Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஆண்களே! விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கா? அப்ப இந்த 3 பழங்களை அதிகமா சாப்பிடுங்க.. கூறும் டாக்டர்..!
International Men's Health Week: ஒவ்வொரு ஆண்டும் தந்தையர் தினத்திற்கு முந்தைய வாரம் சர்வதேச ஆண்கள் சுகாதார வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை சர்வதேச ஆண்கள் சுகாதார வாரம் ஆகும்.
இந்த வாரத்தில் ஆண்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் ஆண்களின் ஆரோக்கிய பிரச்சனைகள், அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கும் முறை, எப்படி சரிசெய்வது என்பன குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும்.

தற்போது ஆண்கள் அதிகம் சந்திக்கும் மற்றும் அதைப் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்கும் ஒரு பிரச்சனை தான் விறைப்புத்தன்மை பிரச்சனை. இந்த பிரச்சனை உள்ள ஆண்களால் தனது துணையை படுக்கையில் திருப்திபடுத்த முடியாது. இதன் விளைவாக இந்த பிரச்சனை உள்ள ஆணால் தனது துணையை கருத்தரிக்க வைப்பது என்பது கடினமாக இருக்கும்.
பொதுவாக இந்த பிரச்சனை 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களிடையே தான் காணப்படுகிறது. மேலும் இந்த பிரச்சனைக்கு சில ஆரோக்கிய பிரச்சனைகள், உளவியல் காரணிகள் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களாக இருக்கலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி இந்தியாவில் மட்டும் சுமார் 35% ஆண்கள் 40 வயதிற்கு முன்பே பாலியல் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதில் விறைப்புத்தன்மை பிரச்சனையும் ஒன்று. இதில் 70 வயதில் தான் 70% ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையை அனுபவிப்பார்கள். மேலும் 10 இந்திய ஆண்களில் ஒருவருக்கு ஆண்மைக் குறைவு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் பெருநகரங்களில் இந்த நிகழ்வு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட விறைப்புத்தன்மை பிரச்சனையைக் குறைக்க உதவும் அற்புதமான 3 பழங்கள் குறித்து டாக்டர் ஐசக் அப்பாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்ன பழங்கள் என்பதைக் காண்போம் வாருங்கள்.
அதில் அவர் கூறியதாவது, "ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை 3 பழங்கள் குறைக்கும் என்று கூறினால் நம்புவீர்களா? ஆம், சுமார் 25,000 ஆண்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 3 பழங்கள் இரத்தக்குழாய்களில் நைட்ரிக் ஆக்ஸைடு என்ற கலவையை உற்பத்தி செய்வதாக தெரிய வந்துள்ளது. இந்த கலவையின் வேலை என்னவென்றால், ஆணுறுப்பைச் சுற்றியுள்ள இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஆணுறுப்பை நீண்டநேரம் விறைத்திருக்க உதவுகிறது." என்று கூறினார்.
"சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழமானது சுமார் 12 சதவீதம் விறைப்புத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. அடுத்து ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களானது சுமார் 22% விறைப்புத்தன்மை பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது. இந்த பழங்கள் அனைத்திலும் ஆந்தோசையனின்கள் என்னும் ப்ளேவோனாய்டுகள் விறைப்புத்தன்மைக்கு தேவையான அளவு சரியான விகிதத்தில் நிரம்பியுள்ளது. இதனால் தான் இந்த பழங்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையை குறைக்க உதவுகின்றன" என்றும் கூறினார்.
அதுமட்டுமின்றி, இந்த பழங்களை அடிக்கடி உட்கொண்டு வருவதோடு, உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தால், சுமார் 38% விறைப்புத்தன்மை பிரச்சனையைக் குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக டாக்டர் கூறினார். எனவே விறைப்புத்தன்மை பிரச்சனை இருந்தால், அதை நினைத்து வருத்தம் கொள்ளாமல் மேலே கொடுக்கப்பட்டுள்ள பழங்களை வாங்கி அதிகம் சாப்பிடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications













