Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
சென்னை மழை: பொது மக்களுக்கான அவசரக் கால குறிப்புகள்!!!
சென்னை, கடலூர் போன்ற தமிழக இடங்களில் பெருமளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓயாமல் பெய்து வரும் மழையால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து மிகவும் துயரத்தில் இருந்து வருகிறார்கள். இப்போது பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சில விஷயங்களில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
முக்கியமாக ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் அவசியம். தங்குமிடம், உணவு, போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். வெள்ளம் அடங்கிய பிறகும் கூட நீங்கள் சில விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அது குறித்த சில குறிப்புகள் பற்றி இனிக் காணலாம்.....

ஏ.சி கார்களில் தங்க வேண்டாம்
கடந்த முறை மும்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, பாதுகாப்பு என எண்ணி, ஏ.சி கார்களில் தங்கியவர்கள் பரிதாபமாக உயிர் இழந்ததை நாம் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது எனவே, தயவு செய்து யாரும் கார்களில் தஞ்சம் கொள்ள வேண்டாம். இது விஷத்தன்மையாக மாறி உயிரை பறிக்கக் கூடும்.

பெண்கள்
மாதவிடாய் ஏற்பட்டுள்ள அல்லது ஏற்பட வாய்ப்புள்ள பெண்கள் நீர் இருக்கும் இடங்களை விட்டு விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். கழிவு கலந்து வரும் நீர் உடலை மேலும் வலுவிழக்க செய்யும். கூச்சம் இன்றி மாதவிடாய் இருக்கும் பெண்கள் ஆண்களிடம் உதவிக் கேட்டு பாதுகாப்பான இடத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள்.

கரண்ட்
உங்கள் வீட்டில் கரண்ட் (மின்சாரம்) வந்துவிட்டது எனில், முதலில் இண்டிகேட்டர் வைத்து சுவர்கள், கட்டில் போன்றவற்றில் மின்சாரம் பாய்கிறதா என சோதித்து பாருங்கள். மின்சாரம் நீரில் வேகமாக செயல்பட கூடியது, இதனால் இது எளிதாக சுவர்களில் பாய வாய்ப்புகள் உண்டு.

வெள்ளம் வற்றிய பிறகு
வெள்ளம் முழுவதுமாக வற்றிய பிறகு வீட்டையும், வீட்டு பொருட்களும் நன்கு காய வைக்க வேண்டும். வீட்டு உபயோக பொருட்களை நீங்கள் ஒருமுறை மீண்டும் கழுவிய பிறகு வெயிலில் காய வைய்யுங்கள். இல்லையேல் அதன் மூலம் பாக்டீரியாக்கள் பரவக் கூடும்.

வேடிக்கை வேண்டாம்
சாலைகளில் மழை வெள்ளம் ஓடுவதை வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். இது உங்களுக்கு மட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்துவருபவர்களையும் பாதிக்கும். மேலும் ஆங்காங்கே திடீரென வெள்ளம் அதிகரித்து வருவதால் முடிந்த வரை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.

நீர்
தண்ணீரை முடிந்த வரை சிக்கனமாக பயன்படுத்துங்கள். சாலைகள் பெருக்கெடுத்து ஓடும் நீர் குறையும் வரை உங்கள் இருப்பில் இருக்கும் நீர் மற்றும் உணவை சரியான முறையில் சீரான அளவில் உட்கொள்ளுங்கள். வீணாக்கிவிட வேண்டாம்.



Click it and Unblock the Notifications
