உடலில் ஏற்படக்கூடிய பூஞ்சைத் தொற்றுப் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஈஸ்ட் தொற்று என்பது எவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான தொற்றுநோய். பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுகளால் ஏற்படக்கூடிய தொற்றுகள் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்திடும். சுகாதார தன்மை குறைவு, நீரிழிவு, கர்ப காலம், ஹார்மோன் மாற்றங்கள்,சர்க்கரையை அதிகமாக உணவில் சேர்ப்பது,மன அழுத்தம், சிறுநீரகப் பாதைகளில் ஏற்படுகிற தொற்றுகள் போன்றவை தான் இப்பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

ஈஸ்ட் தொற்று உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படக்கூடியது. உடலில் அதிகமாக வியர்கக்கூடிய பகுதி மற்றும் அதிகமாக ஈரப்பதம் இருக்கக் கூடிய பகுதிகளில் ஈஸ்ட் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

Disturbing Facts You Never Knew About Your Yeast Infections

இதைப் பற்றிய தொடர்ந்து தவறான புரிதல்களே நம்மிடையே இருந்து வருகிறது. இந்நிலையில் அதனைப்பற்றிய சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள் சில உங்களுக்காக....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள் :

அறிகுறிகள் :

முக்கியமாக அரிப்பு,தோல் சிவந்து தடித்தல்,வெள்ளையான ஓர் படலம் உருவாவது ஆகியவை தான் முக்கியக் அறிகுறிகாளாக இருக்கின்றன. இதைத் தாண்டி பிறப்புறுப்பில் ஏற்படும் போது, அவை கெட்ட நாற்றமும் சேர்ந்து கொள்கிறது.

இதனை ஆரம்பக்கட்டதிலேயே பார்த்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இந்தத் தொற்று ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா?

பேட் :

பேட் :

பொதுவாக இந்தத் தொற்று அதிக ஈரப்பதம் இருக்கும் இடங்களில் தான் வேகமாக வளரும், மாதவிடாய் காலங்களில் நீண்ட நேரம் பேட் மாற்றப்படாமல் இருந்தால் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆண்ட்டி பயாட்டிக் :

ஆண்ட்டி பயாட்டிக் :

நீங்கள் தொடர்ச்சியாக ஆண்ட்டிபயோட்டிக் மாத்திரைகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால் உங்களுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோயாளிகளுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. சர்க்கரையில் இருக்கக்கூடிய குளுக்கோஸ் தான் ஈஸ்ட் வளர்வதற்கான அடிப்படைக்காரணமாக இருக்கின்றன.

இதைத் தவிர உறவு கொள்வதாலும் இத்தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர ஈஸ்ட் தொற்று பற்றி நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் சில தவறான கட்டுக்கதைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

உடலுறவு :

உடலுறவு :

ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உடலுறவு தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறானது. ஈஸ்ட் தொற்று உங்கள் இணைக்கு இருந்தால் அது உங்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறதே தவிர இது மட்டுமே காரணமல்ல

ஆண்கள் :

ஆண்கள் :

இந்த ஈஸ்ட் தொற்று பெண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய ஒன்று. ஆண்களுக்கு வராது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தவறானது இந்த ஈஸ்ட் தொற்று பெண்களுக்கும் ஏற்படக்கூடும்.

லேப் டாப்பினை நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தி வந்தால் ஈஸ்ட் தொற்று ஏற்படும் என்று சொல்கிறார்கள் அப்படி எதுவும் இல்லை.

பிறப்புறுப்பு :

பிறப்புறுப்பு :

ஈஸ்ட் தொற்று பிறப்புறுப்புகளில் மட்டுமே ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதுவும் தவறானது, சருமம், வாய், கால் பாதங்கள்,மார்பகப் பகுதி போன்ற பகுதிகளிலும் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு.

பூண்டு :

பூண்டு :

ஈஸ்ட் தொற்றினை பூண்டு சரி செய்யும் என்று சொல்லப்படுகிறது. இது தவறானது. பூண்டில் ஆண்ட்டி செப்டிக் துகள்கள் இருக்கிறது தான் ஆனால் அவை ஈஸ்ட் தொற்றினை சரி செய்யாது.

உங்களது சில அன்றாடப்பழக்கங்கள் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கும், அதனை அதிகப்படுத்தும் காரணங்களாகவும் இருக்கின்றன.

டைட்டான ஆடைகள் :

டைட்டான ஆடைகள் :

அதிக இறுக்கமான டைட்டான ஆடைகள் அணிவது, ஃபேஷன் என்ற பெயரில் டைட்டான ஜீன்ஸ் அணிவது இப்பிரச்சனையை அதிகப்படுத்தும்.

சரியான காற்றோட்டம் இல்லாதத்தாலும், வியர்வை ஒரேயிடத்தில் உறிஞ்சப்பட்டு இருப்பதாலும் இத்தொற்று ஏற்படுகிறது.

உள்ளாடைகள் :

உள்ளாடைகள் :

சுத்தமான உள்ளாடைகளை அணிவது அவசியம். சரியாக சுத்தம் செய்யப்படாத அதே சமயம் உங்களுக்கு பொறுத்தமில்லாத சைஸ்களில் உள்ளாடைகளை அணிந்தாலும் இத்தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

உணவு :

உணவு :

சர்க்கரை உணவுகள் அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதே சமயம், கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும், மது,வொயிட் பிரட்,சீஸ் போன்றவற்றில் ஏற்கனவே ஈஸ்ட் இருக்கும். அதனை தொடர்ந்து உட்கொள்வதால் கூட ஈஸ்ட் தொற்று அதிகரிக்கக்கூடும்.

மருதாணி :

மருதாணி :

மருதாணியின் துளிர் இலைகள் ஒருகைப்பிடி அளவுக்கு எடுக்கவும். இதில், 2 பல் பூண்டு, 6 மிளகு ஆகியவற்றை லேசாக தட்டிபோடவும். கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி 50 மில்லி அளவுக்கு குடித்துவர ரத்தம் தூய்மை பெறும். தோலில் ஏற்படும் அரிப்பு, தொற்று, சிறுகொப்புளங்கள், படர்தாமரை போன்றவை விலகிப்போகும்.

மருதாணி நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்க கூடியது.

அருகம்புல் :

அருகம்புல் :

அருகம்புல் பொடி, கால் பங்கு மஞ்சள் பொடி சேர்த்து கலந்து பசையாக்கி உடலில் அரிப்பு இருக்கும் இடத்தில் தேய்து குளித்தால் தோலில் ஏற்படும் அரிப்பு குணமாகும்.

தயிர் :

தயிர் :

தயிரில் இருக்கக்கூடிய லாக்டோ போஸிலஸ் என்ற நல்ல பாக்டீரியாக்கள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை, அதோடு இது நம் உடலில் இருக்கக்கூடிய அமில காரத்தன்மையை சரி செய்திடும்.

தினமும் நாம் சாப்பிடும் உணவுகளில் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

இது பேக்டீரியா தொற்றினை பெருகாமல் கட்டுக்குள் கொண்டு வர உதவிடுகிறது. ஒரு ஸ்பூன் வினிகரை வெந்நீரில் கலந்து குடித்து வரலாம். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும்.

பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடா சிறந்த கிருமி நாசினி. ஆன்டி -பயாடிக் ஆகும். மூன்று ஸ்பூன் பேக்கிங் சோடாவை சம அளவு நீரில் கலந்து கொள்ளவும்.

பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தினில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் கலவையைக் கொண்டு கழுவவும். 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரினால் கழுவவும். தினம் இரு முறை செய்யலாம்.

தேயிலை எண்ணெய்:

தேயிலை எண்ணெய்:

தேயிலை எண்ணெய் தொற்றுக்களை அதிகரிக்க விடாமல் செய்கிறது. ஆண்ட்டி செப்டிக்காகவும் செயல்படுகிறது. துர்நாற்றத்தைப் போக்குகிறது. 4-5 சொட்டு தேயிலை ஆயிலை, வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவேண்டும்.

பின் பாதிக்கப்பட்ட இடத்தினில் அதனைக் கொண்டு கழுவ வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

எதிர்ப்பு சக்தி நம் உடலில் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கும். ஆகவே சரிவிகித ஊட்டச்சத்து கொண்ட உணவினை உண்ணுங்கள். நோய் எதிர்ப்பை தூண்டும் உணவுகளை அதிகம் உண்ணுங்கள்.

ஆரஞ்சு, க்ரீன் டீ, மிளகு, கீரை, ஆப்பிள், மஷ்ரூம், ப்ருக்கோலி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். விட்டமின் டி அதிகம் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய நீர் அருந்தவும், போதிய ஓய்வும் முக்கியம். உடற்பயிற்சியும்,சீரான நல்ல மன நிலையும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Disturbing Facts You Never Knew About Your Yeast Infections

Disturbing Facts You Never Knew About Your Yeast Infections
Story first published: Friday, November 24, 2017, 18:02 [IST]