Latest Updates
-
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா
புட் கோமா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை
நம்மில் பலருக்கும் சாப்பிட்டவுடனேயே தூக்கம் வரும் அல்லது மயக்கம் போன்ற உணர்வு ஏற்படும். அதற்கு காரணம் என்னவென்று நாம் சிந்தித்து இருக்க வாய்ப்பில்லை. சொல்லப்போனால் இந்த பிரச்சினை அனைவருக்குமே ஏற்படக்க
நம்மில் பலருக்கும் சாப்பிட்டவுடனேயே தூக்கம் வரும் அல்லது மயக்கம் போன்ற உணர்வு ஏற்படும். அதற்கு காரணம் என்னவென்று நாம் சிந்தித்து இருக்க வாய்ப்பில்லை. சொல்லப்போனால் இந்த பிரச்சினை அனைவருக்குமே ஏற்படக்கூடிய ஒன்றுதான். இதனை மருத்துவரீதியாக " புட் கோமா " அல்லது " கார்போ கோமா " என்று அழைக்கிறார்கள்.

இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும், மேலும் இதயம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். இந்த பதிவில் புட் கோமா பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்களையும், அதன் பாதிப்புகளையும், அதனை தடுக்கும் வழிமுறைகளையும் பற்றி விரிவாக பார்க்கலாம்.

காரணம்
புட் கோமா ஏற்பட முக்கிய காரணம் அதிகளவு கார்போஹைடிரேட்டுகள் ஆகும். அதிக கார்போஹைடிரேட் உள்ள உணவுகளை சாப்பிடும்போது உங்கள் இரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவு அதிகரிக்கும். பின் இந்த இன்சுலின் மூளைக்குள் ட்ரிப்டோபானின் சுரப்பை அதிகரிக்கும். இது செரோட்டினின் மற்றும் மெலடானினாக மாற்றப்படும். செரோட்டினின் உங்களை மகிழ்ச்சியாக உணர செய்யும், சாப்பிட்டவுடன் மகிழ்ச்சியாக உணர காரணம் இந்த ஹார்மோன்தான். மெலடானின் உங்களை தூங்க தூண்டும்.

செரிமான மண்டலத்தில் என்ன ஆகும்?
நீங்கள் சாப்பிடும்போது வயிறு இரைப்பை ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது, இது உணவை செரிமானம் அடைய செய்யும் ஹார்மோனை தூண்டி உணவை எளிதில் செரிக்க கூடிய பல பாகங்களாக பிரிக்கிறது. இந்த பிரிக்கப்பட்ட உணவு சிறுகுடலுக்கு அனுப்பப்படுகிறது. அதேநேரம் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்கிறது, இது உணவிலிருந்து குளுக்கோஸை உறிஞ்ச பயன்படுகிறது. இறுதியில் இன்சுலின் தூக்கத்தை ஏற்படுத்தும் ட்ரிப்டோபானை மூளைக்கு அனுப்பி உங்களை தூக்கமாக உணரச்செய்யும். சிலர் சாப்பிடும்போதே தூங்கிவிடுவார்கள், அதற்கு காரணம் உணவிலுள்ள அதிக கார்போஹைடிரேட் அதிகளவு ட்ரிப்டோபானினை சுரப்பதுதான்.

தடுக்க இயலுமா?
புட் கோமா ஏற்படுவதை தவிர்க்க சிறந்த வழி உங்கள் உணவை திட்டமிட்டு சரியான முறையில் உண்பதுதான். இதன் மூலம் உங்களின் குடல் இயக்கங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படும். எனவே உங்களுக்கும் தூக்கம் வராது. மேலும் இதனை தடுக்க சில வழிகள் உள்ளது.

அதிகமாக சாப்பிடாதீர்கள்
நீங்கள் சாப்பிடும் உணவின் அளவில் கவனமாய் இருங்கள். அதேநேரம் சரியான இடைவெளிகளில் சாப்பிடுகிறீர்களா என்பதையும் கவனியுங்கள். அடிக்கடி சாப்பிடுவதுஉடலுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடும். லெப்டின் இயற்கையாக சுரக்க வேண்டியது அவசியம் அதனை நீங்கள் இயற்கையான முறையில் கரைக்க வேண்டும். அதுதான் உங்கள் ஆரோக்கிய வாழ்விற்கான அடையாளமாகும்.

உணவை சமநிலைப்படுத்துங்கள்
உங்களுக்கு ஏன் சாப்பிட்டவுடன் தூக்கம் வருகிறது என்ற காரணத்தை இப்போது அறிந்திருப்பீர்கள். நீங்கள் சீரான அளவு கார்போஹைடிரேட் மட்டும் எடுத்து கொள்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.அதுமட்டுமின்றி உங்கள் உடலுக்கு தேவைப்படும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட மறக்காதீர்கள். சீரான உணவே பாதி நோயை தடுத்துவிடும்.

நடப்பது
சாப்பிட்டு முடித்தபின் சிறிது நேரத்திற்கு நடப்பது உங்கள் உணவை விரைவில் கரைத்து தூக்கம் வருவதை தடுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் சோம்பலாக படுத்துவிடாமல் சுறுசுறுப்பாக இருப்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு உணவை வேகமாக செரிக்க செய்யும்.

உணவுகள்
புட் கோமா ஏற்படுவதை தடுக்க நீங்கள் உண்ணும் உணவில் கவனமாக இருத்தல் அவசியம். குறிப்பாக மதிய நேரங்களில் அதிகமாய் சாப்பிடுவதோடு நிறுத்தி கொள்ளாமல் தயிர் சாப்பிட்டால் செரிக்கும் என்ற மூட நம்பிக்கையில் அதையும் சாப்பிட்டுவிட்டு சென்று நாற்காலியில் அமர்ந்தால் தூக்கம்தான் வரும். எனவே பெரும்பாலும் மத்திய நேரங்களில் தயிரை உணவில் சேர்த்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

காலை உணவு
ஒரு நாளின் தொடக்கத்திற்கும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருப்பதற்கும் முக்கிய தேவை காலை உணவு. எனவே காலை உணவை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்க கூடாது. அதேசமயம் காலை நேரத்தில் அதிக கார்போஹைடிரேட் உள்ள உணவுகளை சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் மந்தமாகத்தான் இருக்கும். குறிப்பாக காலை நேரத்தில் அரிசியை உணவில் சேர்த்து கொள்வதை தவிர்க்கவும்



Click it and Unblock the Notifications
