Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
சர்க்கரை நோய் இருக்கா? அப்ப இனிமேல் சாதத்தை இந்த மாதிரி சாப்பிடுங்க.. சுகர் அதிகரிக்காது...
Diabetes In Tamil: இந்தியாவின் பிரதான உணவு சாதம். இந்தியர்களால் சாதத்தை சாப்பிடாமல் இருக்க முடியாது. அதே சமயம் உலகிலேயே இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். மேலும் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள், தங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வேண்டும். முக்கியமாக சர்க்கரை நோய் இருப்பவர்கள் சாதத்தை அதிகம் சாப்பிடக்கூடாது.

ஏனெனில் சாதத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளன. இவை இரண்டுமே இரத்த சர்க்கரை அளவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆய்வு ஒன்றில், டைப்-2 சர்க்கரை நோயாளிகள் சாதத்தை அளவாக சாப்பிட வேண்டும் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் கார்போஹைட்ரேட் உணவுகள் இரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் சுகாதார நிபுணரின் உதவியுடன் தினசரி எடுக்க வேண்டிய கார்போஹைட்ரேட்டுக்களை தீர்மானிக்க வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் சர்க்கரை நோயாளிகள் தங்களின் உணவுகளை திட்டமிடும் போது, அதுவும் சாதத்தை சாப்பிட நினைக்கும் போது, ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளுடன் அளவாக சாதத்தை சேர்த்து சாப்பிட வேண்டும். அத்துடன் தாலையும் சேர்த்து எடுக்க வேண்டும். இப்படி உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
மேலும் சாதத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளதால், அதன் விளைவாக இரத்த சர்க்கரை அளவில் மோசமான தாக்கம் ஏற்படக்கூடாதெனில், சாதத்துடன் புரோட்டீன், நார்ச்சத்து அல்லது கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என சில ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த அரிசி நல்லது?
மருத்துவர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோய் உள்ளவர்கள், தங்கள் இரத்த சர்க்கரையை சீராக வைத்துக் கொள்ள எந்த வகையான அரிசி உதவி புரியும் என்பதை தெரிந்து கொண்டு உட்கொள்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த அரிசி என்றால், அது கைக்குத்தல் அரிசி, காட்டு அரிசி மற்றும் நீளமான பாசுமதி அரிசி போன்றவை தான். மேலும் அரிசியை எப்போதும் சமைத்த பின், அதை குளிர்வித்து, மீண்டும் சூடேற்றி உட்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம், அது ஒரு எதிர்ப்பு திறன் கொண்ட ஸ்டார்ச்சை உருவாக்கி, கார்போஹைட்ரேட்டுக்களை எளிதில் உடைய வழிவகை செய்கிறது.
எதிர்ப்பு திறன் கொண்ட ஸ்டார்ச் என்றால் என்ன?
எதிர்ப்பு திறன் கொண்ட ஸ்டார்ச் பெருங்குடலில் உணவுகளை நொதிக்க உதவி புரிந்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது, கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது மற்றும் குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் சாதத்தை சாப்பிட பின்பற்ற வேண்டியவைகள்:
* சர்க்கரை நோய் இருப்பவர்கள் பாசுமதி அல்லது கைக்குத்தல் அரிசியைத் தேந்தெடுத்து உண்பதே நல்லது. ஏனெனில் மற்ற வகை அரிசியுடன் ஒப்பிடுகையில் இவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு.
* சாதத்தை சமைக்கும் முன், அரிசியை நீரில் நன்கு 2-3 கழுவி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து, பின்னர் சமைக்க வேண்டும்.
* சாதத்தை சமைத்த பின், அதை குளிர வைத்து, மீண்டும் சூடேற்றி உட்கொள்ள வேண்டும். இதனால் அதில் உள்ள எதிர்ப்பு திறன் கொண்ட ஸ்டார்ச் அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications