உங்ககிட்ட இந்த அறிகுறிலாம் தெரியுதா? அப்ப உங்க உடம்புல உப்பு அதிகமா இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!

Symptoms Of Eating Too Much Salt: நாம் உண்ணும் உணவின் சுவையை அதிகரிப்பதில் உப்பு முக்கிய பங்கை வகிக்கிறது. இப்படிப்பட்ட உப்பு நமது உடலின் திரவ நிலையை சமநிலையில் பராமரிக்கவும், நரம்புகளின் செயல்பாட்டையு ஆதரிக்கிறது. ஆனால் இந்த உப்பை ஒருவர் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவில் கவனமாக இருக்க வேண்டும்.

எப்படி அதிகப்படியான சர்க்கரை உடலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதற்கு இணையாக அதிகப்படியான உப்பும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். சரி, நாம் அதிகமாக உப்பை உட்கொண்டு வருகிறோம் என்பதை எப்படி அறிவது என்று நீங்கள் கேட்கலாம்.

Top 5 Warning Signs And Symptoms Of Consuming Excessive Salt In Tamil

ஒருவர் தங்களது உணவில் உப்பை அதிகம் எடுத்து வந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு வெளிப்படுத்தும். அந்த அறிகுறிகளை கவனித்து வந்தாலே எளிதில் புரிந்து கொள்ளலாம். இப்போது உடலில் உப்பு அதிகமாக இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.

1. அதிகப்படியான தாகம்

உடலில் உப்பு அதிகமானால் அது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். உடலில் இருந்து நீர் அதிகம் வெளியேறும் போது, அது அதிகப்படியான தாகத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக தாகத்தை அனுபவித்தால், உங்கள் உணவில் நீங்கள் அதிக உப்பை சேர்க்கிறீர்கள் என்று அர்த்தம்.

2. கால், கை வீக்கம்

உணவில் உப்பை அதிகமாக சேர்க்கும் போது, அது உடலில் திரவங்களை தக்க வைக்கும். இதன் விளைவாக கணுக்கால், கால்கள் மற்றும் கைகளில் வீக்கத்தை உண்டாக்கும். எப்போது ஒருவர் சோடியத்தை அதிகமாக எடுக்கிறாரோ, அப்போது அந்நபர் கால்கள் மற்றும் கைகளில் அடிக்கடி வீக்கத்தை சந்திக்க நேரிடும். இப்படி உங்களுக்கு அடிக்கடி கால் வீக்கம் ஏற்படுமாயின், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

3. உயர் இரத்த அழுத்தம்

அதிகளவு உப்பை உட்கொள்வதால் சந்திக்கும் ஆபத்துக்களில் ஒன்று தான் உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர் ஹென்சன். உப்பில் உள்ள சோடியமானது உடலில் நீரை தக்க வைக்கிறது மற்றும் இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கிறது. இதன் விளைவாக இரத்த அழுத்தம் அதிகரித்து, இறுதியாக மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

4. சிறுநீரக பிரச்சனைகள்

அதிகப்படியான உப்பு சிறுநீரகங்களில் அழுத்தத்தை அதிகரித்து தீங்கு விளைவிக்கிறது. காலப்போக்கில் இது சிறுநீரக பிரச்சனைகளையும் உண்டாக்கும். நமது உடலில் சிறுநீரகங்களானது சோடியத்தின் அளவை சீராக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் இரத்தத்தில் சோடியத்தின் அளவு அதிகமாகும் போது, சிறுநீரகங்களில் நச்சுக்கள் அதிகரித்து, சிறுநீரக செயல்பாட்டை சேதப்படுத்துவதோடு, சிறுநீரக கற்கள் மற்றும் திரவ சமநிலையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

5. செரிமான பிரச்சனைகள்

அதிகப்படியான உப்பு செரிமான மண்டலத்தை பாதித்து, வயிற்று உப்புசம், வாயு மற்றும் வயிற்று அசௌகரியம் போன்றவற்றை அதிகம் சந்திக்க வைக்கும். அதுவும் நீங்கள் ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னர் செரிமான பிரச்சனைகளை சந்தித்தால், நீங்கள் அதிக உப்பை உட்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

மனித உடலுக்கு எவ்வளவு உப்பு தேவை?

மனித உடல் சிறப்பாக செயல்பட சிறிய அளவிலான சோடியம் அல்லது உப்பு போதுமானது. ஒருவருக்கு தேவையான உப்பின் அளவானது வயது, பாலினம், ஆரோக்கியம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். உடல்நல நிபுணர்களின் கூற்றுப்படி, பெரும்பாலான பெரியவர்கள் தினமும் 2300 மிகி-க்கும் அதிகமான உப்பை எடுக்கக்கூடாது. ஒருவேளை உயர் இரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய பிரச்சனையைக் கொண்டிருந்தால், மிகவும் குறைவான அளவில் உப்பை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion