Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
பார்வை குறைபாடு முதல் கண் வறட்சி வரை - கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான சில ஆயுர்வேத தீர்வுகள்!
ஆயுர்வேதத்தில் கண்களில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சில தீர்வுகள் உள்ளன. இப்போது கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கி கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில ஆயுர்வேத வைத்தியங்களைக் காண்போம்.
கண்களின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. கண்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம்மால் இவ்வுலகை பார்த்து ரசிக்க முடியும். ஆனால் தற்போது மொபைல் போன்கள், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக மொபைலை ஏராளமானோர் கண்கள் சோர்ந்து போகும் அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதேப் போல் அலுவலகத்தில் முடிக்க முடியாத வேலையை வீட்டிற்கு வந்து லேப்டாப்பில் இரவு நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்கிறார்கள். இதன் காரணமாக கண்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், கண் வறட்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட தொடங்குகின்றன.
கண்களில் அதிக அழுத்தம் கொடுக்கப்படும் போது தான் இவ்வளவு பிரச்சனைகளும் எழுகின்றன. ஆயுர்வேதத்தில் கண்களில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சில தீர்வுகள் உள்ளன. இப்போது கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கி கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில ஆயுர்வேத வைத்தியங்களைக் காண்போம்.

குளிர்ந்த நீர்
கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கண் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்கவும் காலையில் எழுந்ததும் வாயில் நீரை நிரப்பி, கண்களை குளிர்ச்சியான நீரால் கழுவ வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆனால் கண்களை மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ச்சியான நீரால் கழுவக்கூடாது.

நெய் விளக்கு
பார்வை பிரச்சனையை சந்திப்பவர்கள், தங்களின் பார்வையை மேம்படுத்த பஞ்சு திரி கொண்டு ஏற்றப்பட்ட நெய் விளக்கை கூர்ந்து பார்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பார்வை மேம்படுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

ஆட்டுப்பால்
லேப்டாப் மற்றும் மொபைலைப் பயன்படுத்தி, உங்கள் கண்கள் சோர்வடைந்திருந்தால், கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு வழி தான் ஆட்டுப் பாலை பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களை மூடி கண்களின் மேல் சிறிது நேரம் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

விளக்கெண்ணெய்
உங்களுக்கு கண் வறட்சி பிரச்சனை உள்ளதா? அப்படியானால் கண் வறட்சியைப் போக்க அதிக நீரைக் குடிப்பதைத் தவிர, இரண்டு கண்களிலும் நல்ல சுத்தமான விளக்கெண்ணெயை ஒரு துளியை விடுங்கள். அதுமட்டுமின்றி தினமும் இரவு தூங்கும் முன் உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவுங்கள்.

வெள்ளரிக்காய்
இயற்கையாகவே வெள்ளரிக்காய் குளிர்ச்சியான விளைவைக் கொண்டது. எனவே இது சோர்வடைந்த கண்களுக்கு புத்துணர்ச்சியூட்ட உதவும் அற்புதமான பொருள். அதற்கு வெள்ளரிக்காய் துண்டுகளை தினமும் 10 நிமிடம் கண்களின் மீது வைத்திருங்கள். இப்படி செய்வதனால் கண்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களும் நீங்கும்.

தேன் மற்றும் நெய்
கண் வறட்சியை போக்க உதவும் மற்றொரு அற்புதமான இயற்கை வழி தான் நெய் மற்றும் தேனைக் கலந்து கண்களைச் சுற்றி தடவுவது. கணினி முன்பு வேலை செய்பவர்கள் இப்படி தினமும் இரவு கண்களைச் சுற்றி தடவினால், கண் வறட்சி குறைவதோடு, கண்களும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

திரிபலா
மூன்று பழங்களைக் கொண்ட திரிபலாவை இரவு தூங்கும் முன் நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரால் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கண் பார்வை மேம்படுவதோடு, கண் அழற்சியைக் குறைக்கும்.
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை மேற்கொள்ளும் முன், ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைக்கு பின்னரே மேற்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications