For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவுக்குப்பின் சூடா குடிங்க... புற்றுநோய் வராது! – மருத்துவர்கள் அறிவுரை

By Mayura Akilan
|

Drinking Water
உணவு உண்ட உடன் தண்ணீர் குடிப்பது குறித்து பல வித கருத்துக்கள் நிலவுகின்றன. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றனவாம் எனவே உணவு உண்ட பின்னர் 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

டயட்டினை பின்பற்றுபவர்கள் சிறிதளவு உணவு உண்ணவேண்டும் என்பதற்காக அதிகமான தண்ணீரை அருந்துகின்றனர். மொத்தத்தில் தண்ணீரானது உடல் நலம் காக்கும் உன்னத மருந்தாகும்.

இளம் சூடான வெந்நீர்

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் புற்றுநோய் செல்கள் ஏற்படுவதையும் தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

இதன் மூலம் உணவானது எளிதில் செரிமானமாவதோடு கெட்டக் கொழுப்புக்கள் ஆங்காங்ககே சேர்ந்து உடலுக்கு கெடுதல் ஏற்படுவது தடுக்கப்படும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே தான் உணவு உண்டபின்னர் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கவும் பரிந்துரைக்கின்றனர்.

குளுமையான நீர் கூடாது

அதேசமயம் ஜில் நீர் இதற்கு எதிர்மறையான செயல்பாட்டினை ஏற்படுத்துமாம். அநேகம் பேர் உணவு உண்டவுடன் ப்ரிட்ஜில் வைத்த குளிர் நீர் பருகுவார்கள். இது இதயநோய், கேன்சர் போன்றவற்றிர்க்கு வழி வகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், உண்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது.

நோய்களுக்கு காரணம்

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்' என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே வெது வெதுப்பான தண்ணீரே உடல் நலத்திற்கு ஏற்றது என்கின்றனர் மருத்துவர்கள்.

English summary

A Glass of Hot Water After Meals May Reduce Cancer Risk | உணவுக்குப்பின் சூடா குடிங்க... புற்றுநோய் வராது! – மருத்துவர்கள் அறிவுரை

It’s a normal practice to drink water during or after meals. Different schools of thought go by different philosophies. Many such theories are doing the rounds all the time basically encouraging healthy life free of diseases and complications. This is one such suggestion that promotes drinking hot water during and after meals.
Story first published: Saturday, December 24, 2011, 16:38 [IST]
Desktop Bottom Promotion