தியானம் செய்வதால் பெறும் நன்மைகள் என்ன? - சிந்திங்க மக்களே!

Posted By:
Subscribe to Boldsky

தியானம் செய்வதால் என்ன நன்மை கிடைத்துவிடும் என சிலர் என்னலாம். ஆட்சி, பதவி கிடைக்குமா? என்றால் அது கூட சிலருக்கு கிடைக்கிறது. அது வேறு கதை.

ஆனால், தியானம் செய்வது தலை முதல் கால் வரை, உடலின் வெளிப்புற, உட்புற பாகங்கள் அனைத்திற்கும் நல்ல பயனளிக்கும் என்பது தான் உண்மை.

பைசா செலவு செய்யாமல் நீங்கள் நல்ல ஆரோக்கிய நன்மைகள் பெற தியானம் ஒன்று மட்டும் தான் இருக்கிறது. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்களது உறவுகளின் ஆரோக்கியத்தையும் வலிமை அடைய செய்யும்.

தியானம் செய்வதால் நமது உடலுக்கு கிடைக்கும் சிறந்த 7 நன்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய் எதிர்ப்பு!

நோய் எதிர்ப்பு!

உடல் மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்ட முடியும். இதனால் புற்று நோயாளிகளை கூட ரிக்கவர் ஆக்கலாம் என ஓஹியோ மாகாண பல்கலைகழகத்தின் ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

தினமும் தியானம் செய்வது மார்பக புற்றுநோய் வளராமல் தடுக்கிறது. இது இயற்கையாக புற்றுநோய் கட்டியை உருவாக்கும் செல்களை அழிக்க பயனளிக்கிறது.

உணர்வு சமநிலை!

உணர்வு சமநிலை!

எமோஷனலாக ஒருவரின் நிலையை சீராக வைத்துக் கொள்ள தியானம் பெருமளவு உதவுகிறது. இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை இலகுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மனதில் ஆழ பதிந்திருக்கும் அழுக்கு, நிறைகுறைகள் போன்றவற்றில் இருந்து வெளிவர தியானம் ஒரு சிறந்த கருவி.

கருவளம்!

கருவளம்!

மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைகழக ஆய்வு மட்டும் துருக்கியின் ட்ரக்கியா பல்கலைகழக ஆய்வுகளில் தியானம் செய்வது மூலமாக ஆண், பெண் இருவர் மத்தியிலும் கருவளம் அதிகரிக்க செய்யலாம் என அறியப்பட்டுள்ளது.

ஆண்கள் மத்தியில் விந்தணு குறைபாடு, விந்து நீந்துதல் போன்றைவை சரியாக, கருவளத்தை ஊக்குவிக்க தியானம் பயனளிக்கிறது.

குடல் எரிச்சல் நோய்!

குடல் எரிச்சல் நோய்!

Irritable Bowel Syndrome எனப்படும் குடல் எரிச்சல் நோய் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை தியானம் செய்து வந்தால் நல்ல மாற்றம் உணரலாம். இது உப்பசம், வயிற்றுப் போக்கு, செரிமான கோளாறுகள் போன்றவை சரியாக உதவுகிறது. இதை நியூயார்க் பல்கலைகழக ஆய்வாளர்களும் தங்கள் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

குறைந்த இரத்த அழுத்தம்!

குறைந்த இரத்த அழுத்தம்!

ஹார்வார்ட் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில், தியானம் செய்வதால் அழுத்தம் சார்ந்த ஹார்மோன்கள் தூண்டப்பட்டு, அவற்றின் மூலமாக குறைந்த இரத்த அழுத்தம் சீர் செய்யப்படுகிறது என அறியப்பட்டுள்ளது.

அதே போல பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வறிக்கை பத்திரிக்கை ஒன்றில் குறைந்த இரத்த அழுத்தம் உடைய நோயாளிகளுக்கு தியான பயிற்சி அளிப்பதால் அதில் இருந்து விடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி!

அமைதி!

தியானம் செய்பவர்கள், தியானம் செய்யாதவர்கள் என பிரித்து நடத்திய ஆய்வில், தியானம் செய்பவர்கள் அதிகம் கோபப்படுவதில்லை, அதே போல அவர்கள் எல்லா சூழலையும் அமைதியான வழியில் கையாள்கிறார்கள். இதனால், அவர்களால் சிக்கலான சூழல்களையும் கூட எளிமையாக காண முடிகிறது என அறியப்பட்டுள்ளது.

இன்ஃப்ளமேஷன்!

இன்ஃப்ளமேஷன்!

ஸ்ட்ரஸ் அதிகரிப்பது இன்ஃப்ளமேஷன் உண்டாக காரணியாக இருக்கிறது. இது இதய நோய், மூட்டு நோய், ஆஸ்துமா மற்றும் சரும பிரச்சனைகள் அதிகரிக்க செய்யும். அமெரிக்காவின் எமோரி பல்கலைகழக ஆய்வாளர்கள் ரிலாக்ஸ் செய்வதால் இதை தடுக்கலாம் என கூறியுள்ளனர்.

கனடாவின் மெக்கில் பல்கலைகழகம் தியானம் செய்வதால் சொரியாசிஸ் அறிகுறிகள் குறைகிறது என கண்டறிந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Meditation!

Health Benefits of Meditation!
Subscribe Newsletter