Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
கொசுக்கள் ஏன் குறிப்பிட்ட நபர்களை மட்டும் குறி வைத்து கடிக்கிறது என்று தெரியுமா?
Why Mosquitoes Bite Some People: மழைக்காலம் என்பதால் வீட்டைச் சுற்றி ஆங்காங்கு நீர் தேங்கியிருக்கும். இதனால் கொசுக்கள் அந்நீரில் இனப்பெருக்கம் செய்து, படையெடுத்து மனிதர்களைத் தாக்கும் கொசுக்களில் ஆண் கொசுக்கள் பூக்களில் இருந்து தேனை உட்கொள்கின்றன. அதே சமயம் பெண் கொசுக்கள் மனிதர்களின் இரத்தத்தை உணவாக உட்கொள்கின்றன.
மனித இரத்தத்தில் இருக்கும் குறிப்பிட்ட வகையான புரோட்டீன்கள் மூலம் கொசுக்கள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன. கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது, கொசுவின் எச்சில் மனித இரத்தத்தில் உட்செலுத்தப்படுகிறது. இப்படி உட்செலுத்துவதனால் தான் கொசுக்கள் மூலம், மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜிக்கா வைரஸ் போன்ற நோய்த்தொற்றுக்கள் ஏற்படுகின்றன.

இவற்றில் சில வகையான நோய்த்தொற்றுகள் பெரிய தொற்றுநோயை தூண்டக்கூடிய வகையில் ஆபத்தானவை. ஏன் இந்த கொசுக்களினால் பரவும் தொற்றுநோய்களால் மில்லியன் கணக்கானோர் இறந்துள்ளனர். இவ்வளவு ஆபத்தான கொசுக்கள் ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டும் அதிகம் கடிப்பதை நீங்கள் காணலாம். இப்படி கொசுக்கள் ஒரு சிலரை மட்டும் அதிகம் கடிக்க எதுவெல்லாம் காரணமாக இருக்கக்கூடும் என்பதைக் காண்போம்.
1. உடைகள்
கொசுக்கள் வெளிர் நிற ஆடைகளை அணிந்திருப்பவர்களை விட அடர் நிற ஆடைகளை அணிந்திருப்பவர்களையே அதிகம் கடிக்கும். அதோடு, கை, கால்கள் நன்கு தெரியும்படியான ஆடைகளை அணியும் போது, கொசுக்கள் இன்னும் அதிகமாக கடிக்கும். கொசுக்களில் ஏடிஸ் வகை கொசுக்கள் தான் டெங்கு ஏற்பட காரணமானவை. இந்த வகை கொசுக்கள் பெரும்பாலும் கால்களை கடிக்காமல் கைகளையே கடிக்கும். அதேப் போல் மலேரியாவை உண்டாக்கும் அனோபிலிஸ் வகை கொசுக்கள் கால்களையே குறி வைத்து கடிக்கும். எனவே மழைக்காலத்தில் முழுக்கை மற்றும் முழுக்கால் ஆடைகளை அணியுங்கள் மற்றும் வெளிர் நிற ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியுங்கள்.
2. இரத்த வகை
கொசுக்கள் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த பிரிவினரை அதிகம் கடிப்பதாக போதுமான அறிவியல் தரவுகள் உள்ளன. குறிப்பாக மற்ற இரத்த பிரிவினருடன் ஒப்பிடுகையில் 'O' வகை இரத்த பிரிவினரை கொசுக்கள் அதிகமாக கடிக்கும். ஏனெனில் இந்த வகையில் இரத்த பிரிவினரின் தோலில் கொசுக்களை ஈர்க்கும் கெமிக்கல்கள் அதிகம் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது.
3. உடல் வெப்பம்
பெண் கொசுக்களில் உள்ள ஆண்டெனாக்கள் வெப்ப உணர்திறனைக் கொண்டவை. இந்த பெண் கொசுக்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவான வெப்பநிலையை எளிதில் கண்டறிய முடியும். எனவே சூடான உடல் வெப்பநிலையைக் கொண்டவர்களை கொசுக்களை அதிகம் கடிக்கும் வாய்ப்புள்ளது. அதோடு உடல் பருமன் உள்ளவர்கள் அல்லது அதிக மெட்டபாலிசத்தைக் கொண்டவர்களை பெண் கொசுக்கள் அதிகம் கடிக்கும்.
4. கார்பன்-டை-ஆக்ஸைடை அதிகம் வெளியிடுபவர்
கொசுக்களின் ஆண்டெனாக்கள் காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவிற்கும் உணர்திறன் கொண்டவை. எனவே அதிக மெட்டபாலிசம் கொண்டவர்கள் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடை அதிகம் வெளியிடுபவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கும். அதாவது, வேகமாக மூச்சுவிடுபவர்கள், அதிகமாக வியர்ப்பவர்கள் போன்றோரை கொசுக்கள் அதிகமாக கடிக்கும்.
5. வியர்வை நாற்றம்
ஒவ்வொருவரின் உடலிலும் சில பாக்டீரியாக்கள் உள்ளன. இந்த பாக்டீரியாக்கள் நமது உடலை பாதுகாக்கின்றன. அதேப் போல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வியர்வையை உற்பத்தி செய்கிறார்கள். இந்த வியர்வை ஒருவரின் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் இணைந்து நாற்றத்தை உற்பத்தி செய்கிறது. இந்த நாற்றம் தான் கொசுக்களை ஈர்க்கும் வாய்ப்புக்களை அதிகரிக்கின்றன.
6. ஆல்கஹால் அருந்துவது
மது அருந்துவதனால், உடல் வெப்பம் அதிகரிப்பதாடு, உடலின் மெட்டபாலிசமும், வியர்வையும் அதிகரிக்கிறது. இவை அனைத்தும் பெண் கொசுக்களை ஈர்க்கும் காரணிகளாகும். எனவே கொசுக்கள் கடிக்காமல் இருக்க வேண்டுமானால் மது அருந்துவதை நிறுத்துங்கள். இப்படி நிறுத்துவதன் மூலம் கொசுக்கள் கடிப்பது தடுக்கப்படுவதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications