இந்த உடல்நலக் கோளாறுகளுக்கு உட்கொள்ளும் மருந்துகள் செக்ஸ் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்!

Posted By:
Subscribe to Boldsky

செக்ஸ் வாழ்வில் ஏற்படும் பிரச்சனையால் உடலளவில் பெரிய வலி ஏற்படாவிட்டாலும், மனதளவில் பெரும் வலியை ஏற்படுத்தும். இதனால், மன அழுத்தம் அதிகரித்து உடல்நலக் கோளாறுகள் உண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன.

ஒருசில உடல்நல பிரச்சனை அல்லது கோளாறுகள் இருந்தும் அதை சரி செய்ய ஆண்கள் எடுத்துக் கொள்ளும்மருந்துகளால் கூட ஆண்மை கோளாறு, விறைப்பு பிரச்சனை போன்றவை ஏற்படலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தம்!

இரத்த அழுத்தம்!

இரத்த அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் சில மருந்துகள் உடலுறவு வாழ்க்கையில் தாக்கங்கள் ஏற்படுத்தக் கூடும்.

பீட்டா பிளாக்கர்ஸ்: விறைப்புத்தன்மை கோளாறு / விறைப்பு குறைதல்.

டையூரெடிக்ஸ்: ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்க செய்யும். இதனால் விறைப்பு குறையலாம்.

ஆன்டி-டிப்ரசன்ட்!

ஆன்டி-டிப்ரசன்ட்!

மன சோர்வு / மன கலக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு உட்கொள்ளப்படும் ஆன்டி டிப்ரசன்ட் மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் செக்ஸ் வாழ்க்கை கோளாறுகள்...

SSRI மருந்துகள் (தடைசெய்யப்பட்ட சில செரோட்டோனின்கள்): ஆண்குறி விறைப்பு கோளாறு. பாலியல் செயற்பாடு குறைவு.

உடலுறவு செயல்பாடு குறித்த மூளையில் இருக்கும் சில பகுதிகளில் தாக்கத்தை உண்டாக்கி, உடலுறவு செயல்பாடு திறனை பாதிக்கிறது.

கொலஸ்ட்ரால் மருந்துகள்!

கொலஸ்ட்ரால் மருந்துகள்!

ஸ்டேட்டின்கள் மற்றும் ஃபைப்ரேட்கள்: உயர் கொழுப்பை கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளப்படும் இந்த மருந்து பாலியல் ஹார்மோன்கள் உருவாக்கத்திற்கு உதவும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களில் தாக்கத்தை உண்டாக்குகின்றன.

எச்2 பிளாக்கர்ஸ்!

எச்2 பிளாக்கர்ஸ்!

இந்த எச்2 பிளாக்கர்ஸ் மருந்துகள் வயிறு, குடல் சார்ந்த பிரச்சனைகள், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் போன்றவைக்கு சிகிச்சை அளிக்க தரப்படுகிறது. இவை செக்ஸ் உணர்வு குறைய, விறைப்பு குறைய காரணியாக அமைகிறது.

கருத்தில் கொள்ள வேண்டியவை!

கருத்தில் கொள்ள வேண்டியவை!

ஒருவேளை இந்த மருந்துகள் நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தால் உடனே நிறுத்திவிட வேண்டாம். உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, இதுதான் உங்கள் உடலுறவு வாழ்க்கை தொய்வு அடைய காரணமா என பேசி பிறகு மருத்துவர் ஆலோசனையின் படி மருந்து உட்கொள்வதே சரியானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Prescription Medication That Can Ruin A Man’s Sex Life!

Prescription Medication That Can Ruin A Man’s Sex Life!
Story first published: Tuesday, August 8, 2017, 17:30 [IST]