Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

எலுமிச்சை கனியில் வைட்டமின் . சி உயிர்சத்து அதிகம் உள்ளது. அத்துடன் சுண்ணாம்பு சத்தும், பாஸ்பரசும் அதிக அளவில் உள்ளன. இது உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் பெற்றது. தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடல் திறனை வலுப்படுத்துகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்
எலுமிச்சையில் அதிக நீரும், 30-க்கும் மேற்பட்ட எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருட்களும் உள்ளன. இதில் ஆல்கஹால்கள், அல்டிஹைடுகள், எஸ்டர்கள், ஹைடிரோகார்பன், கீட்டோன்கள், ஆக்ஸைடுகள், சிட்ரிக் அமிலம், சிட்ரால் டெர்பினால்கள் போன்றவை உள்ளன.
தூக்கமின்மையை போக்கும்
வயிறு தொடர்புடைய கோளாறுகளை குணமாக்கும். மலச்சிக்கலையும் நீக்கும். பித்த காய்ச்சல், கிறுகிறுப்பு, வாந்தி போன்ற தொல்லைகளைப் போக்கும். வாய், வயிறு, போன்ற இடங்களில் ஏற்படும் புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும்.
பற்களுக்கு பலத்தை அளிக்கும். கண்நோய்களை குணமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு. தூக்கமின்மையை போக்கி ஆழ்ந்த நித்திரையை கொடுக்கும்.
தோல் வறட்சியை போக்கும். சருமம் மிக மிருதுவாக இருக்க இதன் சாறு உதவுகிறது. உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் கோளாரை சரி செய்யும் ஆற்றல் உண்டு.
கொசுக்கடிக்கு மருந்து
விஷத்தை முறிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தேள் கொட்டி விட்டால் கொட்டிய இடத்தில் ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை தேய்க்க விஷம் இறங்கும்.
கொசுக் கடித்த இடத்தில் எலுமிச்சை சாற்றினை பூசினால் எரிச்சல் குணமடையும். இரவில் தூங்கும் முன் சாற்றினை பூசினால் கொசுக்கடியில் இருந்து தப்பலாம்.
கிருமிகளுக்கு எதிரானது
பொதுவாகவே இயற்கையில் விளையும் கனிகள் மருத்துவ குணம் உடையவை. எலுமிச்சைக்கு அதில் முதலிடம். இது கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு நோய் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள சாற்றில் சிட்ரிக் அமிலம் என்னும் முக்கிய பொருள் உள்ளது. இது வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்னும் நோயை குணப்படுத்த உதவுகிறது. பசியை தூண்டுகிறது. ஜீரணத்தை எளிதாக்குகிறது. வாந்தி, வயிற்று வலி நோய்களை குணப்படுத்தும்.
நுரையீரல் நோய்கள்
எலுமிச்சை கனியின் சாறு தாகத்தினை தீர்த்து எரிச்சலைப்போக்கும். நாடுவிட்டு நாடு செல்பவர்களுக்கும், கப்பல் பயணத்திற்கும் மிகவும் உதவும். நுரையீரல் நோய்களை போக்கும்.
எலுமிச்சை சாறுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து கொப்பளித்தால் ஈறு மென்மையாதல் மற்றும் வைட்டமின் சி குறைவினால் ஏற்படும் வாய்ப்புண்கள் குணமடையும்.
எலுமிச்சை சாற்றின் பானம் நீரிழிவு நோயாளிகளின் தாகத்தை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.
எலுமிச்சை ஊறுகாய்
அனைத்து வீடுகளும் இருக்கக்கூடிய அத்தியாவசிய உணவுப்பொருள் எலுமிச்சை ஊறுகாய். இது கணையப் பெருக்கம் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
