Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
பெருங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்பவரா நீங்க? உங்களுக்கான சந்தோஷமான செய்திதான் இது...!
பல வகையான மசாலாப் பொருட்களை பயன்படுத்தி உணவின் சுவையை அதிகரிக்கிறோம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவை உடலுக்கு எவ்வளவு நன்மை பயக்கிறது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. பெரும்பாலான சமையலறையில் இதன் மணத்திற்காக உணவில் சேர்த்து வரும் இந்த பொருள், ஆஸ்துமா முதல் மாதவிடாய் கால வலி வரை பலவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
இதன் பயன் அறிந்தபின் இது மணத்திற்காக மற்றும் அல்லாமல் மருந்திற்காகவும் உங்கள் சமையல் அறையில் இனி இடம் பெறப் போகிறது. அந்த அற்புத பொருளின் பெயர் தான் பெருங்காயம்.

பெருங்காயத்தின் நன்மைகள்
ஃபெருலா தாவரத்தின் தண்டுகளிலிருந்து பெறப்படும் இது ஒரு வலுவான கந்தக வாசனையைக் கொண்டுள்ளது. இது இந்திய உணவு வகைகளில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பதோடு, கக்குவான் இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, வயிற்று வலி போன்ற பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இரத்த அழுத்தம்
பெருங்காயத்தில் இயற்கையாக இரத்த உறைவை தடுக்கும் சேர்மங்கள் இருப்பதால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. உங்கள் சமையலில் பெருங்காயத்தை சேர்ப்பது ஆரோக்கியமாக இதயத்தை பராமரிக்க ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
ஆஸ்துமா
அழற்சி எதிர்ப்பு, வைரஸ், மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை பெருங்காயம் கொண்டிருப்பதால், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் வறட்டு இருமல் போன்ற பிற சுவாசக் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது. மென்மையான சுவாச பாதையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. பெருங்காயத்தை வெதுவெதுப்பான நீரில் கரைத்து மூலிகை டீயாக குடிப்பதன் மூலம் நல்ல பலனை பெற முடியும்.
மாதவிடாய் கால வலி
பெருங்காயம் மாதவிடாய் வலியைப் போக்குவதில் சிறந்த பங்காற்றுகிறது, ஏனெனில் இதில் இருக்கும் இயற்கையாக இரத்த உறைவை தடுக்கும் பண்பு, உடலின் எந்தப் பகுதியிலும் தடையின்றி இரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுகிறது. இதன் காரணமாக, இது மாதவிடாய் தொடர்பான முதுகு மற்றும் அடிவயிற்று வலியைக் குறைக்கிறது. இது புரோஜெஸ்ட்டிரோன் தொகுப்பையும் பாதிக்கிறது, இலகுவான இரத்த ஓட்டம் மற்றும் வலி நிவாரணத்தை ஊக்குவிக்கிறது, எனவே உங்கள் மாதவிடாய் கால வலியை கட்டுப்படுத்துகிறது.
தலைவலி
அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள இது இரத்த நாளங்களின் வீக்கத்தைக் குறைத்து, தலைவலியை குணப்படுத்த உதவுகிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை கலந்து, பகலில் பல முறை குடித்து வர தலைவலி குறையும்.
செரிமானம்
பெருங்காயம் நீண்ட காலமாகவே செரிமானத்திற்கு உதவும் சிறப்பான பொருளாக கருதப்படுகிறது. இது இயற்கையாகவே இரைப்பை மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகளான வாய்வு, வீக்கம் மற்றும் பிற செரிமான கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. நீங்கள் சமைக்கும் உணவுகளான குழம்பு, பருப்பு வகைகள், மற்றும் பீன்ஸ் வகை உணவுகளில் சிறிது பெருங்காயத்தை சேர்ப்பது, அதிக அளவில் கார்போஹைடிரேட் கொண்டிருக்கும் உணவுகளையும் செரிக்க உதவுகிறது. உணவிற்கு பின் ஏற்படும் மந்தத்தன்மையையும் கட்டுப்படுத்துகிறது.
புற்றுநோய் தடுப்பு
பெருங்காயத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மார்பக மற்றும் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும் சில புற்றுநோய் செல்கள் வளர்வதையும் பரவுவதையும் பெருங்காயத்தின் பண்புகள் தடுக்கின்றன.
நீரிழிவு
பீனாலிக் அமிலம் மற்றும் டானின்கள் இருப்பதால், பெருங்காயத்தின் சாறில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பான தீர்வை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பெருங்காயத்தின் பல்வேறு நன்மைகள் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் "உணவுகளின் கடவுள்" என அழைக்கப்படுகிறது. இதன் பலன்களைப் பெற உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகிறது. இருப்பினும், நீங்கள் அதை அதிக அளவில் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது ஏப்பம், வயிற்றுப்போக்கு மற்றும் தொண்டை தொற்று போன்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். மேலும், கர்ப்பிணிப் பெண்கள் பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதற்கு முன் தங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிப்பது அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


