Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
இந்த 5 பழக்கங்களை உடனே கைவிடுங்க.. இல்லன்னா இதய நோய் சீக்கிரம் வந்துடும்..
Heart Disease: உலகில் சமீப காலமாக இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றனர். சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் இதய நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதய நோய் என்பது ஒருவருக்கு ஒரே நாளில் வரக்கூடியது அல்ல. நமது ஒருசில தினசரி பழக்கங்கள் இதயத்தை மெதுவாக சேதப்படுத்தி, ஒருகட்டத்தில் இதய நோய்க்கு வழிவகுக்கும்.
அதுவும் தற்போது நாம் உடலுழைப்பு இல்லாத ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறோம். மேலும் நாம் உண்ணும் உணவுப் பழக்கங்களிலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தவிர சிகரெட், ஆல்கஹால் போன்ற கெட்ட பழக்கங்களையும் பலர் கொண்டுள்ளார்கள்.

இவை அனைத்தும் இதயத்தை மோசமாக சேதப்படுத்தி, இதய நோய்களை வரத் தூண்டுகின்றன. உங்களுக்கு இதய நோய் வரக்கூடாதெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 பழக்கங்களை உடனே கைவிடுங்கள். இதனால் இதய நோய் தடுக்கப்படுவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
1. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது
தற்போதைய வேலை கலாச்சாரம் பலரை ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் படி கட்டாயப்படுத்துகிறது. இப்படி ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால், உடலின் இரத்த ஓட்டம் குறையும், கெட்ட கொழுப்பு அப்படி உடலில் படிந்து தேங்க ஆரம்பித்துவிடும் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, அடிக்கடி எழுந்து சிறு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள் மற்றும் தினமும் உடற்பயிற்சியில் சிறிது நேரம் ஈடுபடுங்கள்.
2. போதுமான தூக்கமில்லாமை
தற்போது நிறைய பேர் போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்வதில்லை. அப்படியே தூங்கினாலும் நல்ல தரமான மற்றும் ஆழமான தூக்கத்தை மேற்கொள்வதில்லை. இப்படி ஒருநாளைக்கு ஒரு மனிதனுக்கு தேவையான அளவு தூக்கம் கிடைக்காமல் போனால், அதன் விளைவாக இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் உடலினுள் அழற்சி அதிகரித்து, இதய நோயின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
3. அறிகுறிகளை புறக்கணிப்பது
தற்போது உடல் சோர்வு, மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, அடிக்கடி படபடப்பு போன்ற பிரச்சனைகளை நிறைய பேர் சந்திக்கிறார்கள். இவை அனைத்தும் இதய நோய்களின் பொதுவான அறிகுறிகளாகும். ஆனால் இந்த அறிகுறிகளை பலர் புறக்கணிக்கின்றனர். இப்படி உடல் நமக்கு தெரியப்படுத்தும் அறிகுறிகளை புறக்கணித்தால், பின் மோசமான நிலையில் மருத்துவரை அணுகினால் சிகிச்சை அளிக்க கடினமாக இருக்கும். எனவே உடலில் ஒருசில பிரச்சனையை தொடர்ந்து சந்தித்தால், அதை உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
4. ஆரோக்கியமற்ற உணவுகள்
தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக் செய்யப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், கார்ன் ப்ளேக்ஸ் போன்றவற்றில் சர்க்கரை அதிகளவு உள்ளது. இப்படி சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அது உடல் எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உடலினுள் வீக்கத்தை ஏற்படுத்தும். இவை அனைத்தும் இதய நோய்க்கு வழிவகுக்கும்.
5. மன அழுத்தமிக்க வாழ்க்கை
தற்போதைய பரபரப்பான அவசர உலகில், நம்மை அறியாமலேயே மன அழுத்ததுடன் வாழ்ந்து வருகிறோம். இப்படி தொடர்ந்து மன அழுத்தத்துடன் இருந்தால், அது இதயத்தை கடுமையாக பாதிக்கும். ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும் போது கார்டிசோல் என்னும் ஹார்மோன்கள் சுரக்கப்படும். அதுவும் இந்த மன அழுத்தம் நாள்பட்ட நிலைக்கு மாறும் போது, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதுவும் இது நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும் போது, அது இதயம் மற்றும் இரத்த நாளங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, இதய நோய்க்கு வழிவகுக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











