Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
உங்ககிட்ட இந்த 7 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க உடம்பு ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்.. உஷார்..
Unhealthy Body Symptoms In Tamil: ஒவ்வொருவருக்குமே நீண்ட நாள் நோயின்றி வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியில் ஈடுபடுவது, குறிப்பிட்ட ஆரோக்கிய பானங்களை அதிகாலையில் அருந்துவது, சரிவிகித உணவுகளை உட்கொள்வது போன்ற பல்வேறு விஷயங்களை பின்பற்றி வருகிறோம்.

எப்போது ஒருவரது உடலில் எவ்வித கோளாறும் ஏற்படாமல் உள்ளதோ, அப்போது அந்நபர் ஆரோக்கியமாக உள்ளார் என்று அர்த்தம். அதுவே குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனைகளை ஒருவர் தொடர்ந்து சந்தித்து வந்தால், அந்நபரின் உடல் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம்.
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? சித்த மருத்துவரான டாக்டர் ஜெயரூபா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் தெரியக்கூடிய 7 அறிகுறிகள் குறித்து பகிர்ந்துள்ளார். உங்களிடம் இந்த அறிகுறிகள் தெரிந்தால், நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. நாக்கில் வெள்ளை படலம்
தூங்கி எழும் போது நாக்கில் வெள்ளைப் படலம் அதிகமாக இருக்கிறதா? அப்படியானால் உடலில் நச்சுக்கள்/கழிவுகள் அதிகம் தேங்க ஆரம்பித்துக் கொண்டிருக்கிறது என்று அர்ததம். இந்நிலையில் உடனே உடலை சுத்தம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று டாக்டர் கூறினார்.
2. உடல் சோர்வு
இரவு 8 மணிநேரம் நன்கு தூங்கி எழுந்த பின்னரும் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? நன்கு தூங்கி எழுந்த பின்னரும் புத்துணர்ச்சி அடையாவிட்டால், நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம் என்று டாக்டர் ரூபா கூறினார்.
3. உணவு உண்ட பின் தூக்கம்
ஒவ்வொரு வேளை உணவு உட்கொண்ட பின்னரும் தூங்க வேண்டுமென்ற எண்ணம் எழுகிறதா? அப்படியானால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு தொடங்க ஆரம்பிக்கிறது என்று அர்த்தம் என்று டாக்டர் கூறினார். அதாவது சர்க்கரை நோய் வரப்போகிறது என்பது தான் இதன் அறிகுறி.
4. வாய் துர்நாற்றம்
பிரஷ் செய்த பின்னரும் வாயில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுகிறதா? அப்படியானால் குடல் சமநிலையில் இல்லை என்று அர்த்தம் என்று கூறினார். இந்நிலையில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.
5. மலச்சிக்கல்
தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழிக்க வேண்டும். அப்படி சரியாக மலம் கழிக்காமல் இருந்தால், உடலில் வாதம், பித்தம் சமநிலையில் இல்லை என்று அர்த்தம் என்று டாக்டர் ஜெயரூபா கூறினார். இந்நிலையில் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, நார்ச்சத்துள்ள உணவுகளையும், காய்கறிகள், பழங்கள் மற்றும் நீரை அதிகம் எடுக்க வேண்டும்.
6. முகப்பரு
முகத்தில் பருக்கள் அடிக்கடி வருகிறதா? மேலும் சருமம் அதிக எண்ணெய் பசையுடனோ அல்லது வறண்டு போயுள்ளதா? அப்படியானால் உடலில் இரத்தம் அசுத்தமாக உள்ளது என்று அர்த்தம் என்று டாக்டர் கூறினார். இந்நிலையில் இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகளை தினசரி உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.
7. உணவு உண்ட பின் மீண்டும் பசி எடுப்பது
உணவு உட்கொண்ட பின் 10 நிமிடத்திலேயே மீண்டும் ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அதுவும் ஜங்க் உணவுகள், இனிப்புகள் போன்றவற்றை சாப்பிட வேண்டுமென்ற ஆவல் எழும். முக்கியமாக இரவு 12 மணிக்கு பிரியாணி சாப்பிட வேண்டுமென்று தோன்றுவது, சாக்லேட் சாப்பிட தோன்றுவது போன்றவை இருந்தால், உடலில் செரிமானத் தீ குறைந்துள்ளது என்று அர்த்தம். அதை சமநிலையில் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


