Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா?
வெள்ளரிக்காயை இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப வருத்தப்படுவீங்க...
Foods You Should Never Eat With Cucumber: கோடைக்காலம் என்றாலே வெயிலுக்கு அடுத்தப்படியாக மாம்பழம், வெள்ளரிக்காய், முலாம் பழம், தர்பூசணி போன்றவை தான் நினைவிற்கு வரும். அதுவும் வெள்ளரிக்காயை அதிகம் வாங்கி சாப்பிடுவதுண்டு. ஏனெனில் கொளுத்தும் வெயிலில் தாகம் அதிகம் எடுக்கும்.
இந்நிலையில் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை உட்கொள்ளும் போது, தாகமும் அடங்கும், உடலும் நீரேற்றத்துடன் இருக்கும். முக்கியமாக வெள்ளரிக்காயை எந்த ஆரோக்கிய பிரச்சனையை கொண்டவர்களும் சாப்பிடலாம். ஏனெனில் இதில் கலோரிகள் அதிகம் இல்லை, கொலஸ்ட்ரால் இல்லை. இப்படிப்பட்ட வெள்ளரிக்காயை சிலருக்கு வெறுமனே சாப்பிட பிடிக்கும்.

இன்னும் சிலருக்கு சாலட்டுகளாக செய்து சாப்பிட பிடிக்கும். ஆனால் வெள்ளரிக்காயைக் கொண்டு சாலட் செய்வதாக இருந்தால், அந்த வெள்ளரிக்காயுடன் ஒருசில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்போது வெள்ளரிக்காயுடன் எந்த உணவுப் பொருட்களை சேர்த்து உட்கொள்ளக்கூடாது மற்றும் அதற்கான காரணம் என்ன என்பதைக் காண்போம்.
1. தயிர்
பொதுவாக வெள்ளரிக்காயை தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிடும் வழக்கம் இருக்கும். ஆனால் வெள்ளரிக்காயுடன் தயிரை சேர்த்து சாப்பிடுவது அவ்வளவு சிறப்பானது அல்ல. ஏனெனில் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இத்துடன் தயிரை சேர்க்கும் போது, இன்னும் நீர் விட்டு, சுவையே மாறிவிடும்.
மேலும் வெள்ளரிக்காயை தயிருடன் சேர்க்கும் போது, தயிர் சற்று திரிந்து போய், அதன் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே குளிர்ச்சியாக, அதே சமயம் வாய்க்கு ருசியாக சாப்பிட நினைத்தால், தயிரையும், வெள்ளரிக்காயையும் ஒன்றாக சாப்பிடாமல், தனித்தனியாக சாப்பிடுங்கள்.
2. தக்காளி
சாலட் என்றாலே வெள்ளரிக்காய், தக்காளி போன்றவை இருக்கும். ஆனால் இவ்விரண்டும் சரியான காம்பினேஷன் அல்ல. வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த வெள்ளரிக்காயை தக்காளியுடன் சேர்க்கும் போது, இரண்டின் சுவையும் ஒன்றையொன்று மோசமாக்கிவிடும்.
எனவே வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியின் சுவையை ருசிக்க விரும்பினால் ஒன்றாக சாப்பிடாமல், தனித்தனியே சாப்பிடுங்கள். ஒருவேளை சாலட் செய்யும் போது தக்காளியுடன் ஏதாவது சேர்க்க நினைத்தால், வெங்காயம், குடைமிளகாய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. இறைச்சிகள்
இறைச்சி மற்றும் வெள்ளரிக்காயை ஒன்றிணைத்து சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. ஏனெனில் இறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது மற்றும் இது செரிமானமாக அதிக நேரம் எடுக்கும். அதே வேளையில் வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது மற்றும் இது எளிதில் ஜீரணமாகக்கூடியது.
எனவே இவ்விரண்டையும் ஒன்றாக உட்கொள்ளும் போது, அது வயிற்று உப்புசம், அசௌகரியம் மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும். வெள்ளரிக்காயில் அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. இது புரோட்டீன்களின் செரிமானத்தில் இடையூறை ஏற்படுத்துவதோடு, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தலாம். எனவே இவ்விரண்டையும் ஒன்றிணைத்து சாப்பிடாதீர்கள்.
4. சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் புளிப்புச் சுவையுடையவை. அதே சமயம் வெள்ளரிக்காய் மென்மையானவை. இவ்விரண்டையும் ஒன்றிணைத்து சாப்பிடுவது சிறந்தது அல்ல. ஏனெனில் சிட்ரஸ் பழத்தில் உள்ள அமிலத்தன்மை, வெள்ளரிக்காயின் சுவையை தோற்கடித்துவிடும். மேலும் சிட்ரஸ் பழத்தின் புளிப்புச்சுவையை மோசமாக்கிவிடும். எனவே உங்களுக்கு சிட்ரஸ் பழம் பிடிக்குமானால், அத்துடன் வெள்ளரிக்காயை சேர்த்து சாப்பிடாதீர்கள்.
5. பூண்டு
பூண்டு ஒரு வலுவான மற்றும் காரச்சுவையைக் கொண்டது. இதை வெள்ளரிக்காயுடன் சேர்த்து சாப்பிட்டால், பூண்டின் சுவை மட்டுமே தெரியும். வெள்ளரிக்காயின் புத்துணர்ச்சிட்டும் சுவையை சுவைக்க விரும்பினால், எப்போதும் வெள்ளரிக்காயை தனியாக சாப்பிடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
