Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
தோள்பட்டை வாதமா! உணவில் கவனம் செலுத்துங்க!

கழுத்தின் மையப் பகுதியில் ஏழு தண்டு வட எலும்புகள் உள்ளன. இவற்றைச்சுற்றி தசைகளும், தசை நார்களும் இணைந்து உள்ளன. மேலும் கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன. இப்படி உடலுக்கும் சிரசிற்கும் பாலமாக இருக்கும் கழுத்துப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் நம்முடைய அன்றாட செயல்கள் அனைத்தும் கடினமாகிவிடுகின்றன.
நீரிழிவு, இரத்த அழுத்த நோயாளிகள் பலரும் முதுகுவலி, கீழ்த்தண்டு முதுகுவலி, கழுத்துவலி, கைகால் மூட்டு வலி போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இந்த வகையில் கழுத்துவலி என்ற தோள்பட்டை வலி நம்மில் அனேக பேரைப் பாதிக்கிறது. இது பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே ஏற்படுகிறது. இந்த எலும்பு இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் (Cervical Spondylosis) என்று ஆங்கில மருத்துவ முறைகளில் கூறுகின்றனர். இதை வர்ம மருத்துவத்தில் தோள் பட்டை வாதம் என்று அழைக்கின்றனர். இது குறிப்பாக அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வோர்களையே அதிகம் பாதிக்கிறது. உடல் உழைப்பின்மை, உடற் பயிற்சியின்மை, சீரற்ற உணவுமுறை, தூக்கமின்மை, இவற்றினாலும் உண்டாகிறது.
கழுத்துப் பகுதியில் கைகளின் நரம்புகள், எலும்புகள் ஆரம்பிப்பதால் கைகள் மரத்துப் போகும். சுண்டு விரல் பகுதிகள் செயலிழந்து காணப்படும். மன எரிச்சல் உண்டாகும். எதிலும் விருப்பம் தோன்றாது. அதிக கோபம் உண்டாகும், தூக்கமின்மை ஏற்படும். கண் எரிச்சல் உண்டாகும். அதிகநேரம் படிக்கும்போது கழுத்துப் பகுதியில் வலி உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும்.
தலைவலி, மூக்கில் நீர்வடிதல், மண்டைக்குத்து, பின் கழுத்துப் பகுதியில் பிடிப்பு போன்றவை உண்டாகும். குனிந்து நிமிரும்போது தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றச்செய்யும். உடல் அதிர்ந்து நரம்புகள் இறுகும். சிலருக்கு எழுந்து நடக்கும்போது தலை சுற்றல் மயக்கம் உண்டாகும்.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், அதிகமான நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்தல், தொலைக்காட்சி பார்த்தல், இவற்றினாலும்,அதீத சிந்தனை, மனஅழுத்தம், தூக்கமின்மை, கோபம் போன்றவற்றாலும் இத்தகைய கழுத்துவலி உருவாகிறது.
எனவே கழுத்து வழி, தோள்பட்டை வலி ஏற்படாமல் தவிர்க்க நேரம் கடந்த உணவு, அதீத உணவு, எளிதில் சீரணமாகாத உணவு, நொறுக்குத்தீனி, மது, போதைப்பொருள், நீண்ட பட்டினி, வாயு பதார்த்தங்கள் உண்பது. அல்லது அதிக குளிர்ச்சியூட்டும் உணவுகளை உண்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.மலச்சிக்கலைப் போக்குவதுடன், தினமும் மதிய வேளையில் ஒரு கீரையை சேர்த்து சாப்பிட வேண்டும். இரவில் கீரை, தயிர் இவற்றை தவிர்க்க வேண்டும்.
இரவு நேர உணவு மென்மையானதாவும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் இருக்கவேண்டும். பாதி வயிற்றுக்கு சாப்பிடுவது நல்லது. மேலும் படுக்கைக்கு செல்லும் 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை முடித்துவிட வேண்டும். குறிப்பாக காலை உணவை தவிர்க்க கூடாது. இரவு முழுவதும் காலியாக உள்ள வயிற்றில் காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் வாய்வு தொல்லை உண்டாகும். இதனால் காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். பிராய்லர் கோழி, முட்டை, பதப்படுத்தப்பட்ட உணவு, ஊறுகாய் இவற்றை தவிர்ப்பது நல்லது.
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் சிறிது நேரம் எழுந்து நடந்து பின் வேலை செய்யலாம். குறிப்பாக கணினி முன் வேலை செய்பவர்கள் சிறிது ஓய்வெடுத்து பின் வேலை செய்வது நல்லது. இவர்கள் தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்கி யோகா, உடற்பயிற்சி செய்வது. யோகா ஆசிரியரை அணுகி முறைப்படி யோகா கற்றுக் கொள்வது நல்லது. மன உளைச்சல், மன எரிச்சல், மனஅழுத்தம், டென்ஷன் இவைகளை குறைக்க தியானம் செய்யலாம். இதன் மூலம் தோள்பட்டை, கழுத்துவலி ஆகியவைகளை முற்றிலும் குணப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications