Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
வாய் துர்நாற்றம் தர்மசங்கடத்தை ஏற்படுத்துதா? அதுக்கு முற்றுப்புள்ளி வெக்க இதுல ஒன்ன யூஸ் பண்ணுங்க...
உங்களுக்கு வாய் துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சில இயற்கை வழிகளை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்று பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளுள் ஒன்று தான் வாய் துர்நாற்றம். என்ன தான் ஒருவரது தோற்றம் சிறப்பாக இருந்தாலும், வாயில் இருந்து துர்நாற்றம் வீசினால், அவருடன் பேசுவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். சொல்லப்போனால் வாய் துர்நாற்றமானது ஒருவரது தன்னம்பிக்கையையே குறைத்துவிடும். ஒருவருக்கு வாய் துர்நாற்றமானது பல காரணங்களால் ஏற்படுகிறது. அதில் சில உணவுகள் மற்றறும் பானங்கள் மட்டுமின்றி, வாய் வறட்சி மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளாலும் வாய் துர்நாற்றம் வீசலாம்.

வாய் துர்நாற்றத்தை தடுக்க நாள் முழுவதும் பற்களைத் துலக்கிக் கொண்டு, ஃப்ளோசிங் செய்து கொண்டு இருக்க முடியாது. தற்போது வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க பல மௌத் வாஷ்கள் விற்கப்படுகின்றன. ஆனால் மௌத் வாஷ்களில் உள்ள கெமிக்கல்கள் சிலருக்கு கடுமையான வாய் எரிச்சலை ஏற்படுத்தலாம். இதனால் கெமிக்கல் கலந்த மௌத் வாஷ் பயன்படுத்த பலரும் விரும்புவதில்லை.
உங்களுக்கு வாய் துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சில இயற்கை வழிகளை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு வசதியானதை தேர்ந்தெடுத்து மேற்கொள்ளுங்கள். முக்கியமாக அடிக்கடி தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். இது வாய் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க உதவி புரியும்.

புதினா
உங்களுக்கு கெமிக்கல் கலந்த மௌத் வாஷ் பயன்படுத்த பிடிக்காவிட்டால், வாய் துர்நாற்றத்தை உடனே தடுக்க உதவும் நல்ல நறுமணம் கொண்ட புதினா இலைகளைப் பயன்படுத்தலாம். இந்த புதினா இலைகள் வாய் துர்நாற்றத்தை உடனே தடுப்பதோடு, வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதற்கு சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இதனால் நீண்ட நேரம் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கொத்தமல்லி
வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும் மற்றொரு சமையலறை பொருள் தான் கொத்தமல்லி. அதற்கு சிறிது கொத்தமல்லியை உணவு உண்ட பின்னர் வாயில் போட்டு மெல்லுங்கள். குறிப்பாக பூண்டு நிறைந்த உணவுகளை உண்ட பின்னர் கொத்தமல்லி சாப்பிட்டால், வாயில் இருந்து வீசும் பூண்டின் நாற்றம் நீங்கும்.

கொய்யா இலை
வாயில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்க கொய்யா இலை மற்றும் கொய்யாப்பழம் பெரிதும் உதவி புரியும். நீங்கள் மீட்டிங் ஏதாவது கலந்து கொள்வதாக இருந்தால், அதற்கு முன் ஒரு கொய்யா இலையை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் நீண்ட நேரம் வாய் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.

கிரான்பெர்ரி
கிரான்பெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரியும். முக்கியமாக கிரான்பெர்ரி வாய் துர்நாற்றத்தைப் போக்கும், ஈறுகளை வலிமையாக்கு, பல் சொத்தையைத் தடுக்கும். இது தவிர பற்களை வெண்மையாக்க உதவும். எனவே இந்த பழம் எங்காவது கிடைத்தால், அதை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

கிராம்பு
கிராம்பில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளதால், இது வாய் துர்நாற்றத்தை போக்க பெரிதும் உதவி புரியும். அதற்கு ஒரு கிராம்பை வாயில் போட்டு மென்றால் போதும். உங்களுக்கு எப்போதெல்லாம் வாய் துர்நாற்றம் வீசுவதை உணர்கிறீர்களோ, அப்போது ஒரு கிராம்பை வாயில் போட்டு மெல்லுங்கள்.

சோம்பு
சோம்புகளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பிற பண்புகள், வாய் துர்நாற்றத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் சோம்பு அஜீரண கோளாறுகளைப் போக்கவும் உதவி புரிகிறது. எனவே உங்கள் வாய் துர்நாற்றம் வீசினால் ஒரு ஸ்பூன் சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். முக்கியமாக ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் சோம்பை சாப்பிட்டால், வாய் துர்நாற்றம் தடுக்கப்படுவதோடு, செரிமானமும் சிறப்பாக நடக்கும்.



Click it and Unblock the Notifications