Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
உங்களுக்கு மாரடைப்பு வராமல் இருக்கணுமா? அப்ப இந்த பானங்களை அடிக்கடி நைட் குடிங்க...
Cholesterol Lowering Drinks In Tamil: கொலஸ்ட்ரால் என்பது நமது இரத்தத்தில் இருக்கும் மெழுகு போன்ற பிசுபிசுப்பான பொருள். இது உடலில் புதிய செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது. இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாகும் போது, அது இரத்தக்குழாய்களில் அப்படியே படித்து ப்ளேக்குகளை உருவாக்கி, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்து, மாரடைப்பு, பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு போன்ற தீவிரமான பிரச்சனைகளை தூண்டி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
தற்போதைய நவீன உலகில் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் நம்மைச் சுற்றி அதிகம் உள்ளன. இந்த உணவுகளில் கொலஸ்ட்ரால் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது, நாளடைவில் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்து, ஒரு கட்டத்தில் மாரடைப்பின் அபாயத்தை அதிகரித்துவிடுகிறது.

ஆனால் நமது உடலில் உள்ள அதிகமான கொலஸ்ட்ராலைக் கரைக்கும் நிறைய பானங்கள் உள்ளன. இந்த பானங்களை இரவு நேரத்தில் குடித்து வந்தால், கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு வருவதைத் தடுக்கலாம். இப்போது அந்த பானங்கள் எவையென்பதைக் காண்போம்.
1. க்ரீன் டீ
தினமும் ஒரு கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால் இதய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஏனெனில் க்ரீன் டீயில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. அதுவும் இந்த க்ரீன் டீயை இரவு தூங்கும முன் குடிப்பது இன்னமும் நல்லது. இப்படி குடிப்பதன் மூலம், உடல் ரிலாக்ஸாக இருக்கும், நல்ல தூக்கம் கிடைக்கும் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
2. பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் ஜூஸ் இயற்கையாகவே கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஏனெனில் இதில் அதிக நார்ச்சத்துடன் நைட்ரேட்டும் உள்ளன. இவை இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் இரத்தம் உறையும் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே இந்த பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வர இதய ஆரோக்கியமும் மேம்படும், மாரடைப்பின் அபாயமும் குறையும்.
3. மஞ்சள் பால்
மஞ்சள் கலந்த பால் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியது என்பதை அனைவருமே அறிவோம். அதுவும் இந்த பாலில் சேர்க்கப்படும் மஞ்சளில் குர்குமின் என்னும் பொருள் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, தமனிகளில் ப்ளேக்குகளின் அபாயத்தைக் குறைக்கும். அதுவும் இந்த மஞ்சள் பாலை தினமும் இரவு தூங்கும் முன் குடிப்பது நல்லது. இதனால் கொலஸ்ட்ரால் பராமரிக்கப்படுவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
4. செம்பருத்தி டீ
செம்பருத்திப்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த செம்பருத்திப் பூவைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கும் போது, அது இரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. அதுவும் இதில் உள்ள ஆக்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தக்குழாய்களில் ப்ளேக்குகள் படிவதைக் குறைக்கிறது. எனவே சிறப்பான பலனைப் பெற இந்த டீயை இரவு தூங்கும் முன் குடியுங்கள்.
5. கிரான்பெர்ரி ஜூஸ்
கிரான்பெர்ரி ஜூஸ் மிகவும் சுவையானது மட்டுமின்றி, கொலஸ்ட்ராலையும் குறைக்கும். இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை உயர்த்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுவும் இந்த கிரான்பெர்ரி ஜூஸை இரவு தூங்கும் முன் குடியுங்கள்.
6. பாதாம் பால்
பாதாம் பாலில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. எனவே மாரடைப்பு வரக்கூடாது, இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், பாதாம் பாலை இரவு தூங்கும் முன் குடித்து வாருங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்கள் அனைத்தும் இதய நோய்க்கு எதிராக போராட தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளன. இருப்பினும் இந்த பானங்களை தினசரி உணவில் சேர்க்கும் முன், மருத்துவரிடம் ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications