Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
வாய்விட்டு பாடுங்க, அழகாய்டுவீங்க..!

தன்னம்பிக்கை
அழகு என்பது உடல் தொடர்புடையது மட்டுமல்ல அது உள்ளம் தொடர்புடையது. என்கின்றனர் வல்லுநர்கள். எங்கே தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ அங்கே அழகு மிளிரும் என்பது அவர்களின் கூற்று. உள்ளத்தில் தன்னம்பிக்கை ஒளி உண்டானால் முகத்தில் பொலிவு கூடும் என்பது வல்லுநர்களின் கருத்து.
அழகாய் இருக்க வேண்டும். அழகான தோற்றம் பெற வேண்டும் என எந்தப் பெண்ணும் விரும்புவது சகஜம். நாம் நேசிக்கும் ஒருவர். அல்லது ஒரு பொருள், அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாம். அது நம்மை விட்டு போகும் போது, அல்லது இல்லாமல் போகும் போது, நாம் அதற்காக ஏங்கும் நிலை ஏற்படலாம். ஆனால் நாம் எதை இழந்தாலும் அழகு எப்போதும் நம்மை விட்டு அகல்வதேயில்லை. அது எப்போதும் நம்மிடவே உள்ளது. ஆனால், நமக்குத்தான் வயதாகிவிட்டதே என எண்ணி அழகை நாம் பேணாத காரணத்தால் தான் அழகிழந்தவர்களாக நாம் நம்மை கருதுகிறோம்.
நம்மை நாமே பாராட்டுவோம்
இழந்த அழகை பெற நாம் முதலில் நம்மீது நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்மைப் பற்றி உயர்வாக எண்ண வேண்டும். நாம் அழகானவர், இனிமையானவர் என எண்ணிக் கொள்வது அழகின் முதல் படியாகும். இது போன்ற மெல்லிய உணர்வுகள் கூட நமது முகத்தை அழகுபடுத்தும்.
ஆரோக்கியமான உடல்நிலை
உணர்வுகள் மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை கூட அழகாய் இருப்பதற்கு தேவைப்படுகிறது. அழகான மென் உணர்வுகளைப் பெற நல்ல தேக ஆரோக்கியம் மிக அவசியமாகும். நல்ல ஆரோக்கியம் என்பது திடகாத்திரமாக சுறுசுறுப்பானவர்களாக இயங்குவதேயாகும். இது சுறுசுறுப்பு நல்ல சத்தான உணவை உட்கொள்வதன் மூலமே பெற முடியும். நல்ல ஆரோக்கியத்தைப் பெற முதலில் மன அமைதியைத் தேடிக்கொள்ளுங்கள்.
நிதானம் ஏற்படும்
அமைதியில்லாத உள்ளத்தில் அழகான மென்மையான எண்ணங்களுக்கிடமில்லை. எந்தப் பிரச்சினையையும் என்னால் எதிர்த்துப் போராட முடியும்'' என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அச்சம் விலகும் அந்த மனத்தைரியத்தில் ஒரு அமைதி மனதில் ஏற்படுவதை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
மன அமைதி ஏற்படும் போது மிகுந்த நிதானத்துடன் அன்றாட வேலைகளை திருப்தியுடன் செய்து முடிக்க முடியும். அமைதியாக உறங்கவும் சாப்பிடவும், நண்பர்கள் உறவினர்களுடன் இனிமையாக பழகவும் முடியும்.
தினமும் கவனியுங்கள்
திருமணத்திற்கோ, திருவிழாவிற்கோ செல்லும் போது மட்டுமே சில பெண்கள் அழகு படுத்திக்கொள்ள முற்படுவார்கள். பிற நாட்களில் ஏனோ தானோவென நாட்களை கழித்து விடுவார்கள். இது தவறான முறையாகும். துடைக்கத் துடைக்கத்தான் கண்ணாடி பளப்பளப்பாகும். அதேபோல் பெண்கள் தங்களின் முகத்தை கை கால்களை அடிக்கடி நல்ல முறையில் பேணி வந்தால் நாளடைவில் சகல உறுப்புகளும் பொலிவு பெறும்.
இதேபோல் மனதையும் கவனித்து அமைதி இழக்காது பாதுகாப்பது அதைவிடச் சிறந்ததாகும். ஏனெனில் அமைதியில்லாத மனதில் முக அழகு ஏற்படாது. சோகமோ சந்தோஷமோ முகமானது மன அழகை பளிச்சென எடுத்துக்காட்டும். இந்த சக்தி கண்களுக்கும் உண்டு. உங்களைப் பற்றிய நம்பிக்கை, உடல்களைப் பற்றி ஓர் உயர்ந்த அபிப்பிராயம், நல்ல நினைவுகள் இல்லாமல் போகும். பட்சத்தில் அழகாக இருக்கிறோம் என்ற நினைப்பிற்கே இடமில்லை.
வாய்விட்டு பாடுங்கள்
பிரச்சினைகள் மனதை பாதித்து விடுவது இயற்கையே. பிரச்சினைகள் சகலருக்கும் உண்டு. பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அது அவசியமானது. பிரச்சினைகளுடன் வாழ்வது அதைத் தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பது உடலை மிகவும் பாதித்து விடும்.
மன இறுக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் அதனையிட்டு நெருங்கிய நண்பர்களுடன், அல்லது உங்களுக்கு மிக வேண்டியவர்களுடன் அப்பிரச்சினையையிட்டு மனம் திறந்து பேச வேண்டும். பிரச்சினை இருக்கிறதே என்று விட்டு விடாமல் மனத்தெளிவுடன் ஏனைய வீட்டு வேலைகளை மேற்கொள்ளலாம்.
அல்லது ஏதவாது கீர்த்தனைகள், சுலோகங்கள் தெரிந்திருந்தால் அவைகளை கொஞ்சம் சப்தத்துடன் பாடலாம். இதனால் மனம் இலேசாகும். இதனால் பிரச்சினைகள் மறக்கப்பட்டு மனப்பாரம் குறைந்து சாந்தமடைகிறது. முயற்சி செய்து பாருங்கள்.
மனத் தெளிவு தரும் யோகா
யோகாசனம் கூட மன அமைதியைக் கொடுக்கும். எல்லா யோகாசனங்களை செய்ய முடியாவிட்டாலும் ஓரிடத்தில் அமர்ந்து மூச்சை உள்வாங்கி மெல்ல வெளியே விடுங்கள். அதைத் தொடர்ந்து 15, 20 நிமிடம் வரை செய்து வாருங்கள். மன அமைதி கிடைக்கும். அலைபாயும் நினைவுகள் கட்டுக்கடங்கி முகம் அமைதியை வெளிக்கொணரும். பதற்றம் தணியும். உள்ளழகு பளிச்சென வெளிவரும். முகமும் உடலும் புத்துயிர் பெறும்.
சுடர்விடும் குத்துவிளக்கு
அழகான தோற்றம் கொண்ட ஒருவர் பிறரையும் சந்தோஷப்படுத்துகிறார். தன்னம்பிக்கை கொண்டவராக புன்னகையுடன் அவர் வலம் வரும் போது பார்ப்பவர்கள் பரவசம் கொள்கிறார்கள். அவரது உள்மன அழகை தெளிவான புன்னகை எடுத்துக்காட்டுகிறது.
மனதில் அமைதியும் அடக்கமும் இருந்தால், முகமும் உடலும் அழகு பெறும் அப்படியான முகத்திற்கு அலங்காரமே தேவையில்லை. சாதாரண முக அலங்காரம் போதுமானது. குத்து விளக்கு போன்ற அழகு என்கிறார்களே அது போல அமைதியான முகத்தெளிவினை காட்டும் அழகைத் தான் அப்படி வர்ணிக்கிறார்கள்.
மனத் தெளிவும், அமைதியுமான உள்ளமும் அழகின் முதல் படியாகும். திருப்தியான உள்ளம் அமைதியை ஏற்படுத்தும். எனவே மன அமைதியைத் தேட முயற்சி செய்யுங்கள். உங்களைப் பற்றி அழகான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். நல்ல மென் உணர்வுகளை கொண்டிருங்கள். அதுவே உங்கள் முகத்திலும் உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications