Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
உங்க கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றணுமா? அப்ப இந்த காய்கறிகளில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
நமது சமையலறைகளில் வேர் காய்கறிகள் எப்போதும் முக்கிய இடத்தை பெறுகின்றன. அவை சூடான குழம்பு மற்றும் பொரியல்கள் முதல் பண்டிகை கால இனிப்பு உணவுகள் வரை அனைத்திலும் இடம் பெறுகின்றன. இவற்றில் அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்து இருகின்றன. ஆனால் இந்த வேர் காய்கறிகளில் சில கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று.
கல்லீரலில் இருக்கும் நச்சுகளை அகற்றவும், ஹார்மோன்களை சமநிலையில் வைக்கவும், கொழுப்புகளை உடைத்து கரைக்கவும் இவை பெரிதும் உதவுகின்றன. சில வேர் காய்கறிகள் இந்த பணிகளை சிறப்பாக செய்யும் ஆற்றலை கொண்டிருக்கின்றன.

இவை நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டிருப்பதோடு கல்லீரலை சுத்தப்படுத்தி வலுப்படுத்தும் இயற்கை சேர்மங்களையும் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் சமைக்க எளிதாக இருப்பதால் தினசரி உணவிலும் அடிக்கடி இடம்பெறுகின்றன. கல்லீரலை சுத்தப்படுத்தும் சிறந்த வேர் காய்கறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பீட்ரூட்
பீட்ரூட் தனது வண்ணத்திற்காக நம்மை ஈர்த்து சாப்பிட தூண்டுவது மட்டுமல்லாது, மிகவும் ஆரோக்கியமான ஒன்று. பீட்ரூட்டில் பீட்டாலைன்கள் மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்திருப்பதால் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, கல்லீரல் உருவாகும் நச்சுகளை நீக்க உதவும் நொதிகளை தூண்ட உதவுகின்றன.
இது பித்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகளை கொண்டிருப்பதால் கொழுப்புகளை எளிதாக ஜீரணிக்கவும் கழிவுகளை அகற்றவும் மிகவும் முக்கியமான ஒன்றாகிறது. குழம்பில் கலந்தாலும், சூப்களில் கரைத்தாலும், அல்லது தயிருடன் சேர்த்தாலும், கல்லீரல் பராமரிப்புக்கு ஏற்ற சிறந்த தேர்வாக இருக்கும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
இது இயற்கையாகவே இனிப்பு மற்றும் அற்புதமான சுவையை கொண்டது. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து இருக்கின்றன. இந்த சத்துக்கள் அனைத்தும் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு எளிதாக ஜீரணம் ஆக கூடிய காய்கறியாகும். இதை பொரியல் செய்தோ, வேக வைத்தோ அல்லது உங்கள் விருப்பப்படி உணவில் சேர்த்தோ எடுத்து கொள்ளலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றி பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
மஞ்சள்
நாம் சமைக்கும் பெரும்பாலான உணவு வகைகளில் மஞ்சள் எப்போதும் இடம்பெற தவறுவதில்லை. ஆனால் அதை முடிந்தவரை கிழங்காக அரைத்து பயன்படுத்துவது சிறந்தது. ஆனால் மஞ்சள் கிழங்கு ஆண்டு முழுவதும் கிடைப்பது சற்று கடினம் தான்.
மஞ்சளில் குர்குமின் என்ற சேர்மம் இருக்கிறது. இது கல்லீரலை பாதுகாப்பாக வைக்க நச்சுகளை வெளியேற்றவும் மீளுருவாக்கத்தை ஊக்குவிக்கவும் உதவ கூடிய சக்திவாய்ந்த ஒன்று. மஞ்சள் கிழங்குகளை அரைத்து வெதுவெதுப்பான தண்ணீருடன் எடுத்து கொள்ளலாம். இதை நிறத்திற்காக சூப் மற்றும் பருப்பு வகைகளை சமைக்கும் போது சேர்க்கலாம்.
முள்ளங்கி
முள்ளங்கியில் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. சர்க்கரை நோயளிகள் சேர்த்து கொள்ள கூடிய ஒரே வேர் காய்கறி. இது வயிறு வீக்கத்தை குறைத்து கல்லீரல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதன் நொதிகள் பித்த ஓட்டத்தை அதிகரிப்பதால் வயிற்றின் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சியையும் நீரற்ற பண்பையும் தருகிறது. இதை சாலட்களில் பச்சையாகவும் குழம்பு வகைகளிலும் மற்றும் பொறியலாகவும் சமைக்கப்படுகிறது.
கேரட்
இது பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு பிடித்த ஒரு வேர் காய்கறி. இதில் சக்திவாய்ந்த குளுட்டோதயோன் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்து இருக்கின்றன. இவை கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகின்றன.
கேரட்டின் அற்புதமான ஆரஞ்சு வண்ணம், மொறுமொறுப்பான தன்மை மற்றும் லேசான இனிப்பு தன்மையை கொண்டிருக்கிறது. இதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ எப்படி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். இதை பட்டாணி மற்றும் பீன்ஸ் சேர்த்து உப்பமா உடன் எடுக்கலாம் அல்லது துண்டுகளாக நறுக்கி அரைத்து கேரட் ஜூஸ்ஸாகவும் குடிக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
