For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரத்தப் புற்று நோய் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!!

ரத்தப் புற்று நோய் ஆபத்தான புற்று நோய்களில் ஒன்று. இதன் அறிகுறிகள் பற்றி தெளிவாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து தெய்ர்ந்து வைத்துக் கொள்ளுங்கள்.

|

ரத்தப் புற்று நோய் ரத்த செல்களில் புற்று நோய் செல்கள் உருவாகி அவை இரு மடங்கு பெருகுவதால் உண்டாகிறது.

எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் ரத்த செல்களில் மரபணு மாற்றம் உண்டாகி அவை புற்று நோய் செல்களாக மாறி இரட்டிப்பாகிறது. இதுவே ரத்தப் புற்று நோயாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளிர் சருமம் :

வெளிர் சருமம் :

ரத்த செல்களில் ஹீமோகுளோபினால் சிவப்பு நிறம் உண்டாகிறது. அசாதரண வளர்ச்சி கொண்ட புற்று செல்களுக்கு ஹீமோகுளோபின் அமைப்பு மாறுபடும். இதனால் வெளிர் நிறம் வரும்.

உடல் சோர்வு :

உடல் சோர்வு :

தொடர்ச்சியாக வேலை செய்ய இயலாது. தலை சுற்றும். உடல் மிகவும் சோர்வடையும்.

நோய்வாய்ப்படுதல் :

நோய்வாய்ப்படுதல் :

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமானது ரத்த செல்களான வெள்ளையணுக்கள். லுகீமியா நோயால் வெள்ளையணுக்கள் உற்பத்தியாகாது. இதனால் தொடர்ச்சியாக நோய் வாய்படுவார்கள்.

மூச்சிரைப்பு :

மூச்சிரைப்பு :

மூச்சு சீராக இருக்காது. அடிக்கடி மூச்சிரைப்பு வரும். சுவாசிப்பதிலும் த்டங்கலிருக்கும். மூச்சுத் திணறல் உண்டானால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது அவசியம்.

காயம் ஆறாமை :

காயம் ஆறாமை :

உடலில் காயம் ஏற்பட்டால் அவை ஆறாமல் நீண்ட நாட்கள் ஆகியும் ஆறவில்லையென்றால் அது ரத்தப் புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

மற்ற அறிகுறிகள் :

மற்ற அறிகுறிகள் :

இரவில் தூங்கும்போது வியர்த்தல் தாள முடியாத மூட்டு வலி ஆகியவைகள், திடீரென உடல் எடை மிகவும் குறைதல் ஆகியவைகள் ரத்தப் புற்று நோயின் மற்ற அறிகுறிகளாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 signs of Leukemia every woman needs to know

6 signs of Leukemia every woman needs to know
Story first published: Saturday, March 4, 2017, 13:18 [IST]
Desktop Bottom Promotion