30 நாட்களில் தொப்பை குறையணுமா? அப்ப ஃபிட்னஸ் கோச் சொல்லும் இந்த பானங்களை காலையில் குடிங்க...

Weight Loss Drinks: ஒவ்வொருவருமே நன்கு ஃபிட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். ஆனால் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த, உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால், உடலில் கொழுப்புக்கள் ஆங்காங்கு தேங்கி, தொப்பையை உண்டாக்குகின்றன.

இப்படி தொப்பை வந்துவிட்டால், அது அந்நபருக்கு வயதான தோற்றத்தைக் கொடுப்பதோடு, அந்நபரின் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளையும் வரவழைத்துவிடும். எனவே தொப்பை வந்துவிட்டால், அதை குறைக்க முயற்சிக்க வேண்டும். மேலும் தொப்பை வராமல் இருக்கவும் முயற்சிக்க வேண்டும். அதற்கு ஒருசில பழக்கங்களை தினமும் காலையில் மேற்கொண்டு வந்தால், உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கலாம் மற்றும் தேங்கியுள்ள விடாப்பிடியான கொழுப்புக்களையும் கரைக்கலாம்.

Weight Loss Drinks Morning Fat Burning Drinks Approved By Fitness Coach To Reduce Belly Fat

இன்ஸ்டாகிராமில் சுமார் 39.4K-க்கும் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்ட ஃபிட்னஸ் கோச் தான் ஜோசியாஃபிசிக். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் 30 நாட்களுக்குள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைக்க உதவும் ஒருசில பானங்களைப் பற்றி கூறியுள்ளார். இந்த பானங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், 30 நாட்களில் எடை இழப்பில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணலாம் என்றும் ஃபிட்னஸ் கோச் கூறியுள்ளார்.

1. சியா விதை நீர்

சியா விதை நீர் உடல் எடையைக் குறைக்க உதவும் மிகவும் சக்தி வாய்ந்த பானங்களுள் ஒன்றாகும். இந்த சிறிய விதைகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது செரிமானத்தை ஊக்குவிக்கும் மற்றும் ஊட்டச்சத்துக்களை திறம்பட செயல்பட உதவி புரியும். அதோடு வயிற்று உப்புசத்தையும் தடுக்கும்.

இப்படிப்பட்ட சியா விதை நீரை தயாரிக்க, ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் சியா விதைகளை சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதில் சிறிது எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும். இதன் மூலம் கண்ட உணவுகளின் மீதான நாட்டம் குறைந்து, உடல் எடை குறைய உதவி புரியும்.

2. இஞ்சி ஜூஸ்

ஃபிட்னஸ் கோச் இந்த பானத்தை ஒரு கொழுப்பைக் கரைக்கும் பானமாக கூறுகிறார். இஞ்சி ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. அப்படிப்பட்ட இஞ்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸை காலையில் எழுந்ததும் குடித்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, வயிற்று உப்புசத்தைக் குறைக்கும், செரிமானத்தை மேம்படுத்தும்.

இந்த ஜூஸை தயாரிக்க 1 பெரிய துண்டு இஞ்சி, 1 சிறிய துண்டு மஞ்சள் கிழங்கை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி, அத்துடன் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள், பாதி எலுமிச்சையின் சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்ததும், அந்த பானத்தைக் குடிக்க வேண்டும் என்று கோச் கூறுகிறார்.

3. க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை துண்டுகள்

க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை ஆகிய இரண்டிலுமே சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. அதில் க்ரீன் டீயில் கேட்டசின்கள் உள்ளன. இவை மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களை கரைக்க வைக்கிறது. மறுபுறம் எலுமிச்சை நல்ல ப்ளேவரை தருவது மட்டுமின்றி, அதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது செரிமானத்தை ஆதரிக்கிறது மற்றும் நச்சுநீக்கத்திற்கு உதவுகிறது. எனவே தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள், க்ரீன் டீயில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து குடிக்கும் போது, விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

4. லெமன் பெப்பர் பானம்

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை துண்டுகளை சேர்த்து, அத்துடன் மிளகுத் தூளையும் சேர்த்து குடித்து வந்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஏனெனில் எலுமிச்சை, மிளகு ஆகிய இரண்டிலும் உடலின் வெப்பத்தை தூண்டும் கலவைகள் உள்ளன. இவை உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் செயல்முறையை மேம்படுத்த உதவுவதாக ஃபிட்னஸ் கோச் கூறுகிறார்.

5. ஆப்பிள் சீடர் வினிகர் பானம்

ஆப்பிள் சீடர் வினிகர் கொழுப்புக்களை கரைக்கும் பண்புகளைக் கொண்டதோடு, இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்கும் ஆற்றல் கொண்டது. இத்தகைய ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வரும் போது, கண்ட உணவுகளின் மீதான நாட்டம் குறைந்து, எடை இழப்புக்கு உதவி புரிவதாக கோச் கூறுகிறார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, May 14, 2025, 12:20 [IST]
Desktop Bottom Promotion