தீராத பல் வலி உடனே குறைய இத செஞ்சா போதும்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சந்திக்கிற ஒர் அத்தியாவசியப் பிரச்சனையாக பல் வலி இருக்கிறது.

கெமிக்கல்கள்,இனிப்பூட்டிகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, சரியாக பற்களை பராமரிக்காமல் இருப்பது ஆகியவை தான் காரணமாக இருக்கிறது. அதை அப்படியே கவனிக்காமல் விட அது அப்படியே பற்சிதைவுக்கு வலி வகுக்கிறது.

பற்சிதைவின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் இந்த முயற்சிகளை எடுத்தால் அதன் தீவிரத்திலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுப்பழக்கம் :

உணவுப்பழக்கம் :

உங்களுடைய உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.எப்போதும் துரிதமான உணவுகளையும், குளிர்ச்சியான உணவுகளையும் அதிகம் உட்கொள்வதை தவிர்க்கவும்.

சர்க்கரை அதிகமிருக்கும் உணவுகளைச் சாப்பிடுவதால் பற்சொத்தை வரும் என்பதால் அதனைத் தவிர்க்கவும்.

கால்சியம் :

கால்சியம் :

அதே போல பைடிக் அமிலம் நிறைந்திருக்கும் உணவுப் பொருட்களை நீங்கள் சாப்பிடுவதால் அது பற்களுக்கு போதுமான அளவு கால்சியம் உறிஞ்சப்படுவதை தடுக்கும்.

சர்க்கரை அதிகமிருக்கும் பொருட்களில் பைடிக் அமிலமும் அதிகமிருக்கும். கால்சியம் பற்களைவலுவூட்ட அவசியமாகும்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் :

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் :

பல் பிரச்சனைகளுக்கு முதன்மையானது உங்களின் உணவுப்பழக்கம் தான். ஆரோக்கியமானதாக அதனை மாற்றிக் கொண்டால் நீங்கள் அதிலிருந்து தப்பிக்கலாம்.கால்சியம் நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.தினமும் பால், தயிர் உட்பட பால் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிக குளிர்ச்சியான அதே நேரத்தில் அதிக இனிப்பான பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

தண்ணீர் :

தண்ணீர் :

உடலின் தண்ணீர் சத்து அவசியத்தை இதுவரை பல இடங்களில் படித்திருப்பீர்கள். உடலின் நீர்ச்சத்து பிற பாகங்கள் சீராக இயங்குவதற்கு மட்டுமே பயன்படுவதில்லை.

வாயில் எச்சில் சுரக்கவும் பயன்படுகிறது. வாயில் எச்சில் சுரப்பது மிகவும் தேவை, அப்போது தான் பற்களில் வளருகிற பாக்டீரியாக்களை அப்போதே அது அழித்திடும்.

சுகர்லெஸ் கம் :

சுகர்லெஸ் கம் :

சுகர்லெஸ் கம் சாப்பிடுவதால் பற்சொத்தையிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். கேட்க சற்று விசித்திரமாக தோன்றினாலும் இது உண்மை. சுகர்லெஸ் கம்மில் எக்ஸைலிடோல் என்ற பொருள் இருக்கிறது.

இந்த பொருள் இயற்கையாகவே ஒரளவிற்கு சுவையானதாக இருக்கும். பிற உணவுகளில் இருப்பதைப் போன்றோ அல்லது பிற இனிப்புகளைப்ச் சாப்பிடுவதால் வாயில் பாக்டீரியா தொற்றினை ஏற்படுத்தாது. அதே போல இப்படி தொடர்ந்து வாயை அசைப்பதால் வாயில் எச்சில் சுரப்பு அதிகரிக்கும். இது பற்களின் மூலை முடுக்களில் தங்கியிருக்கும் உணவுப் பொருட்களை வெளியில் கொண்டு வந்து விடும்.

பிரஷ் :

பிரஷ் :

பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தக்கூடியது தான் டூத் பிரஷ் ஆனால் அதுவே மிக பரிதாபமான நிலையில் இருப்பது தான் கொடுமை. பற்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு டூத் பிரஷ்ஷுக்கும் கொடுக்க வேண்டியது அவசியம்.

எப்போதும் மீடியம் சைஸ் பிரஷ் வாங்குவது நல்லது, மிகப்பெரிய அளவோ அல்லது சிறிய அளவோ வாங்கினால் அது சரியாக சுத்தம் செய்யாது.

டூத் பிரஷ் கவர் :

டூத் பிரஷ் கவர் :

விளம்பர யுக்திக்காக பிரஷ்ஷினை லாக் செய்து வைத்திடுங்கள். டூத் பிரஷ் லாக், அல்லது டூத் பிரஷ் கவர் என்று சொல்லி விற்கிறார்கள். சில நேரங்களில் அதற்கும் கட்டணம் கூடுதலாக வாங்கப்படுகிறது.

ஒரு போதும் இப்படி உங்களது பிரஷ்ஷினை லாக் செய்யக்கூடாது. அதில் இருக்கக்கூடிய மைக்ரோ ஆர்கானிசம் மற்றும் பாக்டீரியா என்ன தான் நாம் சுத்தமாக கழுவினாலும் பிரஷ்ஷில் ஒட்டிக் கொண்டிருக்க வாய்ப்பதிகம். காற்று புகாமல் இப்படி அடைத்து வைத்தால் கூடுதலாக அது பல்கிப் பெருகவே செய்யும்.

அதே போல பிரஷ்ஷை கழிவறைக்கு உள்ளேயே வைக்காதீர்கள்.

பல் விளக்கும் முறை :

பல் விளக்கும் முறை :

என்ன தான் பார்த்து பார்த்து உணவுகளைச் சாப்பிட்டாலும் பற்களை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் பராமரிக்க பல் விளக்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் விளக்க வேண்டும்.

குறைந்த இரண்டு நிமிடங்களாவது பல்விளக்க வேண்டும். பற்களின் எல்லா பக்கங்களிலும், மூலை முடுக்குகளுக்கும் பிரஷ் சென்று வருகிறதா என்பதை அவதானியுங்கள்.

மவுத் வாஷ் :

மவுத் வாஷ் :

இரவு தூங்குவதற்கு முன்னால், கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும். பிரஷ் செய்வதைக் காட்டிலும் வாய் கொப்பளிப்பது சிறந்த பலனைக் கொடுக்கும். வாய் கொப்பளிப்பதால் நுண் பாக்டீரியாக்கள் அழியும்.

மவுத் வாஷ் பயன்படுத்துவதால் கூடுதலாக இருக்கக்கூடிய பாக்டீரியாக்களும் அழியும். மவுத் வாஷ் பயன்படுத்திய பிறகு தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டாம்.

வருடத்திற்கு ஒரு முறை:

வருடத்திற்கு ஒரு முறை:

பாதிக்கப்பட்டு, வலியெடுத்த ஆரம்பித்த பின்னர் கை மருத்துவத்தை எல்லாம் தேடிப்பிடித்து செய்வோம். நிலைமை கை மீறிச் சென்றுவிட்டது. இனி வலியை பொருத்துக் கொள்ளவே முடியாது எனும் பட்சத்தில் தான் மருத்துவமனை பக்கமே செல்கிறோம்.

வருடத்திற்கு ஒரு முறையாவது பல் மருத்துவரை சந்தித்து உங்களது பற்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்,

விட்டமின்ஸ் :

விட்டமின்ஸ் :

பற்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது கால்சியம், அந்த கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதற்கு விட்டமின் டி அவசியமாகும். இதைத் தவிர நார்ச்சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள்.

முழு தானியங்களை சாப்பிடலாம். இதில் விட்டமின் பி மற்றும் இரும்புச் சத்து நிறையவே இருக்கிறது. இதைத் தவிர இதிலிருக்கும் மக்னீசியம் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரிக்கிறது.

ஆயில் புல்லிங் :

ஆயில் புல்லிங் :

பற்களில் தங்கியிருக்கிற பேக்டீரியாக்களை விரட்ட மிகச் சிறந்த வழி இது. எண்ணையைக் கொண்டு வாயை கொப்பளிப்பது. இதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.

இரண்டு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளித்திடுங்கள் பதினைந்து நிமிடங்கள் வரை கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் தன் இயல்பிலிருந்து மாறி பால் வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கும். கேவிட்டீஸ் வராமல் தடுக்க இது உதவிடும். சாதரண தண்ணீரில் வாய் கொப்பளிப்பதை விட இரண்டு மடங்கு அதிக பலன் தரக்கூடியது இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips to get rid of tooth decay

Tips to get rid of tooth decay
Story first published: Friday, March 30, 2018, 17:00 [IST]