ப்ரோஸ்டேட் கேன்சரால் வரும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களை தாக்கும் புற்றுநோய்களில் ஒன்று ப்ரோஸ்டேட் புற்றுநோய். இதனால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதுடன் அவருடன் இருப்பவர்கள் சில முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேன்சர் :

கேன்சர் :

முதலில் உங்கள் வீட்டு ஆண் ஒருவருக்கு ப்ரோஸ்டேட் கேன்சர் வந்துவிட்டதென்றால் அதனைப்பற்றிய புரிதல் முதலில் உங்களுக்கு வேண்டும். அந்நோய் குறித்து மருத்துவரிடம் முழு விவரத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மருத்து,மாத்திரை,வலி போன்றவற்றோடு பொருளாதார சிக்கல்களையும் சமாளிக்க வேண்டும்.

பாதிப்புகள் :

பாதிப்புகள் :

இந்நோய்க்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைகளால் பல சைட் எஃப்க்ட்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவைப்பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு நிச்சயமாக இருக்க வேண்டும். உங்களுடைய தன்னம்பிக்கைதான் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பலத்தை கொடுக்கும் என்பதையும் மறந்திட வேண்டாம்.

மலட்டுத்தன்மை :

மலட்டுத்தன்மை :

ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டால் மலட்டுத்தன்மை அதிகரிக்கும். அறுவை சிகிச்சையின் போது செய்யப்படும் ரேடியேஷன் தெரபியால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

ஆண்மை :

ஆண்மை :

ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு ஆண்மை குறையும். சிகிச்சையின் தன்மை பொறுத்து நிரந்தரமாகவும் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கும் இருக்காது.

டாய்லெட் :

டாய்லெட் :

சிறுநீர் கழிப்பதிலும் மாற்றங்கள் ஏற்படும். அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைக்க முடியாது. டயரியா போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதால் சுகாதாரமாக இருத்தல் வேண்டும்.

ஹார்மோன் மாற்றங்கள் :

ஹார்மோன் மாற்றங்கள் :

ப்ரோஸ்டேட் புற்று நோய்க்கு ஹார்மோன் தெரபி சிகிச்சை அளிக்கப்படும். அப்படி கொடுக்கும் பட்சத்தில் உடல் எடை கூடுதல், தசை வலி, எலும்புகள் வலுவிழந்து ஃப்ராக்சர் ஏற்படக்கூடும்.

மறதி, பிரச்சனைகளை கையாளுதல் போன்றவற்றிலும் தடுமாற்றங்கள் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side Effects Of Prostate Cancer

Side effects of Prostate cancer Make you Worse.Here some tips to get rid of the pain.
Story first published: Tuesday, July 25, 2017, 17:25 [IST]
Subscribe Newsletter