Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஆண்களே! இந்த 7 அறிகுறிகளை லேசா எடுத்துக்காதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க...
Symptoms Men Should Not Ignore: பொதுவாக பெண்களை விட ஆண்கள் தாங்கள் சந்திக்கும் பெரும்பாலான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மருத்துவரை சந்திப்பதில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே ஆண்கள் மருத்துவரை சந்திப்பார்கள். ஏனெனில் பெண்களை விட ஆண்களுக்கு தங்கள் ஆரோக்கியத்தின் மீதான அக்கறை சற்று குறைவு.
அதோடு பெரும்பாலான ஆண்கள் இயற்கை வழியில் தங்கள் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நினைப்பார்கள். ஆனால் அனைத்து பிரச்சனைகளையுமே மருத்துவரிடம் செல்லாமலேயே சரிசெய்துவிட முடியாது அல்லவா?

குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஆண்கள் ஒருபோதும் லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். இப்போது எந்த அறிகுறிகளை ஆண்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதைக் காண்போம்.
1. மார்பகங்கள் வளர்வது
பெண்களைப் போன்றே சில ஆண்களுக்கு மார்பகங்கள் பெரிதாக இருக்கும். இப்படி ஒரு ஆணுக்கு மார்பகங்கள் பெரிதாக இருந்தால், அது 3 காரணங்களால் வரலாம். அதில் ஒன்று அதிகப்படியான உடல் பருமன் அல்லது அதிகளவு பீர் குடிப்பது. இந்த காரணத்தினால் வரும் மார்பகங்களை உடல் எடையைக் குறைப்பது அல்லது பீர் குடிப்பதை நிறுத்துவதன் மூலம் எளிதில் கட்டுப்படுத்தலாம்.
இரண்டாவதாக கைனகோமாஸ்டியா. இதற்கு நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது உடலில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஆகிய ஹார்மோன் சமநிலையின்மையால் வரக்கூடியது. ஈஸ்ட்ரோஜன் தான் மார்பகங்கள் பெரிதாக காரணம். இந்த ஈஸ்ட்ரோஜென் ஆண்களின் உடலில் அதிகமாக சுரந்தால், இந்நிலை ஏற்படலாம்.
மூன்றாவதாக, கல்லீரல் நோய் இருந்தால், இம்மாதிரி வர வாய்ப்புள்ளது. கல்லீரலானது சேதமடையும் போது, அது உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, கைனகோமாஸ்டியாவை ஏற்படுத்தும். இருப்பினும் வயதான ஆண்களுக்கு இப்படி மார்பகங்கள் பெரிதாவது, டெஸ்டிகல்களின் (testicles) மோசமான செயல்பாட்டைக் குறிக்கலாம்.
2. இரவு நேரத்தில் அதிகமாக சிறுநீர் கழிப்பது
ஒருவர் சிறுநீர் கழிக்க செல்லும் எண்ணிக்கையும் ஒருவரது ஆரோக்கியத்தை பற்றி வெளிப்படுத்தும் என்பது தெரியுமா? அதுவும் ஆண்கள் இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழித்தாலோ அல்லது கட்டுப்படுத்த முடியாத அளவில் அவசர நிலையை சந்தித்தாலோ அல்லது கழிவறைக்கு செல்லும் முன்பே சிறுநீர் கசிவு ஏற்பட்டாலோ, புரோஸ்டேட்டில் கடுமையான பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.
அதுவும் இம்மாதிரியான அறிகுறி புரோஸ்டேட் புற்றுநோய் அல்லது விறை வீக்கத்தைக் குறிக்கலாம். எனவே இந்த அறிகுறியை ஆண்கள் சந்தித்தால், அதைப் பற்றி மருத்துவரிடம் தெரிவித்து, தேவையான பரிசோதனைகளை செய்து பார்க்க வேண்டும்.
3. விதைப்பையில் கட்டி
ஆண்களுக்கு விதைப்பையில் கட்டிகள் அல்லது வீக்கம் ஏற்படுவது சாதாரணம் தான். பெரும்பாலான சமயங்களில், இவை எவ்வித சிகிச்சையும் மேற்கொள்ளாமல் தானாவே மறைந்துவிடும். ஆனால், விதைப்பையில் ஏற்படும் கட்டிகளானது டெஸ்டிகுலர் புற்றுநோயையும் குறிக்கலாம். அதுவும் இந்த கட்டிகளானது போகாமல், வலியையும் ஏற்படுத்தும். இம்மாதிரியான அறிகுறியை ஆண்கள் அனுபவித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
4. வாசனை உணர்வு குறைவு
ஒரு ஆண் தனது வாசனை உணர்வு குறைவாக இருப்பதை உணர்ந்தால், அந்த ஆணுக்கு கருவுறுத்தல் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அதாவது, ஒரு ஆணின் விதைப்பை சரியாக செயல்படாமல் இருந்தால், உற்பத்தி செய்யப்படும் ஆண் ஹார்மோன்களும் குறைவாக இருக்கும். இந்நிலையை மருத்துவ ரீதியாக அனோஸ்மியா என்று கூறுவர்.
5. பாலுணர்ச்சி குறைவு
வயது அதிகரிக்கும் போது படுக்கையின் ஆண்களின் செயல்திறனைத் தக்க வைத்துக் கொள்வது என்பது கடினமாக இருக்கும். ஆய்வு ஒன்றிலும், 40 வயதிற்குட்பட்ட 4 ஆண்களில் ஒருவருக்கு விறைத்தன்மை குறைபாடு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதற்கு வயது ஒரு காரணமாக இருந்தாலும், அதைத் தவிர பிற காரணிகளும் ஒரு ஆணின் பாலியல் செயல்திறனை பாதிக்கின்றன. அதில் மன அழுத்தம், பதட்டம் மற்றும் சர்க்கரை நோய், இதய நோய் போன்ற தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளும் அடங்கும். எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை ஆண்கள் சந்திக்க வேண்டும்.
6. ஆண்குறி வடிவத்தில் மாற்றம்
பெரும்பாலான ஆண்கள் தங்களின் இனப்பெருக்க உறுப்பில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு மருத்துவரிடம் செல்ல கூச்சப்படுவார்கள். ஆனால் இப்படி கூச்சப்பட்டால், அது மோசமான நிலைமைக்கு தள்ளிவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
ஒரு ஆணின் ஆண்குறி விறைப்பு நிலையில் லேசாக வளைந்திருப்பது நல்லது தான். ஆனால் அந்த விறைப்பு நிலையில் ஆண்குறியின் வடிவத்தில் பெரிய மாற்றம், வலி அல்லது பிற பிரச்சனைகளை சந்தித்தால், அது பெய்ரோனி நோயாக இருக்க வாய்ப்புள்ளது.
பெய்ரோனி நோய் என்பது ஆண்குறியின் மேல் கொலாஜனின் ப்ளேக் உருவாவதைக் குறிக்கிறது. அதோடு, இந்நோய் இருந்தால் ஆண்குறி மிகவும் வளைந்து இருப்பதோடு, உடலுறவின் போது கடுமையான வலியை ஏற்படுத்தும். ஆனால் இந்த நிலை சில மாதங்களில் தானாக சரியாகிவிடும்.
ஒருவேளை இது தீவிரமாக இருந்தால், பாலியல் சிரமங்களையும், தாங்க முடியாத அளவில் தீவிரமான வலியையும் சந்திக்கக்கூடும். இந்நிலையில் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
7. பெருவிரல் வலி
கால் பெருவிரலில் கடுமையான வலியை சந்தித்தால், அது கீல்வாதமாக இருக்கலாம். கீல்வாதம் ஆண், பெண் என இருபாலரையும் தாக்கினாலும், பெண்களை விட ஆண்கள் மூன்று மடங்கு அதிகமாக கீல்வாதத்தால் பாதிக்கப்படுகிறார். அதுவும் வயது அதிகரிக்கும் போது தான் இப்பிரச்சனையால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
கீல்வாதம் என்பது ஒரு வகையான ஆர்த்ரிடிஸ்/மூட்டு வலி. இது மூட்டு இணைப்புக்களில் வலியை ஏற்படுத்தும். குறிப்பாக கால் பெருவிரலில் கடுமையான வலியை உண்டாக்கும். இந்நிலையானது யூரிக் அமில தேக்கத்தால் ஏற்படுகிறது. இது உடலின் எந்த மூட்டு பகுதிகளிலும் ஏற்படலாம்.
இந்த பிரச்சனையைக் கொண்டிருந்தால், கடுமையாக வலியை சந்திக்கக்கூடும். இது தீவிரமான நிலையில், மீள முடியாத அளவிற்கு மூட்டு சேதத்தை கூட ஏற்படுத்தும். எனவே கால் பெருவிரவில் வலியை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











