒருவருக்கு ஹைபர் டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இந்த உயர் ரத்த அழுத்த நோயானது மவுனமாக இருந்து ஆளை கொள்ளும் ஆபத்தான நோய் என்று மருத்துவ உலகினர் எச்சரிக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தினால் பக்கவாதம், இதயபாதிப்பு, சிறுநீராக கோளாறுகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம்

இன்றைக்கு பெரும்பாலோனோர் சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் உடலில் அதிக கொழுப்பு கூடுகிறது. இதனால் உடல் பருமன் நோய்க்கு ஆளாகின்றனர். மேலும் பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தினால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு ஏற்படுகிறது. அதிகமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே உடலானது நோய்களின் கூடாரமாக மாறுவதோடு இளம்வயதில் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட பல நோய்கள் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைகின்றன.

பாரம்பரிய உணவுகள்

உடலில் பிரச்னைகள் இருக்கும் போது அது மனதையும் பாதித்து ஹார்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் டென்ஷன் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது. சிறு வயது முதல் நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலடாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

குழந்தைகள் பர்கர், பீட்ஸா மற்றும் ஜங்க் புட் வகைகள் அடிக்கடி சாப்பிடுவதற்கு தடை விதிக்கவும். அதே கார்பனேட் அடங்கிய குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிக்க கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக இளநீர், பழரசங்கள் சாப்பிட பழக்கப் படுத்தலாம்.

நெல்லிக்கனி ஜூஸ்

ஹைபர் டென்சன் ஏற்பட்டவர்களுக்கு பூண்டு சிறந்த மருந்தாக உள்ளது. வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் பருகலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது. இதன் மூலம் உயர்ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

தினசரி காலையில் நெல்லிக்கனி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து ஜூஸாக கலந்து பருகலாம். இதனால் உயர்ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

உயர் ரத்த அழுத்த நோய்க்கு தர்பூசணி சிறந்த மருந்தாக உள்ளது. தினசரி தர்பூசணி பழத்தை சாப்பிடலாம் அல்லது தர்பூசணி பழச் சாறுடன் கசகசா சேர்த்து அரைத்து தினசரி வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

துளசி, வேப்பிலை

துளசி 5 இலைகள் வேப்பிலை 5 சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து பருகவேண்டும். ஒருவாரத்திற்கு தொடர்ந்து இதனை குடித்து வர உயர்ரத்த அழுத்தம் குணமாகும்.

English summary

Hyper Tension, Stroke, Heart Attack,kidney Problems | ஓவர் டென்சன் பார்ட்டியா? உடம்புக்கு ஆகாது!!

One out of ten people now a days suffer hyper tension or High Blood Pressure. Blood pressure is a silent killer. If unchecked it will lead to heart attack, stroke and kidney failure.
Story first published: Thursday, March 29, 2012, 10:06 [IST]
Desktop Bottom Promotion