Latest Updates
-
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் இருக்குன்னு அர்த்தம்.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்...
Fatty Liver Disease Symptoms: நமது உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பாகும். நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுகளும் முதலில் கல்லீரலுக்கு சென்று, அதன் பின் தான் குடலை அடைகின்றன. இப்படிப்பட்ட கல்லீரலை தாக்கும் மிகவும் மோசமான நோய் தான் கொழுப்பு கல்லீரல் நோய்.
இந்தியாவில் கொழுப்பு கல்லீரல் நோய் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த நோய்க்கு பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். இந்த கொழுப்பு கல்லீரல் நோயானது அதிகப்படியான கொழுப்பு கல்லீரலில் சேரும் போது ஏற்படுகிறது. இப்படி கொழுப்பு சேரும் போது, கல்லீரல் வீக்கமடைவதோடு, சேதமடையும் செய்கின்றன.

இப்படிப்பட்ட கொழுப்பு கல்லீரல் ஆல்கஹால் குடிப்பதால் மட்டுமின்றி, உடல் பருமன், நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய், பக்கவாதம், புற்றுநோய்கள் போன்றவை இருந்தாலும் ஏற்படலாம். இந்த கொழுப்பு கல்லீரல் நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால், பின் அது கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் சிரோசிஸ் மற்றும் கடுமையான வளர்சிதை மாற்ற நோய்கள் போன்ற சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.
இந்த கொழுப்பு கல்லீரல் நோயை கண்டறிய பல சோதனைகள் இருந்தாலும், ஒருசில அறிகுறிகள் மூலம் வீட்டிலேயே எளிதில் கண்டறிய முடியும் என்று ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அதோடு கல்லீரல் கொழுப்பு நோய் இருந்தால் வெளிப்படும் 5 முக்கிய அறிகுறிகளையும் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "கொழுப்பு கல்லீரல் பற்றி கவலைப்படுகிறீர்களா? வீட்டிலேயே 5 அறிகுறிகளைக் கொண்டு கண்டறிய முடியும். அந்த அறிகுறிகள் என்வென்பதை நான் கூறுகிறேன். ஆரம்பகால கண்டறிதல் தடுப்புக்கும் சிறந்த கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமாகும். மேலும் அறிய தொடர்ந்து பாருங்கள்" என்று கூறியிருந்தார்.
1. வயிற்றின் நடுப்பகுதியில் வீக்கம்
வயிற்றின் நடுப்பகுதி மட்டும் வீக்கமடைவதைக் கவனித்தால், அது கொழுப்பு கல்லீரல் நோயின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். அதுவும் இன்சுலின் எதிர்ப்பு கொழுப்பு கல்லீரலுடன் தொடர்பு கொண்டுள்ளது. இதனால் தான் கல்லீரல் கொழுப்பு இருந்தால், வயிற்றுப் பகுதி வீங்கமடைகிறது என்று டாக்டர் சேர்த்தி கூறுகிறார். எனவே உங்களின் வயிற்றின் நடுப்பகுதி திடீரென்று வீங்கியிருப்பதைக் கவனித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. உடல் சோர்வு
தொடர்ச்சியான உடல் சோர்வு அல்லது களைப்பை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்களின் கல்லீரல் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் என்று டாக்டர் சேத்தி கூறுகிறார். எனவ போதுமான ஓய்வு எடுத்தும், காரணமில்லாமல் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
3. வயிற்றில் அசௌகரியம்
வயிற்றுப் பகுதியைச் சுற்றி, அதுவும் வலது விலா எலும்பு கூடுக்கு கீழே மிகுந்த அசௌகரியத்தை சந்தித்தால், கொழுப்பு கல்லீரல் இருக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர் கூறினார். எனவே காரணமில்லாமல் அளவாக சாப்பிட்டாலும் வயிற்றுப் பகுதியில் மிகுந்த அசௌகரியத்தை சந்தித்தால், கல்லீரலில் கொழுப்பு குவிந்து பெரிதாகி வீக்கமடைந்து, அதன் செயல்பாடு குறைந்திருப்பதைக் குறைக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
4. முகப்பரு, சரும கருமை மற்றும் முடி மெலிதல்
முகப்பரு மற்றும் கழுத்து மடிப்புகளில் கருமையான திட்டுக்கள் போன்றவற்றை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது இன்சுலின் எதிர்ப்பின் காரணமாக இருக்கலாம். மேலும் கல்லீரல் மோசமான நிலையில் இருந்தால் தலைமுடி மெலிந்து போவதையும் காணலாம். எனவே இப்படியான அறிகுறிகளை சந்தித்தால், கல்லீரலில் கொழுப்புக்கள் தேங்கி அதன் செயல்பாட்டை மோசமாக பாதித்திருக்கலாம். இந்நிலையில் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
5. குமட்டல் மற்றும் பசியின்மை
திடீரென்று குமட்டலும், எப்போதும் வயிறு நிரம்பிய உணர்வையும் சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர் கூறினார். ஆகவே வரவர உங்களுக்கு பசி எடுக்காமல் இருப்பதை உணர்ந்தாலோ, காரணமில்லாமல் குமட்டல் உணர்வை சந்தித்தாலோ, உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
எனவே நண்பர்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், அவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி விரைவில் சிகிச்சை மேற்கொள்ளத் தொடங்குங்கள். இதனால் கல்லீரல் மோசமாக பாதிக்கப்பட்டு சேதமடைவதைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











