ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால் உண்டாகும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன.

வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும் அதனை நாம் பயன்படுத்தலாம். இதில் புரதம்,மாவுச்சத்து, நார்ச்சத்து,கால்சியம்,உட்பட பல்வேறு முக்கியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. சித்தமருத்துவத்தில் ஏலக்காய் மிகப்பெரிய பங்காற்றுகிறது.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட நீரைக் குடிப்பதினால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

ஏலத்தினைக் கொண்டு நீர் தயாரிக்க முதலில் சிறிதளவு ஐந்து முதல் பத்து வரை நீங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீருக்கு ஏற்ப ஏலக்கய எடுத்துக் கொள்ளுங்கள். அதனை பொடித்து, அந்த தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

அதிகமாக நைஸ் பவுடராக செய்ய வேண்டாம், இதில் வேண்டுமானால் ஒரு கிராம்பு சேர்த்துக் கொள்ளலாம்.

கொதிநிலை ;

கொதிநிலை ;

தண்ணீரை நீண்ட நேரம் கொதிக்க வைக்க வேண்டாம். கொதிக்க ஆரம்பித்த சில நொடிகளில் ஆஃப் செய்துவிடுங்கள். இல்லையெனில் ஏலக்காயில் உள்ள துவர்ப்பு சுவை அதிகமாக நீரில் இறங்கிவிடும்.

பின்னர் அதனை நன்றாக ஆற வைத்து அதனுடன் பாதியளவு தண்ணீரைக் கலந்து குடிக்கலாம். வேண்டுமானால் சுவைக்கு எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து கொள்ளலாம்.

செரிமானம் :

செரிமானம் :

இந்த தண்ணீர் குடிப்பதினால் உணவு விரைவாக செரிமானம் அடையும். வயிறு உப்புசமாக தோன்றுவது, வயிற்று வலி, நெஞ்செரிச்சல்,குமட்டல், ஆகிய வயிறு தொடர்பான பிரச்சனைகளை இது தீர்த்திடும்.

இந்த நீரை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.

நச்சுக்கள் :

நச்சுக்கள் :

நம் உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான நச்சுக்கள் தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அவ்வப்போது இவற்றை நீக்குவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஏலக்காய் நீர் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.

பற்களுக்கு :

பற்களுக்கு :

ஏலாக்காய் இயல்பிலேயே அதிக வாசனையுடையது. மவுத் ஃபிரஷ்னர்ஸ் பலவும் ஏலக்காய் வாசத்துடன் வருவதற்கு இதுவும் ஒர் காரணமாகும்.பற்களில், ஈறுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாக்டீரியா தொற்று மற்றும் வாய்ப்புண்களை இது போக்கும். அதே போல கெட்ட நாற்றம் வருவதையும் தடுக்கம்.

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

ஆரோக்கியமான வாழ்விற்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் அவசியமாகும். ஏலக்காய் நீர் குடிப்பதினால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். தொண்டைப் பிரச்சனைகள், வைரஸ் காய்ச்சல் ஆகியவை குணமாகும்.

காய்ச்சல் தலைவலி ஏற்பட்டு இரண்டு நாட்கள் கழித்து இந்த நீரை குடிப்பதினால் எந்த பயனும் இல்லை. மாறாக ஆரம்ப கட்டத்திலேயே குடிக்க வேண்டியது அவசியமாகும்.

வயதான தோற்றம் :

வயதான தோற்றம் :

ஏலாக்காயில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கின்றன. இது நம் உடலில் இருக்கும் செல்களின் உற்பத்திக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.

இதனால் சருமம் பளபளப்புடன் ஆரோக்கியத்துடன் இருக்கும். இதனால் இளமையுடன் இருக்க இது உதவிடும்.

மூச்சுப் பிரச்சனை :

மூச்சுப் பிரச்சனை :

சுற்றுப்புறச் சூழல் காரணமாக அடிக்கடி மூச்சுத் திணறல் அல்லது மூச்சு விட சிரமம் ஏற்பட்டால் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த நீரை காய்ச்சி குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

அதிக புகை மற்றும் தூசு உள்ள இடங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்திடுங்கள்.

ரத்த சோகை :

ரத்த சோகை :

இன்றைக்கு இளம் பருவத்தினர் பெரும்பாலானோர் சந்திக்கும் உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளில் ரத்த சோகை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை அதே நேரத்தில் பருவமடைந்து உதிரப்போக்கும் ஏற்படுவதினால் ரத்த சோகையினால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏலக்காய் நீர் குடிப்பதினால் அதன் தீவிர தாக்கத்திலிருந்து நாம் மீள முடியும்.

தொடர் இருமல் :

தொடர் இருமல் :

சிலருக்கு அதிக சூடு காரணமானவோ அல்லது பருவநிலை மாற்றம் காரணமாகவோ தொடர் இருமல் ஏற்பட்டிருக்கும். சளித்தொல்லை இல்லாது உங்களுக்கு இருமல் ஏற்பட்டால் இந்த நீரை குடித்தால் உடனடி பலன் கிடைக்கும்.

இருமலை கட்டுப்படுத்துவதுடன், உடல் சோர்வையும் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits Of Drinking Cardamon Water

Benefits Of Drinking Cardamon Water
Story first published: Wednesday, March 28, 2018, 13:00 [IST]