Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
வயிற்றில் உள்ள விடாப்பிடியான கொழுப்பைக் கரைக்கணுமா? அப்ப தினமும் இந்த உணவுகளை சாப்பிடுங்க..
Weight Loss Tips: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், எடை அதிகரிப்புக்கு காரணமான கொழுப்புக்களை கரைக்க வேண்டும். இந்த கொழுப்புக்களைக் கரைக்க உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்க வேண்டும்.
உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து ஆற்றலாக மாற்றபடும். இதன் மூலம் உடல் எடை குறையும். உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அதற்கு ஒருசில உணவுகளை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.

அதுவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன் மற்றும் குறிப்பிட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகள் உடல் எடையை திறம்பட குறைக்க உதவுகின்றன. இதுதவிர ஒருசில பானங்களும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்த, உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் திறனைக் கொண்டுள்ளன.
இப்போது உடலில் தேங்கியுள்ள விடாப்படியான கொழுப்புக்களைக் கரைக்க உதவும் உணவுகள் குறித்து காண்போம். அந்த உணவுகளை தினமும் ஒருவர் உட்கொண்டு வந்தால், மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடையும் குறையும்.
முட்டை வெள்ளைக்கரு
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த காலை உணவாக முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட் இருக்கும். ஏனெனில் முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள அமினோ அமிலங்கள் உடலின் மெட்டபாலிசத்தை நாள் முழுவதும் சிறப்பாக வைத்துக் கொள்வதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் கொண்டு ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.
காரமான உணவுகள்
காரமான உணவுகளை உண்பதன் மூலம் அதிகளவு உணவு உண்பதைத் தடுக்கலாம். மேலும் மிளகாயில் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் கெமிக்கலானது கேப்சைசின் உள்ளது. இந்த கேப்சைசின் ஹார்மோன்களை விழிப்பூட்டுவதோடு, இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் உடலில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. எனவே உங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், காரமான உணவுகளை உண்ணுங்கள்.
க்ரீன் டீ
உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும் ஓர் அற்புதமான பானம் தான் க்ரீன் டீ. தினமும் 3-5 கப் க்ரீன் டீயைக் குடித்தால், உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கலாம். ஆய்வுகளில் கூட க்ரீன் டீயில் உட்பொருட்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுதாக தெரிய வந்துள்ளது. எனவே எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், க்ரீன் டீயை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
காபி
உலகளவில் பெரும்பாலானோர் விரும்பி குடிக்கும் ஓர் பானம் தான் காபி. இந்த காபி ஒருவரை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு, உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில் காபி குடிக்காதவர்களை விட காபி குடிப்பவர்களின் மெட்டபாலிச விகிதமானது 16 சதவீதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காபியில் உள்ள காப்ஃபைன் உடலின் ஆற்லை அதிகரித்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது.
நெய்
பலரும் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் நெய்யை உணவில் சேர்க்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. தூய பசும்பாலால் ஆன நெய், ஒருவரது வயிற்றை எளிதில் நிரப்புவதோடு, மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. நெய்யில் உள்ள கொழுப்பானது லினோலெனிக் அமிலத்துடன் இணைந்துள்ளது. இது உடலில் தேங்கியுள்ள விடாப்பிடியான கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. அதோடு, இது கொழுப்புச் செல்களை செயல்பட வைத்து, கரையச் செய்கிறது.
பால் மற்றும் தயிர்
ஒரு டம்ளர் பாலில் கால்சியம் அதிகம் உள்ளன. ஆய்வு ஒன்றில் தினமும் கால்சியத்தை எடுப்பது, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புச் செல்களை கரைக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது. அதேப் போல் தயிரில் உள்ள புரோபயோடிக்குகளான நல்ல பாக்டீரியாக்கள், செரிமானத்திற்கு உதவி புரிவதோடு, வயிற்றை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
பட்டை
பட்டை உணவிற்கு ஒரு நல்ல மணம் மற்றும் சுவையை தருவதோடு, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது தமனிகளை சுத்தம் செய்கிறது மற்றும் இதில் வெப்பமூட்டும் பண்புகள் இருப்பதால், இது உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதுடன், உடலில் உள்ள அதிகளவு கலோரிகளை எரிக்க வைக்கின்றன. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் பட்டைத் தூளை உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை சிறப்பாக வைத்துக் கொள்வதோடு, இனிப்புகளின் மீதான ஆர்வத்தைக் குறைக்கும்.
டார்க் சாக்லேட்
அனைவருக்குமே சாக்லேட் சாப்பிட பிடிக்கும். அதுவும் டார்க் சாக்லேட்டை தினமும் ஒரு துண்டு உட்கொண்டு வந்தால், அது மனநிலையை மேம்படுத்துவதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. எனவே நீங்கள் உங்கள் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து, சிக்கென்று உடலுடன் காட்சியளிக்க விரும்பினால், தினமும் சிறிது டார்க் சாக்லேட்டை சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications