Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
திடீர்னு நடுராத்திரியில் காய்ச்சல் வந்துடுச்சா? அப்ப இந்த கை வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க..
முன்பெல்லாம் நம் முன்னோர்கள் காய்ச்சலுக்கு என்ன மருந்து மாத்திரைகளையா எடுத்தார்கள். கை வைத்தியம் தானே பார்த்தார்கள். எனவே உங்களுக்கு காய்ச்சல் வந்தால் கை வைத்தியங்களை முதலில் முயற்சி செய்யுங்கள்.
தற்போது குளிர்காலம் என்பதால் நிறைய பேர் சளி, இருமல் பிரச்சனையால் மட்டுமின்றி, காய்ச்சலாலும் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். காய்ச்சல் என்பது உடலின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாகும். இது உடலில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகளில் ஒன்றாகும். இந்த காய்ச்சல் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். பெரும்பாலானோர் வருடத்திற்கு 2-3 முறை காய்ச்சலால் அவதிப்படுவதுண்டு.

பொதுவாக காய்ச்சல் வந்தால், அதை குறைக்க நிறைய பேர் வீட்டில் உள்ள மருந்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி எடுப்பார்கள். ஆனால் அப்படி மருந்தை அதிகம் எடுத்தால், அதன் விளைவாக உள்ளுறுப்புகள் தான் அதிகம் பாதிக்கப்படும். முன்பெல்லாம் நம் முன்னோர்கள் காய்ச்சலுக்கு என்ன மருந்து மாத்திரைகளையா எடுத்தார்கள். கை வைத்தியம் தானே பார்த்தார்கள். எனவே உங்களுக்கு காய்ச்சல் வந்தால் உடனே மருந்து மாத்திரைகளை எடுக்காமல், கை வைத்தியங்களை முதலில் முயற்சி செய்யுங்கள். கீழே காய்ச்சலைக் குறைக்கும் சில எளிய கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

துளசி
புனிதமான துளசி பல நோய்களை சரிசெய்ய உதவுகிறது. இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-பயாடிக் பண்புகள் உள்ளன. எனவே இது தொண்டை புண் முதல் காய்ச்சல் வரை பலவற்றை சரிசெய்ய உதவுகிறது. காய்ச்சல் அதிகமாக இருந்தால், சிறிது சூரியகாந்தி விதைகளை அரைத்து, அத்துடன் தேன் மற்றும் துளசியை வைத்து சாப்பிடுங்கள். ஒருவேளை உங்களால் இவ்வாறு சாப்பிட முடியாவிட்டால், துளசி டீ தயாரித்து குடியுங்கள். இது காய்ச்சலைக் குறைக்கும்.

புதினா மற்றும் இஞ்சி
நற்பதமான மூலிகை டீ காய்ச்சலைக் குறைக்க உதவும். அதுவும் இஞ்சி மற்றும் புதினா இலைகளைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், காய்ச்சலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். அதற்கு புதினா மற்றும் இஞ்சியை கொதிக்கும் நீரில் போட்டு, 10 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதை இறக்கி வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

மஞ்சள்
அன்றாட சமையலில் பயன்படுத்தும் முக்கியமான மசாலா பொருள் தான் மஞ்சள். மஞ்சள் பாலை காய்ச்சல் அடிக்கும் போது குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் வெதுவெதுப்பான பாலில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

சந்தனம்
சந்தன பேஸ்ட் அதிகளவில் இருக்கும் காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் சந்தனம் குளிர்ச்சித்தன்மை கொண்டது. அதை அளவுக்கு அதிகமாக காய்ச்சல் அடிக்கும் போது நெற்றியில் தடவும் போது, அது அதிகப்படியான உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும். அக்காலத்தில் நம் முன்னோர்கள் அதிக காய்ச்சலுக்கு இந்த முறையை பயன்படுத்தியுள்ளார்கள்.

பூண்டு
பூண்டில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. எனவே இது வைரஸ் காய்ச்சலை சரிசெய்வதில் சிறந்தது. பழங்காலத்தில் காய்ச்சலைக் குறைக்க 2-3 பூண்டு பற்களை தட்டி, 1/4 கப் சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்நீரைக் குடிப்பார்களாம்.



Click it and Unblock the Notifications