திடீரென ஒருவர் உடல் எடையை குறைத்தால் உண்டாகும் ஆபத்துகள்!!

By: Bala Karthik
Subscribe to Boldsky

உடல் பருமனால் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்பல. பருமன் அதிகரிக்கும் பட்சத்தில் நமக்கு ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம். மூட்டுவலியினால் அவதி, உடல் பருமனால் ஏற்படும் ஆபத்து, நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அவலம், உடம்பில் அதிகம் ஏற்படும் கொழுப்பு சத்து, உயர் இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் என அளவுக்கு அதிகமான பருமனால், உடம்பில் ஏற்படும் விளைவுகள், எண்ணில் அடங்காதவை.

this is why unexpected weight loss can be dangerous

தன் உடலை என்றுமே மற்றவர்கள் ரசிக்கும் படி ஒல்லியாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்குள் அதிகரிக்க, உணவு முறையில் கட்டுப்பாடு, (Diet Control) உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல் என ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், இவை வருங்காலத்தில் ஆபத்தை விளைவிக்கும் கொடியது என்று அவர்கள் உணருவதே கிடையாது.

ஒருவன் எடையை திடிரென்று குறைக்க நினைக்கும் இந்த முயற்சி, இயற்கைக்கு எதிரான ஒன்று. விளைவு, தங்களுடைய வாழ்வின் பிற்காலத்தில் பற்பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அந்த பிரச்சனைகளும் இவர்களை இயற்கையாய் மட்டும் அனுகாமல், அறுவை சிகிச்சை, காயங்கள் என்று செயற்கையை நோக்கியும் அழைத்து செல்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 போஷாக்கின்மை (அ) சத்து குறைபாடு:

போஷாக்கின்மை (அ) சத்து குறைபாடு:

நாம் உணவை உட்கொள்ளாமல் மனம் கூறிய வார்த்தையை கேட்டு உண்ணாவிரதம் இருப்போமானால், அதிவிரைவில் நம் உடல் எடை குறைந்து போகும். அதன்பிறகு, நம் உடல், சத்துள்ள உணவுகளை மறந்து., ஏற்றுக்கொள்ள மறுத்து அடம்பிடிக்கிறது.

இந்த மோசமான பிரச்சனையை தான் நாம் போஷாக்கின்மை அல்லது சத்து குறைபாடு என்று கூறுகிறோம். இவ்வாறு நம் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி முற்றிலும் குறைந்து நம்மை இறப்பை நோக்கி இறுதியில் அழைத்தும் செல்கிறது.

சர்கோபீனியா:

சர்கோபீனியா:

இது நம்முடைய எழும்பு தசைகளை கொஞ்சம் கொஞ்சமாய் வழுவிழக்க செய்துவிடுகிறது. ஆம், நல்ல சத்துள்ள ஆகாரங்களை நாம் எடுக்க தயங்கும்போது, நம்முடைய உடல் எடை குறையும். அப்படி குறையும் பட்சத்தில் இந்த எழும்பு தசைகள் முற்றிலும் வழுவிழந்து நம் ஆற்றலை உறிஞ்சிவிடுகிறது.

புற்று நோய்:

புற்று நோய்:

ஆராய்ச்சியாளர்கள் பார்வையில் இன்று கூறப்படும் ஒரு உண்மை என்னவென்றால், பல வகையான புற்று நோய்களுக்கு முக்கிய காரணம் இந்த உடல் எடை குறைப்பு தானாம். நாம் உடலில் என்றுமே புற்று நோயை அழிக்கும் எதிர்ப்பு செல்கள் இயற்கையாகவே இருக்கும்.

நம் உடல் எடை குறையும் பட்சத்தில் அந்த இயற்கை செல்கள் அழியும் தருணமும் ஒருவனுக்கு உடல் எடை குறைவால் ஏற்படுகிறது. இதனால் செல்களின் இனப்பெருக்கத்தில் அசாதாரணமான ஒரு நிலைமை ஏற்படுகிறது. அது புற்று நோயை உருவாக்கும் பேராபத்தும் உள்ளது.

வயிற்று புண் நோய்:

வயிற்று புண் நோய்:

நம் உடலின் ஒரு முக்கியமான பாகம் தான் இந்த வயிற்று பகுதி. ஆம், இந்த வயிற்று பகுதி ஒரு இயந்திரம் போல் செயல்படுவதினால் தான், கழிவுகளை அகற்றி, சத்தான உணவுகளில் உள்ள வைட்டமின்களை மற்றும் அனுமதித்து உடலுக்கு வழு சேர்க்கிறது.

இந்த வயிற்றை நாம் பேணி காக்க வேண்டியது மிகவும் அவசியம். தவறும் பட்சத்தில் வயிற்றில் புண் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் உடலை கரைத்துவிடுகிறது. நம் உடல் எடை குறையும் பட்சத்தில் இதனை நாம் உணரமுடியும். இந்த வயிற்று புண் கோளாறுக்கு மருத்துவ வசதியை, தாமதமின்றி நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உருவாகிறது.

மன அழுத்தம்:

மன அழுத்தம்:

உடல் எடை குறையும் பட்சத்தில் மன அழுத்தமும் ஒருவனுக்கு ஏற்படுகிறது. நாம் சாப்பிடாமல் பட்டினி கிடக்கும் பொழுது நம் உடல் எடையும் குறைந்து போகும். இதனால், மூளையில் உள்ள செரோடோனின் அளவை இது முற்றிலும் பாதித்துவிடுகிறது.

 இதய நோய்:

இதய நோய்:

எப்பொழுது இதயம், போதுமான இரத்தத்தையும் ஆக்சிஜனையும் உடம்பில் பம்ப் செய்ய மறுக்கிறதோ அப்பொழுது ஒருவனுக்கு இதய நோய் ஏற்படுகிறது. அதுமட்டும் அல்லாமல், நம் உடல் எடை குறைந்து இதய தசைகளை வழுவிழக்கவும் செய்கிறது.

இளம் வயதிலே ஏற்படும் முதுமை:

இளம் வயதிலே ஏற்படும் முதுமை:

திடிரென்று நம்முடைய உடல் இழைக்க தொடங்கவே, நம் உடம்பில் இருக்கும் சத்துகள் குறைய தொடங்கும். இதனால், முதுமை பருவத்தை தோற்றுவிக்கும் செல்கள் இளமைபருவத்திலேயே முன் நடத்தி செல்ல, மிக இளமையிலே நாம் முதுமை அடையும் அவல நிலை உருவாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

this is why unexpected weight loss can be dangerous

Reasons are here why unexpected weight loss can be dangerous
Story first published: Tuesday, February 28, 2017, 19:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter