Latest Updates
-
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க..
கொரிய மக்கள் தொப்பையின்றி சிக்கென்று இருக்க இந்த பானங்கள் தான் காரணமாம்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க..
Korean Weight Loss Tips In Tamil: நீங்கள் தொப்பை மற்றும் உடல் பருமனால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இவற்றைக் குறைக்க என்ன வழிகள் எல்லாம் உள்ளதோ, அவற்றை எல்லாம் தவறாமல் பின்பற்றுபவரா? இருப்பினும், என்ன முயற்சித்தாலும், உடல் எடை குறைந்த பாடில்லையா?
உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால், அதற்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுடன், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் என்ன தான் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினாலும், சிலருக்கு எடையைக் குறைத்து சிக்கென்று மாறுவது என்பது கனவாகவே உள்ளது.

இருப்பினும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், ஒருசில கொரிய பானங்களை குடித்து வந்தால், எளிய வழியில் தொப்பையைக் குறைத்து, எப்போதும் சிக்கென்று இருக்கலாம். நீங்கள் தொப்பையைக் குறைக்க உதவும் கொரிய பானங்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
கீழே வேகமாகவும், அதே வேளையில் ஆரோக்கியமாகவும் உடல் எடையைக் குறைக்க உதவும் கொரிய பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் குடித்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.
பார்லி டீ
கொரியாவில் மிகவும் பிரபலமான டீ தான் பார்லி டீ. இந்த பார்லி டீயில் காப்ஃபைன் ஏதும் இல்லை. மேலும் இந்த டீயை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம். இந்த டீ வறுத்த பார்லியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த டீ லேசான கசப்புச் சுவையைக் கொண்டிருந்தாலும், உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரிகிறது. அதோடு இந்த டீ உடல் சோர்வு, உடல் வீக்கம் மற்றும் வயிற்றுப் போக்கையும் சரிசெய்யும்.
க்ரீன் டீ
உலகளவில் மிகவும் பிரபலமான டீ தான் க்ரீன் டீ. இந்த க்ரீன் டீ கொரியாவிலும் மிகவும் பிரபலமான பானம். அதுவும் இந்த க்ரீன் டீயுடன் வறுத்த கைக்குத்தல் அரிசியை சேர்த்து டீ தயாரிக்கப்படுகிறது. இந்த சத்தான பானத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த க்ரீன் டீயை அதிகம் குடித்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புக்களை வேகமாக குறைக்க உதவி புரியும்.
இஞ்சி டீ
கொரியாவின் பாரம்பரியமான டீக்களுள் ஒன்று தான் இஞ்சி டீ. இந்த இஞ்சி டீயில் இஞ்சியுடன் நட்ஸ்களும் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த ஆரோக்கியமான டீயை குடிப்பதன் மூலம், சளி, இருமல், காய்ச்சலின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக குறைத்து, எடை இழப்பிற்கு உதவி புரியும்.
தாமரை இலை டீ
கொரியாவில் மிகவும் பிரபலமான மற்றொரு பாரம்பரியமான டீ தான் வெள்ளை தாமரை மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் யோனிப் சா (Yeonip Cha). பாரம்பரிய சீன மருத்துவத்தின் படி, இந்த டீயில் வைட்டமின் பி, கால்சியம், பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளன. இந்த டீயைக் குடிப்பதன் மூலம், இரத்தம் சுத்தமாவதோடு, நல்ல தூக்கத்தையும் பெறத் தூண்டும். முக்கியமாக இந்த டீயில் வைட்டமின் சி மற்றும் ப்ளேவோனாய்டுகள் அதிகமாக உள்ளன. இந்த டீயைக் குடித்து வருவதன் மூலம், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம்.
ரோஸ் டீ
உடல் எடையைக் குறைக்க உதவும் மற்றொரு கொரிய பானம் தான் ரோஸ் டீ. இந்த டீயை உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம். அதுவும் இந்த டீயில் வைட்டமின் சி மற்றும் ப்ளேவோனாய்டுகளும் அதிகம் இருப்பதால், இந்த டீயைக் குடித்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை தினசரி உடற்பயிற்சியை மேற்கொண்டு, அன்றாட உணவில் சேர்த்து வந்தால், விரைவில் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications