For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொத்தை பற்களை- அகற்றுவது ! ரூட் கெனால் செய்வது! எது நல்லது?

பாதிக்கப்பட பற்களை நீங்குவது சிறந்ததா? அல்லது ரூட் கேனால் செய்வது நல்லதா? என்று இந்த ஆய்வுக் கட்டுரை விளக்குகிறது.

By Peveena Murugesan
|

எப்பொழுதெல்லாம் பற்களில் தொற்று ஏற்பட்டு பிரச்சனை பெரிதாகிறதோ அதை தீர்க்க 2 வழிகள் உள்ளன அவை:
1.ரூட் கனால் சிகிச்சை
2.பற்களை அகற்றுவது.
ஆனால் பல் மருத்துவ நிபுணர், பல் ஆரோக்கியத்திற்கு ரூட் கனால் சிகிச்சையே சிறந்தது என்று கூறுகின்றனர்.

why is root canal treatment a better option than tooth

பல நோயாளிகள் அதிகமான பல் வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களிடம் பற்களை எந்த வித பக்க விளைவுகளும் இன்றி நீக்க சொல்கின்றனர். ஆனால் இது ஒரு நல்ல தீர்வு இல்லை. ஏனெனில் பற்களை நீக்குவதால் நீண்ட கால சிக்கல்கள் ஏற்படும் என்பது நோயாளிகளுக்கு தெரிவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்கள் நீக்கப்படுவதால் என்னாகும் !!

பற்கள் நீக்கப்படுவதால் என்னாகும் !!

பிரச்சனை என்னவென்றால் பல் நீக்கப்பட்டால் அந்த காலியான பகுதியை நிரப்ப அருகில் சுற்றியுள்ள பற்கள் இடம் பெயரும்.அதனால் கோணலான பற்கள் அமைப்பு (அ) உணவை கடிக்க இயலாமல் போகும் நிலை ஏற்படும்.

தலைவலி,தாடையில் வடிவம் மாறி உறுத்தும்,காது வலி,மயக்கம்,காதுகளில் பல்வகை சத்தம்,கடிப்பது மற்றும் மெல்லுதலில் பிரச்சனை என பல பிரச்சனைகள் ஏற்படும்.மேலும் பற்கள் இப்படி இடம் பெயர்வதால் எளிதாக தளர்ந்து விடும்.இதனால் அதிக பிரச்சனைகள் ஏற்படும்.

செயற்கை பற்கள் :

செயற்கை பற்கள் :

பல் நீக்கப்பட்டால் அதற்கு பதிலாக செயற்கை பல் ஒன்றை பொருத்தலாம்.செயற்கை பல் பொறுத்த பல்லிடைப் பாலம் (அ) பல் உள்வைப்பு தேவைப்படுகிறது. இவை அனைத்தும் கொஞ்சம் விலை உயர்ந்தவை .எனவே பற்களை நீக்காமல் ரூட் கனால் செய்யலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ரூட் கானால் :

ரூட் கானால் :

நிச்சயமாக ரூட் கனால் செய்யும் போது சில பிரச்சனைகள் ஏற்படும்.ரூட் கனால் என்பது பற்களின் இயற்க்கை வேர்களை நீக்கி செயற்கை வேர்கள் பொருத்தப்படும்.

எப்படி செய்யும்போது பல் கடினமானதை கடிக்கும்போது உடைய வாய்ப்புகள் அதிகம்.எனவே தான் ரூட் கனால் செய்யும் போது பல் மீது பாதுகாப்பு வளையம் போன்று கேப் மாட்டப்படும்.இது பல் உடையும் வாய்ப்பைக் குறைக்கிறது.

மருத்துவர் ஆலோசனை :

மருத்துவர் ஆலோசனை :

எனவே தான் பற்களில் எந்த பிரச்சனை என்றாலும் பல் அறுவை சிகிச்சை மருத்துவரிடம். ஆலோசனை பெற வேண்டும்.அவர் ரூட் கனால் செய்ய பரிந்துரை செய்தால் பற்களை காப்பாற்ற ரூட் கனால் செய்யலாம்.இந்த சிகிச்சை முறை ஆரம்ப கால சிகிச்சைக்கு பிறகு நீண்ட காலம் பற்களை காப்பாற்றும்.

பற்கள் :

பற்கள் :

பற்களை இழப்பது மற்றும் பற்களின் ஆரோக்கியம் குறைந்து காணப்படுவது தீவிர மருத்துவ நிலைக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சரியான நடவடிக்கை எடுத்தால் பல் இழப்பையும்,உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க முடியும். ரூட் கனால் மற்றும் பல் பிரித்தெடுத்தல் இவை இரண்டில் ரூட் கனால் செய்வதே சிறந்தது என்று பல விவாதங்களின் அடிப்படையில் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why is root canal treatment a better option than tooth

This article reveals why is root canal treatment better option for decayed tooth
Story first published: Tuesday, February 14, 2017, 12:45 [IST]
Desktop Bottom Promotion