டயேரியா போகுதா?... இத சாப்பிடுங்க உடனே நின்னுடும்...

Posted By: Haleetha Begum M
Subscribe to Boldsky

நமது உடம்பில் கழிவுகள் பெருகி, நச்சுத்தொற்று ஏற்பட்டால் அதை வெளியேற்ற, நமது உடல் போராடும். அப்படி போராடும்போதுதான், நச்சுக்களை வெளியேற்ற வயிற்றுப் போக்கு உண்டாகிறது. நச்சுக்கள் வெளியுற வெளியேற நம்முடைய உடலில் உள்ள நீர்ச்சத்துக்களும் குறைய ஆரம்பிக்கும். உடனே மிகசும் சோர்ந்து விடுவோம். அதோடு, இந்த வயிற்றுப்போக்கு வந்த உடனே மெடிக்கல் ஷாப்புக்குப் போய் கண்ட மருந்துங்களையும் வாங்கிப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு வீட்டிலுள்ள இயற்கையான பொருள்களைக் கொண்டே சரி செய்து கொள்ளலாம்.

அப்படி என்னவெல்லாம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு என்னும் டயேரியா கட்டுப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜூஸ் மற்றும் சூப்

ஜூஸ் மற்றும் சூப்

வயிற்றுப் போக்கினால் உடல் இழந்த உப்பு சத்துகள் மற்றும் மினரல்களை ஈடுசெய்ய ஆப்பிள் ஜீஸ்கள் மற்றும் சூப்புகள் உதவும். ஆனால் எலுமிச்சை, அன்னாசிப்பழம், தக்காளி போன்ற அமிலம் நிறைந்த உணவுப்பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த உணவுப்பொருட்களில் உள்ள அமிலங்கள் ஏற்கனவே பாதிப்படைந்த குடலை மேலும் பாதிப்படைய செய்யும். ஓவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தேவையான ஜூஸ்கள் மற்றும் சூப் எடுத்துக்கொண்டு உடல் சக்தியிழக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு தோல் டீ

ஆரஞ்சு தோல் டீ

வயிற்றுப்போக்கை சரிசெய்ய காலம் காலமாக ஆரஞ்சு பழத்தோல் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது செரிமானத்தை துாண்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் இந்த டீ செய்ய இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். சாயம் ஏற்றப்பட்ட அல்லது ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட பழங்களைத் தவிர்க்க வேண்டும்.

செய்முறை

ஆரஞ்சு பழத்தோலை உரித்து, பின்னா் அந்த தோலை சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அந்த துண்டுகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பின் வடிகட்டி இனிப்பிற்காக தேன் சேர்த்து பருகலாம்.

சாதம்

சாதம்

வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த சாதம் நல்ல தீர்வாக அமையும். வயிற்றுப்போக்கு கட்டுக்குள் வரும் வரை வெள்ளை சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொள்ள வேண்டும்.

சாமந்தி டீ

சாமந்தி டீ

இந்த டீ பொதுவாக உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை அளிக்கக்கூடியது. வயிற்றுப் போக்கையும் இது கட்டுப்படுத்தும். குடல் தசை சுருக்கத்தை சரி செய்வதன் மூலமும், குடல் அழற்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இந்த டீ வயிற்றுப் போக்குக்கு சிறந்த நிவாரணியாக அமைகிறது.

தேன்

தேன்

தேன் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் என்பது பலரின் அசைக்க முடியாத நம்பிக்கை. நான்கு கரண்டி தேனை ஒரு கப் சுடுநீரில் கலந்து பின்னர் ஆற வைத்து குடித்து வர வேண்டும். வயிற்றுப் போக்குக்கு இது சுவையான மருந்து.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

பாக்டீரியா தொற்றால் வயிற்றுப்போக்கு ஏற்படும் போது ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்து கொள்வது மிக சரியான முடிவு. ஆப்பிள் சீடர் வினிகரில் பாக்டீரியா தொற்றை சரி செய்யும் பண்புகள் நிறைய உள்ளன. பெக்டின் என்னும் பொருள் ஆப்பிள் சீடர் வினிகரில் அதிகம் உள்ளதால், நாட்டுப்புற மருந்துகளில் இது நிறைய பயன்படுத்தப்படுகிறது. இந்த பெக்டின் குடல் தசைச் சுருக்கத்தை சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

ஆப்பிள் சாஸ்

ஆப்பிள் சாஸ்

ஆப்பிள் சாஸில் பெக்டின் அதிகம் உள்ளதால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த இது உதவும். இதை உலர்ந்த ரொட்டியில் தடவி, ஸ்நாக்ஸ் போல் சாப்பிட்டு வர, வயிற்றுப்போக்கிலிருந்து விரைவாக விடுதலை கிடைத்து விடும்.

ஊட்டமளிக்கும் உணவுகள்

ஊட்டமளிக்கும் உணவுகள்

வயிற்றுப்போக்கினால் கஷ்டப்படும் போது, உடலுக்குத் தேவையான ஊட்டமளிக்க வாழைப்பழங்கள், வெள்ளை சாதம், ஆப்பிள் சாஸ், உலர்ந்த ரொட்டி போன்ற பாதுகாப்பான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மோர்

மோர்

வயிற்றுப் போக்குக்கு மோர் சிறந்த தீர்வு என நம்பப்படுகிறது. ஆயுர்வேத முறைப்படி ஒரு டம்ளர் மோரில், அரை கரண்டி சுக்கு கலந்து, ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு முறை எடுத்து கொள்வதன் மூலம் வயிற்றுப் போக்கு சரியாகும்.

சீரக தண்ணீர்

சீரக தண்ணீர்

வயிற்றுப்போக்கினால் ஏற்பட்ட உடல் அசௌகரியங்களை குறைக்கவும், குடல் தசை சுருக்கங்களை சரிசெய்யவும் சீரக நீர் உதவுகிறது. கொதிக்கும் நீரில் சீரகம் சேர்த்து பின் நன்றாக மூடி போட்டு கொதிக்க வைத்து, பிறகு சுமார் பதினைந்து நிமிடங்கள் ஆற வைத்து, நன்றாக வடிகட்டி இந்த சீரக நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிளாக் காபி இல்லாத பிளாக் டீ

பிளாக் காபி இல்லாத பிளாக் டீ

பிளாக் டீயில் உள்ள டானின் என்ற பொருள் குடலில் உள்ள கோழை படலத்தை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இதனால் போதுமான நீர்ச்சத்துக்கள் உடலுக்கு கிடைப்பதன் மூலம், குடலில் ஏற்பட்ட நோய் தொற்றுகள் சரியாகிறது. குறிப்பாக பிளாக்பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரியினால் தயாரிக்கப்பட்ட டீ வயிற்றுப்போக்குக்கு சிறந்த தேர்வாக அமையும். இப்போது நிறைய பெர்ரி இலைகள் சாயம் ஏற்றப்பட்டு விற்கப்படுவதால், பிளாக் டீ செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். காஃபின் இல்லாத இலைகளை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் காஃபின் உடலின் நீர்ச்சத்தை வற்றி போக செய்யும். மூலிகை டீயில் காஃபின் இருக்காது. ருயிபோஸ் போன்ற ரெட் டீ வகைகள் பெருங்குடல் தசைகளை அமைதிப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: diarrhea health
English summary

11 Home Remedies for Diarrhea

Diarrhea is a sign that your body is trying to rid itself of something toxic in your system. Avoid over-the-counter medicines and instead try these natural solutions for relief. rice, broth or juice, orange peel tea, applesauce etc.