Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
மாரடைப்பை தூண்டும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கணுமா? இந்த சிவப்பு நிற பானங்களை அடிக்கடி குடிங்க..
Cholesterol Reducing Drinks In Tamil: நமது உடலுக்கு கொலஸ்ட்ரால் மிகவும் முக்கியமான பொருள். சொல்லப்போனால் நமது கல்லீரலே உடலுக்கு வேண்டிய கொலஸ்ட்ராலை தினமும் உற்பத்தி செய்யும். இது தவிர நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளின் மூலமும் உடலினுள் கொலஸ்ட்ரால் சேரும்.
இந்நிலையில் எந்த ஒரு உடலுழைப்பும் இல்லாத வாழ்க்கை முறையை மேற்கொண்டு வந்தால், பின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரித்து, நாளடைவில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்க மருந்து மாத்திரைகள் இருந்தாலும், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
அதுவும் ஒருசில சிவப்பு நிற பானங்களை தினசரி டயட்டில் சேர்த்து வந்தால், அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் சத்துக்கள் இரத்த கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். இப்போது உடலில் மாரடைப்பைத் தூண்டும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சில சிவப்பு நிற பானங்களைக் காண்போம்.
1. பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் ஜூஸில் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் பண்புகள் உள்ளன. முக்கியமாக இதில் உள்ள நைட்ரேட்டுகள், இரத்த குழாய்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதன் விளைவாக இரத்த அழுத்தம் குறையும். மேலும் ஆய்வுகளிலும் பீட்ரூட் இரத்த கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரிக்க உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2. மாதுளை ஜூஸ்
சிவப்பு நிற பானங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று தான் மாதுளை ஜூஸ் இது கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் உதவி புரியக்கூடியது. ஏனெனில் இதில் பாலிஃபீனால்கள் மற்றும் அந்தோசையனின்கள் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. எனவே இந்த மாதுளை ஜூஸை குடித்து வந்தால், தமனிகளில் ப்ளேக்குகள் படிவது தடுக்கப்படுவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும். மேலும் மாதுளை ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் மாதுளை ஜூஸை அடிக்கடி குடித்து வாருங்கள்.
3. சிவப்பு திராட்சை ஜூஸ்
சிவப்பு திராட்சையில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான ரெஸ்வெராட்ரால் அதிகமாக உள்ளன. இது இரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை மேம்படுத்தும். ஒருவர் சிவப்பு நிற திராட்சை ஜூஸை வழக்கமாக குடித்து வந்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். எனவே கொலஸ்ட்ராலை எளிதில் குறைக்க நினைத்தால், சிவப்பு திராட்சை ஜூஸை குடித்து வாருங்கள்.
4. செம்பருத்தி டீ
செம்பருத்தி ஒரு அழகான மலர். இந்த சிவப்பு நிற செம்பருத்தியைக் கொண்டு தயாரிக்கப்படும் டீ இதயத்திற்கு மிகவும் நல்லது. ஆய்வுகளில் கூட, செம்பருத்தி டீ உடலில் கெட்ட மற்றும் ட்ரைகிளிசரைடுகள் போன்றவற்றைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டீயில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இந்த செம்பருத்தி டீயை அடிக்கடி குடித்து வாருங்கள்.
5. கிரான்பெர்ரி ஜூஸ்
பெர்ரி பழங்களின் குடும்பத்தை சேர்ந்த கிரான்பெர்ரி மிகச்சிறிய அளவில் இருக்கும். அளவில் சிறியதாக இருந்தாலும், ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது. முக்கியமாக இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கிரான்பெர்ரி ஜூஸில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்குஙம் போது, அது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும். மேலும் இந்த ஜூஸ் இரத்த குழாய்களில் எந்த சேதமும் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிக்கக்கூடியது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications