Latest Updates
-
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம்
நைட் நேரத்தில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப இரத்தக்குழாயில் அடைப்பு இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Blocked Arteries Symptoms In Tamil: தற்போது மாரடைப்பு, திடீர் இதய அடைப்பு போன்றவை ஏற்படுவதற்கு இரத்தக்குழாய்களில் இருக்கும் அடைப்புக்கள் தான் முக்கியமான காரணமாகும். எப்போதும் ஒருவரது இரத்தக்குழாய்களில் ஒரே நாளில் அடைப்பு ஏற்படுவதில்லை. நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தக்குழாய்களில் படியத் தொடங்கி, ஒருகட்டத்தில் இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படி இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை தான் பெருந்தமனி தடிப்பு என்று அழைப்பர்.
பொதுவாக இப்படியான பெருந்தமனி தடிப்பு அமைதியாக ஆளைக் கொல்லக்கூடியது. இந்த பிரச்சனை இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு தெரியப்படுத்தும். ஆனால் அந்த அறிகுறிகள் அனைத்தும் நாம் வழக்கமாக சந்திக்கும் சாதாரண பிரச்சனைகள் போன்று தான் இருக்கும். இதனாலேயே பெரும்பாலானோர் இந்த அறிகுறிகளை புறக்கணித்து நிலைமை மோசமான பின் மருத்துவரை அணுகுகிறார்கள்.

நீங்கள் உங்கள் உயிரைக் காப்பாற்ற நினைத்தால், பின்வரும் அறிகுறிகள் தெரிந்தால் அவற்றைப் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இவை இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதைக் குறிக்கும் அறிகுறிகளாகும். முக்கியமாக இரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால், இரவு நேரத்தில் ஒருசில அறிகுறிகள் தெரியக்கூடும். அந்த அறிகுறிகள் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. திடீர் நெஞ்சு வலி அல்லது இறுக்கம்
இரவு தூங்கும் போது நெஞ்சு பகுதியில் கடுமையான வலி அல்லது இறுக்க உணர்வை சந்தித்தால், உடலில் ஏதோ தீவிர பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். பொதுவாக இந்த வலி அஜீரண கோளாறு அல்லது மன அழுத்தம் போன்றவற்றில் தொடங்கி, தூக்கமின்மையை ஏற்படுத்தினால், இதயத்தால் பிற உறுப்புகளுக்கு போதுமான இரத்தத்தை பம்ப் செய்ய முடியவில்லை என்று அர்த்தம். ஆகவே நெஞ்சு பகுதியில் அசௌகரியத்தை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. சுவாசிப்பதில் சிரமம்
இரவு தூங்கும் போது சுவாசிப்பதில் ஒருவித சிரமத்தை சந்திக்கிறீர்களா? அதுவும் தூங்கும் போது மட்டும் சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்கிறீர்களா? அப்படியானால் இரத்த நாளங்களில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம். எப்போது உடலில் இரத்த ஓட்டம் பலவீனமாக உள்ளதோ அல்லது இதயத்தால் போதுமான இரத்தத்தை அழுத்த முடியாமல் போகிறதோ, அப்போது இரவு நேரத்தில் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
3. கை, கால்கள் மரத்துப் போவது அல்லது கூசுவது
எப்போது இரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதோ, அப்போது கைகள் மற்றும் கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவு குறைந்து, அதன் விளைவாக கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போகும் அல்லது கூசும். அதுவும் இப்படியான கூச்ச உணர்வை இரவு நேரத்தில் அதிகமாக சந்திக்க நேரிட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. குளிர்ச்சியான கைகள் மற்றும் கால்கள்
உங்கள் கைகள் மற்றும் கால்கள் இரவு நேரத்தில் மிகவும் குளிர்ச்சியாக உள்ளதா? அப்படியானால் இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பால் உடலில் இரத்த ஓட்டம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். எனவே வழக்கத்திற்கு மாறாக உங்கள் கைகள் மற்றும் கால்கள் குளிர்ச்சியாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. சீரற்ற இதயத்துடிப்பு
இரவு நேரத்தில் ஒருவித படபடப்பு அல்லது பதட்டமான உணர்வு ஏற்படுகிறதா? எப்போது இதயத்தில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதோ, அதன் விளைவாக இரவு வேளையில் சீரற்ற இதயத் துடிப்பை சந்திக்க நேரிடும். இப்படியான அறிகுறி தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
6. மிகுந்த உடல் சோர்வு
மிகுந்த உடல் சோர்வு அல்லது பலவீனத்தை சந்திக்கிறீர்களா? எப்போது இதயத்தில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதோ, அப்போது உடலின் தசைகள் மற்றும் பிற உறுப்புகளுக்கு கொண்டு செல்லும் ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்களின் அளவு குறைந்து, அதன் விளைவாக மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடுகிறது. அதுவும் இரவு நல்ல தூக்கத்தை மேற்கொண்ட பின்னரும் இப்படியான உடல் சோர்வு இருந்தால், இரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது.
7. கை, கால்களில் வீக்கம்
கைகள் மற்றும் கால்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா? அதுவும் இரவு நேரத்தில் கால்களில் அதிக வீக்கம் ஏற்படுகிறதா? கை, கால் வீக்கம் பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறிகளுள் ஒன்றாக இருக்கலாம். இருப்பினும் இந்த அறிகுறியானது இரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தாலும் தெரியக்கூடும். ஆகவே அடிக்கடி இப்படி கை, கால்களில் வீக்கத்தை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, உடனே சிகிச்சை மேற்கொள்ளத் தொடங்குங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











