Latest Updates
-
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா?
உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
ஆல்கஹால் நுகர்வு மற்றும் கல்லீரலில் அதன் தாக்கம் சுகாதாரத் துறையில் பரவலாக விவாதிக்கப்படும் தலைப்பாகும். அதிக அளவு ஆல்கஹால் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புக்களை நாம் நன்கு அறிவோம். ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, குறிப்பாக இளைஞர்களிடையே இந்த பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
2023 இல் ஜர்னல் ஆஃப் ஹெபடாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, கல்லீரல் நோயால் ஆண்டுதோறும் இரண்டு மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன மற்றும் அனைத்து இறப்புகளிலும் ஆல்கஹால் மிகவும் பொதுவான ஆபத்து காரணிகளில் ஒன்றாக உள்ளது.

நமது உடலின் நச்சுத்தன்மை மற்றும் உணவுகளை செரிமானம் செய்வதில் கல்லீரல் முக்கியப்பங்கு வகிக்கிறது. நாம் சாப்பிடுவதும் குடிப்பதும் நமது கல்லீரலை அதிகம் பாதிக்கிறது. ஆல்கஹால் கல்லீரலின் மிகப்பெரிய எதிரியாகும், ஏனெனில் அதிகமாக குடிப்பதால் உறுப்புகளில் வீக்கம் போன்ற கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம்.
நாம் உட்கொள்ளும் ஆல்கஹால் அசிடால்டிஹைட் எனப்படும் வேதிப்பொருளாக உடைந்து கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறுகிறது. மது அருந்துபவர்கள், கல்லீரலில் அதன் விளைவை அறிந்து கவனமாக இருக்க வேண்டும்.
சீரான அளவைப் பராமரிக்கவும்
ஒரு கிளாஸ் பீர் அருந்துவதுது நமக்கு பொழுதுபோக்காகத் தோன்றினாலும், அதிகப்படியான மதுபானம் கல்லீரலை சேதப்படுத்தும். உங்கள் கல்லீரலைப் பாதுகாக்க, நீங்கள் உட்கொள்ளும் ஆல்கஹால் க்ளாஸின் எண்ணிக்கையை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். ஒருவர் மது அருந்தும் எண்ணிக்கைக்கு வாராந்திர வரம்பை நிர்ணயிக்க வேண்டும். பொதுவாக, இது 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அதிகபட்சமாக 6-7 எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
குடிப்பதற்கு முன் சாப்பிட வேண்டும்
ஆல்கஹால் உங்கள் வயிறு மற்றும் சிறுகுடல் வழியாக உங்கள் இரத்த ஓட்டத்தில் நுழைகிறது. நீங்கள் குடிக்கத் தொடங்கும் போது உங்கள் வயிறு காலியாக இருந்தால், ஆல்கஹால் உங்கள் இரத்த ஓட்டத்தில் வேகமாக நுழையும். இதனால் நீங்கள்ஆல்கஹாலின் விளைவுகளை நீங்கள் விரைவாக உணரலாம், இதனால் நீங்கள் அளவிற்கு அதிகமாக குடிக்க வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் குடிப்பதற்கு முன் அல்லது குடிக்கும் போது சாப்பிட வேண்டும்.
தண்ணீரை மறந்து விடாதீர்கள்
மது அருந்துவதால் நீரிழப்பு ஏற்படுகிறது. இது பதிலுக்கு இரத்த அடர்த்தியை அதிகமாக்குகிறது. தடிமனான அடர்த்தியுடன், சுத்திகரிப்புக்காக கல்லீரல் வழியாக இரத்த ஓட்டம் சாத்தியமற்றது. நாம் அதிகமாகக் குடிப்பதால் அது உண்மையில் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் கல்லீரலைப் பாதுகாப்பதற்கு உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும், குறைந்த இரத்த அடர்த்தியைக் கொண்டிருப்பதற்கும் போதுமான அளவு தண்ணீர் உடலில் இருக்க வேண்டும், இதனால் ஆல்கஹால் கல்லீரலை எளிதில் கடந்து செல்லும்.
சீரான டயட்
நாம் சாப்பிடுவதும் குடிப்பதும் கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே கல்லீரலை சேதமடையாமல் பாதுகாக்க நாம் எதை உட்கொள்கிறோம் என்பதை கவனிக்க வேண்டியதுஅவசியம். உணவில் இலைக் காய்கறிகள், ப்ரோக்கோலி, கேரட் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அமிலத்தன்மை கொண்ட பழங்கள் (திராட்சைப்பழம், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை), காபி, ஒமேகா-3 (மீன், பருப்புகள்) நிறைந்த உணவுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் சாப்பிட வேண்டும். மேலும், சோடா, பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்ற உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
போதுமான உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வது உங்கள் கல்லீரலை சேதங்களில் இருந்து பாதுகாப்பதுடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஜிம்மிற்கு செல்வது உடலில் எரிபொருளுக்காக ட்ரைகிளிசரைடுகளை எரிக்க உதவும். இது, கல்லீரலில் கொழுப்பைக் குறைத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். விறுவிறுப்பான நடைபயிற்சி, ஏரோபிக்ஸ், ஓட்டம், நீச்சல் போன்றவை கல்லீரலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை எரித்து கல்லீரலைஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

