Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
நியூ இயர் பார்ட்டியில் கன்னாபின்னான்னு சாப்பிட்டீங்களா? அப்ப உடம்பு சுத்தமாக ஒரு 3 நாள் இத குடிங்க....
2021 ஆம் ஆண்டில் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமென நினைத்தால், முதலில் உடலை சுத்தமாகவும், நச்சுக்கள் இல்லாததாகவும் வைத்திருப்பது அவசியம்.
2021 ஆம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், இதுநாள் வரை மேற்கொண்டு வந்த டயட்டிற்கு ஒரு நாள் விடுமுறை விட்டு, பலரும் இந்த புத்தாண்டை சிறப்பாக வரவேற்கும் வகையில் நியூ இயர் பார்ட்டியின் போது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து நல்ல பல சுவையான உணவுகள், பானங்கள் மற்றும் இனிப்புக்களை சாப்பிட்டு கொண்டாடி இருப்போம். இப்படி ஒரே நாளில் வரம்புமீறி பல உணவுகளை சாப்பிட்ட பின், சற்றும் சோர்வடையாமல் மறுநாளே உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற முயற்சிக்க வேண்டியது அவசியம்.

இல்லாவிட்டால் இத்தனை நாட்கள் மேற்கொண்டு வந்த டயட் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும். எனவே 2021 ஆம் ஆண்டில் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமென நினைத்தால், முதலில் உடலை சுத்தமாகவும், நச்சுக்கள் இல்லாததாகவும் வைத்திருப்பது அவசியம். அதற்கு சீரான இடைவெளியில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். இதனால் உங்கள் உடல் எடை கட்டுப்பாட்டில் இருப்பதோடு மட்டுமல்மல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். இப்போது புதிய வருடத்தில் உங்கள் உடல் ஆரோக்கியமாகவும், நச்சுக்கள் இல்லாததாகவும் இருக்க குடிக்க வேண்டிய சில பானங்களைக் காண்போம்.

ஆப்பிள் மற்றும் பட்டை நீர்
ஆரோக்கியமான பானங்கள் எப்போதுமே மிகவும் சுவையானதாக இருக்க வாய்ப்பில்லை. அதில் இந்த பானம் மட்டும் விதிவிலக்கல்ல. ஆப்பிள் பட்டை நீரில் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற அபாயகரமான நோய்களில் இருந்து பாதுகாக்கக்கூடியவை. இந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை மேட்படுத்துவதோடு, உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றும்.

எப்படி தயாரிப்பது?
ஒரு ஆப்பிள் துண்டை எடுக்கவும். பின் ஒரு பட்டை துண்டை எடுக்கவும். இரண்டையும் ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு, அதில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் ஆப்பிள் மற்றும் பட்டையைப் போட்டு மூடி, 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதை குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு கேரட் இஞ்சி நீர்
ஆரஞ்சு பழம் வைட்டமின் சி நிறைந்தது. கேரட் பீட்டா-கரோட்டீனை உள்ளடக்கியது மற்றும் இஞ்சி ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. சக்தி வாய்ந்த இந்த மூன்று பொருட்களும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றக்கூடிய திறனைக் கொண்டது.

எப்படி தயாரிப்பது?
இந்த பானம் தயாரிப்பதற்கு ஒரு ஆரஞ்சு பழம், ஒரு கேரட் மற்றும் ஒரு இன்ச் இஞ்சி துண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஆரஞ்சு பழத் துண்டுகள், கேரட் மற்றும் இஞ்சியை பிளெண்டரில் போட்டு, அதில் அரை கப் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை அப்படியே குடிக்க வேண்டும்.

எலுமிச்சை நீர்
எலுமிச்சை நீர் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான நச்சுக்களை வெளியேற்றும் பானம். எலுமிச்சை உடல் வறட்சி அடையாமல் தடுப்பதோடு, வைட்டமின் சி சத்தை உள்ளடக்கியது. எனவே இந்த பானத்தை ஒருவர் தினமும் குடிப்பது மிகவும் நல்லது.

எப்படி தயாரிப்பது?
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற நினைத்தால், எலுமிச்சை சாற்றினை ஒரு டம்ளர் நீரில் கலந்து, அதில் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் உடலின் மூலைமுடுக்குகளில் இருக்கும் நச்சுக் கழிவுகள் உடலில் இருந்து முழுமையாக வெளியேறிவிடும்.

தேன் எலுமிச்சை இஞ்சி டீ
சாதாரணமாகவே இந்தியர்கள் ஒரு டீ பிரியர்கள். அடிக்கடி டீ குடிப்பார்கள். குளிர்காலத்தில் பால் சேர்க்காத மசாலா டீயை ஒரு கப் குடித்தால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலும் வெதுவெதுப்பாக இருக்கும். அதோடு சளி மற்றும் தொண்டை புண் பிரச்சனையும் சரியாகும்.

எப்படி தயாரிப்பது?
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒன்றரை டம்ளர் நீரை ஊற்றி, அதில் ஒரு துண்டு இஞ்சியைத் தட்டிப் போட்டு ஒரு டம்ளராகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

சியா நீர்
சியா விதைகள் க்ளுட்டன் இல்லாதவை மற்றும் கால்சியம் சத்தை அதிகம் கொண்டவை. இது பசியைக் கட்டுப்படுத்த உதவி உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். இந்த சியா விதைகளை நாம் பெரும்பாலும் ஃபளூடாவில் கண்டிருப்போம் மற்றும் சுவைத்திருப்போம். இத்தகைய சியா விதைகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவக்கூடியது.

எப்படி தயாரிப்பது?
இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில் சிறிது சியா விதைகளைப் போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் இதைப் பார்க்கும் போது, நீரில் உள்ள விதைகளானது நன்கு பெரிதாகி, ஜெல் போன்ற பதத்தில் இருக்கும். அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் மேம்படும் மற்றும் உடலும் சுத்தமாகும்.



Click it and Unblock the Notifications