For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைட்டமின ஈ குறைஞ்சா என்ன ஆபத்து வரும்னு தெரியுமா?... மொதல்ல இத படிங்க...

விட்டமின் ஈ ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு எந்த மாதிரியான நன்மைகள் உண்டாகும், வாங்க தெரிஞ்சுக்கலாம்.

|

விட்டமின் ஈ என்பது நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இது தான் நமது நோயெதிப்பு மண்டலத்தை வலுவாக்க பயன்படுகிறது. மேலும் இரத்த சிவப்பணுக்கள் உருவாக, இரத்தம் உறைவ தை தடுக்க பெரிதும் பயன்படுகிறது.

Vitamin E

இந்த விட்டமின் இயல்பாகவே கொழுப்பில் கரையக் கூடியது. இதை நாம் இயற்கையாகவே சில உணவுப் பொருட்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் விட்டமின் ஈ பற்றாக்குறையை போக்கி ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விட்டமின் ஈ

விட்டமின் ஈ

விட்டமின் ஈ யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் உடம்பில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் நோய்கள் நம்மை தாக்க வண்ணம் பாதுகாக்கிறது.

அட்டாக்ஸி வராமல் தடுத்தல்

அட்டாக்ஸி வராமல் தடுத்தல்

அட்டாக்ஸியா என்பது மூளை, தசை மற்றும் நரம்பில் ஏற்படும் ஒருவகை ஒருங்கிணைப்பு கோளாறு ஆகும். இந்த நோயை விட்டமின் ஈ சத்துக் கொண்டு சரி செய்யலாம். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் அட்டாக்ஸியா மற்றும் டிஸ்ப்ராக்ஸியா போன்ற ஒருங்கிணைப்புக் கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது.

அல்சைமர் நோய் தடுத்தல்

அல்சைமர் நோய் தடுத்தல்

விட்டமின் ஈ யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து அல்சைமர் மற்றும் பர்கின்சன் நோய் வராமல் தடுக்கிறது.

மாதவிடாய் முன் அறிகுறிகள்

மாதவிடாய் முன் அறிகுறிகள்

புரோலாக்டின் ஹார்மோன் அதிகமான சுரப்பு அல்லது புரோலாக்டின் சமநிலையின்மை காரணமாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அறிகுறிகளை போக்குகிறது. இது அந்தக் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்கிறது.

சிறுநீரக செயல்பாடு மேம்படுதல்

சிறுநீரக செயல்பாடு மேம்படுதல்

உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் விட்டமின் யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

கிரானுலோமா அன்யூலேர்

கிரானுலோமா அன்யூலேர்

கிரானுலோமா அன்யூலேர் என்பது சருமத்தில் அழற்சி காரணமாக சிவந்து போய் கொப்புளங்கள் தோன்றும். அந்த பகுதியில் நீங்கள் விட்டமின் ஈ எண்ணெய்யை தேய்த்து வந்தால் சரி ஆகி விடும். விட்டமின் ஈ ஏகப்பட்ட சரும பிரச்சனைகளை போக்குகிறது

கண் நோயை போக்க

கண் நோயை போக்க

நிலையற்ற மூலக்கூறுகள் கண் திசுக்களை உடைத்து கண் பார்வை திறனை குறைக்கிறது. ஆனால் விட்டமின் ஈயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் கண் பார்வை திறனை அதிகரிப்பதோடு கண் நோய்களையும் சரி செய்கிறது

தசைகளை வலிமையாக்க

தசைகளை வலிமையாக்க

வைட்டமின் ஈ லிப்பிடில் -கரையக்கூடியது, இது நமது உடலில் உள்ள சவ்வில் கரைந்து தசைகளின் வலிமைக்கு உதவுகிறது.

கல்லீரல் செயல்பாடு

கல்லீரல் செயல்பாடு

ஆல்கஹால் அற்ற கொழுப்பு சார்ந்த கல்லீரல் நோய்கள், கல்லீரல் அழற்சி போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. இது கல்லீரல் நொதிகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது மற்றும் அதில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது.

ஆண்களின் கருவுறாமை

ஆண்களின் கருவுறாமை

விட்டமின் ஈ விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது. ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பிலிருந்து செல்களை காத்து ஆண் கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகள் ஆண்மை பிரச்சனைகளை சரி செய்கிறது.

ஹண்டிங்டன் நோய் சிகிச்சை

ஹண்டிங்டன் நோய் சிகிச்சை

விட்டமின் ஈ நரம்பு செல் சவ்வுகளை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து காக்கிறது. இதனால் நரம்பு சம்பந்தமான ஹண்டிங்டன் நோய் வராமல் தடுக்கிறது.

விட்டமின் ஈ உள்ள உணவுகள்

விட்டமின் ஈ உள்ள உணவுகள்

100 கிராம் உணவில் இருக்கும் விட்டமின் ஈ அளவுகள்

வேர்க்கடலை - 8.33 மில்லி கிராம்

சூரிய காந்தி எண்ணெய் - 41.08 மில்லி கிராம்

ஆலிவ் ஆயில் - 14.35 மில்லி கிராம்

கேனோலோ ஆயில் - 17.46 மில்லி கிராம்

பிரக்கோலி - 0.78 மில்லி கிராம்

கீரைகள் - 2.03 மில்லி கிராம்

பச்சை தக்காளி - 0.38 மில்லி கிராம்

டூனா மீன் - 1 மில்லி கிராம்

சாலமன் மீன் - 0.83 மில்லி கிராம்

வறுத்த சூரிய காந்தி விதைகள் - 26.10 மில்லி கிராம்

கிவி பழம் - 1.46 மில்லி கிராம்

காலை உணவு தானியங்கள் - 0.51 மில்லி கிராம்

முட்டையின் மஞ்சள் கரு - 2.58 மில்லி கிராம்

மாம்பழம் - 0.9 மில்லி கிராம்

விட்டமின் ஈ அளவுகள்

விட்டமின் ஈ அளவுகள்

தேசிய சுகாதார நிறுவனங்களின் (என்ஐஎச்) படி ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு தேவையான வைட்டமின் ஈயின் பரிந்துரைக்கப்பட்ட அளவு பின்வருமாறு :

14 வயதிற்கு மேற்பட்டவருக்கு 15 மில்லி கிராம்

பாலூட்டும் தாய்மார்களுக்கு 19 மில்லி கிராம்

6 மாத குழந்தைக்கு 4 மில்லி கிராம்

6 மாதம் முதல் 1 வயது குழந்தைக்கு 5 மில்லி கிராம்

1-3 வயது குழந்தைக்கு 6 மில்லி கிராம்.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

விட்டமின் ஈ என்பது கொழுப்பில் கரையக் கூடியது. எனவே இது நம் கொழுப்பு திசுக்களில் சேகரிக்கப்படுகிறது. இந்த சத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படும்.

வயிற்று போக்கு

தலைவலி

குமட்டல்

சோர்வு

மங்கலான பார்வை

பெண்களின் கருப்பை மற்றும் ஆணுறுப்பு களில் பாதிப்பு

வயிற்று வலி

சரும வடுக்கள் அல்லது அழற்சி போன்றவை ஏற்படும்.

மற்ற மருந்துகளுடன் வினைபுரிதல்

விட்டமின் ஈ கிட்டத்தட்ட 61 மருந்துகளுடன் வினைபுரிகிறது.

எனவே இதை சில உணவு ஆதாரங்களுடன், மருந்துகளுடன் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

எனவே தான் மருத்துவர்கள் இந்த விட்டமின் ஈ மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

வைட்டமின் ஈ இரும்பு சல்பேட், பாலிசாக்கரைடு இரும்பு மற்றும் இரும்பு சுக்ரோஸுடன் வினை புரியக் கூடியது.

வைட்டமின் ஈ அதிக அளவு கீமோதெரபி மருந்துகளுடன் தொடர்பு கொள்ளக் கூடியது.

இது கல்லீரல் தொடர்பான மருந்துகள், இரத்த உறைய காரணமான மருந்துகளுடன் மிதமாக வினைபுரியும்.

விட்டமின் ஈ உடன் மினரல் ஆயிலை பயன்படுத்தாதீர்கள்.

மேலும் ஆல்கஹாலுடன் விட்டமின் ஈ யை எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.

திராட்சை பழங்களுடன் விட்டமின் ஈ வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vitamin E: Health Benefits, Food Sources, Dosage, Side Effects And Precautions

- Vitamin E is one of the essential nutrients required by our body. It keeps the immune system strong, helps in the formation of red blood cells, and prevents the blood from clotting
Desktop Bottom Promotion