வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லையா? இந்த 3 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!

Posted By:
Subscribe to Boldsky

நாம் செய்யும் தவறுகளுக்கு பெரிய காரணங்கள் ஏதும் இருக்காது. நமக்கே அறியாமல் நாம் செய்ய தவறிய மிக சிறிய தவறு தான் நல்ல ரிசல்ட்டை தவிர்த்திருக்கும். பெரும்பாலும் இப்போது அனைவரும் கூறும் குறைபாடு, சரியாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதாகும்.

Three Simple Ways to Improve Your Focus

இதற்காக சமூக தளங்கள், இல்லறத்தில் நடக்கும் சம்பவங்கள் போன்றவற்றை அவர்கள் காரணமாக கூறுவார்கள். ஆனால், நீங்கள் தான் அதை சரியாக திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். நமது தவறுக்கு நாம் தான் முழு பொறுப்பு.

இந்த மூன்று வழிகளை நீங்கள் ஃபாலே செய்ய ஆரம்பித்தால், வேலையில் கவனச் சிதறல் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

முதல் மற்றும் கடைசி ஒருமணிநேரம்...

காலையில் எழுந்ததும், இரவு உறங்க செல்லும் முன்பும் முதல் மற்றும் கடைசி ஒருமணி நேரம் கணினியில் வேலை செய்வதை தவிர்த்து விடுங்கள்.

ஆய்வு!

ஆய்வு!

கடந்த 2012-ல் நடந்த அமெரிக்க ஆர்மி ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது தான் இந்த தகவல். சமூக தளங்கள் என்றில்லை, அலுவலக மின்னஞ்சல்களை கூட எழுந்தவுடன் உடனே எடுத்து பார்க்க வேண்டாம். சிறிது நேரம் உங்கள் உடல் சீராக செயல்பட செய்யுங்கள். இது உங்கள் மனதும் உடலும், இலகுவாக உணரவும், நாள் முழுதும் சோர்வடையாமல் இருக்கவும் உதவும்.

வழி #2

வழி #2

வீட்டு வேலை - அலுவலக வேலை...

உங்கள் வீட்டு வேலைகளையும், அலுவலக வேலைகளையும் கலந்து ஆலோசித்து உங்களை நீங்களே குழப்பிக் கொள்ள வேண்டாம். வீட்டு வேலைகளை வீட்டிலும், அலுவலக வேலையை அலுவலகத்திலும் முடித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

இல்லையேல், இரண்டிலும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

ஆய்வு!

ஆய்வு!

பாஸ்டன் கன்சல்டிங் குழு நடத்தி, ஹார்வர்ட் மேலாண்மை அறிக்கையில் பிரசுரம் ஆன ஆய்வறிக்கையில், வீடு மற்றும் அலுவலக வேலையில் தனிப்பட்ட திட்டமிடுதல் முக்கியம். இது இல்லையேல் அநாவசியமாக நீங்கள் எனர்ஜியை இழக்க கூடும். வாரத்தில் ஒருசில மணி நேரத்தை ஒதுக்கி, அந்த வாரத்திற்கான வீடு மற்றும் அலுவல் வேலைகளை எப்படி செய்ய வேண்டும் என திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

வழி #3

வழி #3

எதையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்...

நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்க வேண்டும். ஆனால், அவை யாரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

சிலர் அலுவலக குறிப்புகளை அலுவலகத்திலும், வீட்டு குறிப்புகளை வீட்டிலும் தனித்தனியே, ஆங்காங்கே வைத்து குழப்பிக் கொள்வார்கள்.

அனைத்தும் உங்கள் கையில் இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள். இதனால், நீங்கள் செய்யவிருக்கும் மற்றும் செய்ய வேண்டிய வேலைகளில் மறதி உண்டாகிறது.

ஆய்வு!

ஆய்வு!

2008-ம் ஆண்டு விர்ஜினியா டேக் நடத்திய ஆய்வில், யாரெல்லாம் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே இடத்தில் குறித்து வைக்காமல், ஆங்காங்கே குறித்து வைத்து வேலை செய்கிறார்களோ அவர் தான் தேவையில்லாத கவன சிதறல், குழப்பம், கவலை அடைந்து காண்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Three Simple Ways to Improve Your Focus

Three Simple Ways to Improve Your Focus
Subscribe Newsletter