Latest Updates
-
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
தொப்பை குறையணுமா? அப்ப காலையில் எழுந்ததும் இந்த 5 விஷயங்களை செய்யுங்க.. கூறும் அமெரிக்க கோச்..
Weight Loss Tips In Tamil: இன்று பெரும்பாலானோர் அதிகம் கவலைப்படும் ஒரு விஷயம் என்றால் அது தொப்பை தான். அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்புக்கள் தேங்கும் போது, இந்த தொப்பை வருகிறது. இப்படி வயிற்றில் தேங்கும் கொழுப்புக்கள் ஒருவரது அழகை கெடுக்கும் வகையில் தொப்பையை உண்டாக்குவது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கின்றன. அதுவும் டைப்-2 சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பல நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
உடலிலேயே அடிவயிற்றுப் பகுதியில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைப்பது தான் மிகவும் கடினம் என்றாலும், இந்த வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க ஏராளமான விஷயங்களை இதுவரை நீங்கள் பின்பற்றியிருக்கலாம். ஆனால் தொப்பையைக் குறைக்க காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய 5 விஷயங்களை அமெரிக்க ஃபிட்னஸ் கோச் தில்லன் ஸ்வின்னி தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.

1. 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்
காலையில் ஒருவர் எழும் போது நீரிழப்புடன் இருப்போம். அப்போது உடலின் மெட்டபாலிசம் மெதுவாக இருக்கும், பசி அதிகம் எடுக்கும் மற்றும் மிகுந்த சோம்பலை சந்திக்க நேரிடும். ஆனால் காலையில் எழுந்ததும் முதலில் 1/2 லிட்டர் நீரை குடிக்கும் போது, உடல் நீரேற்றமடையத் தொடங்கி, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் கொழுப்பு இழப்பை ஆதரிக்கிறது.
2. வைட்டமின்களை எடுத்து, 20-30 நிமிடம் கார்டியோ நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும்
உங்கள் உடலுக்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் பொறுத்து வைட்டமின்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு இரத்த பரிசோதனை செய்து, ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை பாருங்கள். இப்படி வைட்டமின்களை எடுப்பதன் மூலம் உடலின் ஆற்றல் மேம்டும், கொழுப்பு இழப்பை ஆதரிக்கும். அதைத் தொடர்ந்து கொழுப்பை எரிக்கவும், மனதை தெளிவுபடுத்தவும், மனநிலையை உயர்த்தவும், ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும் உதவும் சூரிய ஒளியைப் பெற 20-30 நிமிடம் வேகமான நடைப்பயிற்சியை தொடரவும்.
3. 30 கி புரோட்டீனை காலை உணவாக எடுக்கவும்
காலை உணவில் புரோட்னை அதிகம் எடுக்கவும். அதுவும் 30 கிராம் புரோட்டீனை காலை உணவாக எடுப்பதன் மூலம், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும், இரத்த சர்க்கரை நிலையாக இருக்கும் மற்றும் உடலுக்கு நிலையான ஆற்றல் கிடைக்கும். அதுவே காலை வேளை உணவின் போது கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரையை எடுத்தால், அது விரைவில் பசியைத் தூண்டும் மற்றும் அதிகளவு உணவை உண்ணத் தூண்டும்.
4. பிடித்த உடற்பயிற்சியை செய்யவும்
மக்களால் ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக நிலைத்தன்மையுடன் செய்ய முடியாமல் போராடுவதற்கு காரணம், அவர்கள் விரும்பாததை செய்வதே ஆகும். அதுவும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தொடர்ந்து ஜிம் செல்ல முடியாமல் இருப்பதற்கு, விரும்பாத உடற்பயிற்சிகளில் தங்களை கட்டாயப்படுத்துவதே ஆகும். உங்கள் உடற்பயிற்சியை நீங்கள் வெறுத்தால், நீங்கள் அதில் ஒட்டிக்கொள்ள மாட்டீர்கள். எனவே உங்களுக்கு எது பிடிக்குமோ அதை தேர்ந்தெடுத்து செய்யுங்கள். மேலும் அவற்றை உங்கள் வழக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்குங்கள்.
5. 5-10 நிமிடம் தியானம் செய்யவும்
மன அழுத்தம் ஒருவரது கார்டிசோல் அளவை அதிகரிக்கும். இந்த கார்டிசோல் அளவு அதிகரித்தால், அது உடலை பருமனாக்கிவிடும். அதுவும் வயிற்றைச் சுற்றி கொழுப்பை அதிகம் தேங்க வைக்கும். தினமும் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடுவதன் மூலம், மன அழுத்தம் குறையும், கவனம் கூர்மையாகும், உணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கும். இந்நிலையில் எவ்வளவு கடினமான சூழ்நிலையை சந்தித்தாலும், உணவுகளை அதிகமாக உண்படு கட்டுப்பட்டு, அதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும். அதற்கு தினமும் காலையில் 5-10 நிமிடம் தியானத்தில் ஈடுபடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications