Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மனதை ஒருமுகப்படுத்தும் நடராஜாசனம் பற்றி தெரியுமா?
மனதை ஒருமுகப்படுத்துவது என்பது கடினமான விஷயம்தான். அதுவும் குழந்தைகளுக்கு ஒரு இடத்தில் அமர்ந்து அரை மணி நேரம் படிப்பது என்றாலே மிகவும் சவாலான விஷயமாகவே இருக்கிறது. பெரியவர்களுக்கு மன அழுத்தம் காரணமாக வேலையில் ஒன்றாமல் இருப்பது, என எல்லாருக்குமே இது கை கூடாத விஷயமாகவே இருக்கிறது.

இந்த மாத்திரை சாப்பிட்டால் ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்துதல் அதிகரிக்கும் என நிறைய விளம்பரங்கள் வந்தாலும் அவை நிரந்தர தீர்வினை தரமுடியாது.
யோகாவில் உள்ள நடராஜாசனம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்தும். இது நாட்டியத்தின் இறைவனான நடராஜனின் தோற்றம் போல் இந்த ஆசனம் செய்வதால் இந்த பெயர் பெற்றுள்ளது.
இந்த ஆசனத்தால் மனதை ஒருமுகப்படுத்துதல் மட்டுமன்றி பல்வேறு உடல் உபாதைகளுக்கும் தீர்வுகள் தருகின்றது.
ஆரம்பத்தில் இந்த ஆசனத்தை செய்யும்போது, பேலன்ஸ் செய்ய கடினமாக இருந்தால் சுவற்றைப் பிடித்துக் கொண்டு செய்யலாம்.
நாளடைவில் பழகியவுடன் சுவரைப் பிடிக்காமல் இந்த யோகாவை செய்யலாம். எப்படி செய்வது எனப் பார்க்கலாம்
செய்முறை :
நேராக தடாசனத்தில் நில்லுங்கள். ஆழ்ந்து மூச்சை விட்டபடி, வலது காலை பின்னாடி தூக்குங்கள். வலது காலை வலது கையால் பிடித்துக் கொள்ளவும்.
உங்களின் மொத்த எடையையும் இடது கால் தாங்கும்படி பேலன்ஸ் செய்து கொள்ளுங்கள்.
இப்போது மெதுவாக இடதுகையை முன்னாடி நீட்டவும். உங்களின் நீட்டிய இடது விரல்களுக்கு நேராக உங்கள் பார்வையை குவியுங்கள்.
இந்த நிலையில் 20 நொடிகள் நிற்கவும். பின்னர் மெதுவாய் கால், கைகளை தளர்த்து இயல்பு நிலைக்கு வாருங்கள். இப்போது இடது காலுக்கு செய்ய வேண்டும். இவ்வாறாக வலது காலில் இரண்டு முறை, இடது காலில் இரண்டு முறை செய்யவும்.
பலன்கள் :
உடல் எடை குறையும், இடுப்பு, கால்,கைகளுக்கு பலம் தரும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தும், மன அழுத்தத்தை குறைக்கும்.
குறிப்பு :
குறைவான ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



