Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வலி நீக்கும் ஹீலிங் தெரபி.. ஆய்வில் தகவல்!

இந்த சிகிச்சை முறையானது பொய்யல்ல, அது நிஜம் என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதமாக வருடும் உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்வதற்கென்றே நரம்புகள் தனியாக இருக்கின்றன என்று கண்டுபிடித்தனர். இந் நரம்புகள் வலியிருக்குமிடத்திலிருந்து வலி உணர்வை கொண்டு செல்லும் நரம்புகளால் தடை செய்யப்படுவதில்லை, மாறாக இந்த தொடுஉணர்வு நரம்புகள் வலி நரம்புகளை தடை செய்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஹீலிங் தெரபியின் மூலம் உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம் போன்ற தீவிரமான நோய்களைக் கூட குணப்படுத்த முடியுமாம். அதேபோல சில புற்றுநோய்களைக்கூட டச் தெரபி அல்லது ஹீலிங் தெரபியின் மூலம் குணப்படுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
மனித உடலில் மூன்று வித சக்திமையங்கள் உள்ளன. வாதம், பித்தம், கபம் எனப்படும் இவை முறையே நரம்பு சக்தி உடல் ரீதியான நெருப்பு சக்தி, ஊட்டச்சத்துள்ள சக்தி ஆகும். ஒருமனிதனின் உடலில் உள்ள இந்த மூன்றுவித சக்திகளின் அளவைப் பொறுத்தே அவருக்கு உள்ள நோய் பற்றிய தன்மை புரிந்து கொள்ளப்படுகிறது. இயற்கை மூலிகைகள் மற்றும் தாதுப் பொருட்களை உபயோகித்து நோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மருந்துளை உட்கொள்வதுடன் இணைத்து தூய்மைப்படுத்துதல் மற்றும் நச்சு நீக்குதல், உணவுப் பழக்க மாற்றம், உடலுக்கு மசாஜ்கள், தியானம் போன்ற அம்சங்களை உபயோகித்து நோய் தடுத்தல், நோய் நீக்குதல் போன்ற முயற்சிகளை ஆயுர்வேதம் கடைபிடிக்கிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் "ஐந்து அறிவு மருத்துவம்" என்ற முறை கையாளப்படுகிறது. டயட் அண்டு ஹெர்பலிசம், அரோமா தெரபி, கலர் தெரபி, சவுண்ட் தெரபி, டச் தெரபி என்பனவையே அந்த 5 முறைகளாக உள்ளது.
சுற்றுச்சூழலுடன் ஒத்திசைவு கொண்ட மனித உடலே ஆரோக்கியமான நிலையில் நிலவும் என்றும், தட்பவெப்ப மாறுதல்களும் மனித உடலுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளதால் அதற்கேற்ற சிகிச்சைகள் கையாளப்படவேண்டும் என்றும் ஆயுர்வேதம் நம்புகிறது. எனவே அன்பு, பரிவுடன் இதமாகத் தொட்டு தடவிக் கொடுத்தால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எல்லா வயதினருக்கும் வலி பறந்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications