Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகமாக தேவைப்படும் பெருட்கள் இவை தான்!!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளித்து பாதுகாக்கும் அதே அளவு, அவர்களது உடல்நலம் பாதிக்காமல் இருக்க கூடுதலாக சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே பொருட்களை இழந்து தவிக்கும் அவர்களது உடல்நலமும் பாதிக்கப்பட்டால் அவர்கள் மீண்டு வர மிகவும் கடினமாக அமைந்துவிடும்.
சென்னை மழை: ரியல் சூப்பர்ஸ்டாராக மாறிய நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி!
உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல, அவர்களுக்கு நோய் கிருமிகள் அண்டாமல் இருக்க தேவையான சில அத்தியாவசிய வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனால் மட்டுமே அவர்கள் முழுமையான பாதுகாப்புடன் இருக்க முடியும்....
சென்னை மழை: பொது மக்களுக்கான அவசரக் கால குறிப்புகள்!!!

சோப்பு
நோய் கிருமிகள் தாக்கம் அண்டாமல் இருக்க சோப்பு மிகவும் முக்கியம். குறைந்த பட்சம் கைகள் கழுவவாவது சோப்பு வேண்டும். அப்போது தான் அவர்கள் உணவருந்தும் போதாவது கிருமிகள் அண்டாமல் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்க முடியும்.

நேப்கின்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் பெண்களுக்கு மிகவும் அத்தியாவசியப் பொருளாக இருப்பது நேப்கின். பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் கூட நேப்கின் மிகவும் அவசியம்.

அத்தியாவசிய மருந்துகள்
மழை, குளிர், நீர் மூலமாக பரவும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையான அடிப்படை மருந்துகள் மிகவும் அவசியம்.

போர்வை
மழை மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வை முக்கிய அத்தியாவசியப் பொருளாக இருக்கிறது. இது இவர்கள் மேலும் நோய்வாய்ப்பட்டு போகாமல் இருக்க உதவும். எனவே, குளிர் தாங்கும் அளவிலான போர்வைகள் அவர்களது உடல் நலத்தை காக்கும்.

நல்ல நீர்
மிகவும் அத்தியாவசியப் பொருள் நல்ல, தூய நீர் தான். உணவின்றி இரண்டு மாதங்கள் கூட ஒருவன் வாழ முடியும். ஆனால், நீரின்றி இரண்டு நாட்கள் கூட உயிர் வாழ்வது கடினம். எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான முதல் பொருள் தூய நீர்.

சுகாதாரமான உணவு
சுகாதாரமான, தரமான உணவு அவசியம். உணவு தருவது மட்டுமின்றி, அவர்கள் உணவருந்தும் இடமும் கூட சுகாதாரமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கிருமிகள் பரவாத இடமாக அது இருக்க வேண்டும்.

நீர் தேக்கம் இல்லாத தங்குமிடம்
அனைத்திற்கும் மேலாக, வெள்ளத்தால் பாதிக்கபப்ட்ட மக்களை உடனடியாக நீர் தேக்கம் இல்லாத இடத்திற்கு இடம்பெயர்க்க செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு மேலும் உடல்நலம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications