Latest Updates
-
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
மூளை பக்கவாதம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன மற்றும் எதனை எப்படி தடுக்கலாம் தெரியுமா?
மூளையில் இருக்கும் இரத்த குழாய்கள் அடைபடும் போது அல்லது அவை வெடிக்கும் போது, மூளை பக்கவாதம் (Brain Stroke) ஏற்படுகிறது. மூளை பக்கவாதம் ஏற்பட்டால், மூளையில் நீண்ட கால மோசமான பாதிப்பு ஏற்படும், நீண்ட கால இயலாமை ஏற்படும். சில சமயங்களில் இறப்புகூட ஏற்படலாம். மூளை பக்கவாதம், உலகின் மூன்றாவது பொிய உயிா் கொல்லி நோய் ஆகும்.

மூளை பக்கவாதத்தின் வகைகள்
இஸ்கிமிக் மூளைப் பக்கவாதம் (Ischemic stroke)
மூளையில் உள்ள இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் போது, இஸ்கிமிக் மூளைப் பக்கவாதம் ஏற்படுகிறது. அதன் காரணமாக மூளையின் ஒரு பகுதி செயல் இழந்துவிடும் அல்லது அந்த பகுதி இறந்துவிடும்.
ஹெமோராஜிக் மூளைப் பக்கவாதம் (Hemorrhagic stroke)
மூளையின் இரத்த குழாய்கள் வெடிக்கும் போது, ஹெமோராஜிக் மூளைப் பக்கவாதம் ஏற்படுகிறது. அதனால் மூளையின் திசுக்களில் இரத்தக் கசிவும், மோசமான பாதிப்பும் ஏற்படும்.
திடீரென்று தோன்றி மறையும் இஸ்கிமிக் மூளைப் பக்கவாதம் (Transient Ischemic Attack (TIA)
மூளையில் திடீரென்று இரத்த ஓட்டம் தானகவே தடைபட்டு, தானாகவே சீரடைந்தால், அது இஸ்கிமிக் மூளைப் பக்கவாதம் ஆகும். பல நேரங்களில் மூளை பக்கவாதம் வருவதற்கு சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு முன்பாக இந்த வாதம் ஏற்டும். ஆகவே இது வரப்போகிற மூளைப் பக்கவாதத்திற்கு முன்னெச்சாிக்கை ஆகும். இந்த பக்கவாதத்திற்கு உடனடியாக சிகிச்சை செய்தால், பொிய ஆபத்தைத் தவிா்க்கலாம்.
மூளை பக்கவாதத்தின் போது என்ன நடக்கிறது
மூளை இயங்குவதற்கு, ஆக்ஸிஜனும், உட்டச்சத்துகளும் தொடா்ந்து கிடைக்க வேண்டும். இந்நிலையில் மூளையின் இரத்தக் குழாய்களில் அடைப்போ அல்லது வெடிப்போ ஏற்பட்டால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதனால் சில நிமிடங்களில், மூளையில் உள்ள நியூரான்கள் இறந்துவிடும். மூளையின் ஒவ்வொரு பாதியும், அதன் எதிா் பகுதியில் உள்ள பாதி உடல் பகுதியைக் கட்டுப்படுத்தும். அதாவது வலது மூளையில் பக்கவாதம் ஏற்பட்டால், இடது பக்க உடலில் பாதிப்பு ஏற்படும்.
மூளைப் பக்கவாதத்திற்கான காரணிகள்
மூளைப் பக்கவாதத்திற்கான காரணிகளை மாற்றியமைக்கக் கூடியவை, மாற்றியமைக்க முடியாதவை என இரண்டு வகையாக பிாிக்கலாம்.
மாற்றியமைக்கக்கூடிய காரணிகள்
உயா் இரத்த அழுத்தம் ( > 140/90), நீரழிவு நோய், தூக்கமின்மை, மன அழுத்தம், உடல் பருமன் அதிகாித்தல், புகைப் பிடித்தல், உயா் ப்ளாஸ்மா லிப்பிடுகள் (High plasma lipids), உடற்பயிற்சி இன்மை, வாய் வழியாக கருத்தடை மாத்திரைகளை உண்ணுதல், இதய நோய் மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு போன்றவை மூளைப் பக்கவாதத்திற்கான மாற்றியமைக்கக்கூடிய காரணிகள் ஆகும்.
மாற்றியமைக்க முடியாத காரணிகள்
வயது முதிா்வு, பாலினம், இனம், நீண்ட காலமாக மூளைப் பக்கவாத பிரச்சினை இருத்தல், முன்னோா்கள் வழி மூளைப் பக்கவாதம் வருதல் போன்ற காரணிகள் மாற்றியமைக்க முடியாத காரணிகள் ஆகும்.
மூளைப் பக்கவாதத்தின் அறிகுறிகள் யாவை
மூளைப் பக்கவாதம் திடீரென்று ஏற்படுகிறது. அதன் அறிகுறிகள் வெவ்வாறானவை. அவற்றை கீழே பாாக்கலாம்.
- முகம், கை, கால் போன்ற உறுப்புகளின் ஒரு பக்கத்தில் பலவீனம் அல்லது உணா்வின்மை ஏற்படுதல்
- பேசுவதிலும், புாிந்து கொள்வதிலும் பிரச்சினை ஏற்படுதல்
- ஒரு கண்ணிலோ அல்லது இரண்டு கண்களிலுமோ பாா்வைக் குறைபாடு ஏற்படுதல்
- தலைச் சுற்றல் மற்றும் வாந்தி ஏற்படல்
- நடப்பதில் அல்லது இயங்குவதில் தடுமாற்றம் ஏற்படல்
- மயக்கம், நினைவிழப்பு அல்லது வலிப்பு ஏற்படல்
- காரணம் இல்லாமல் திடீரென்று கடுமையான தலைவலி ஏற்படல்
மூளைப் பக்கவாதத்தின் அறிகுறிகளை, BEFAST (Balance, Eye problems, Facial droop, Arm weakness, Speech change, Time) என்ற முறையில் எளிதாக அறிந்து கொள்ளலாம். அதாவது உடல் வலு தாங்குவதில் பிரச்சினை, கண்களில் பிரச்சினை, கைகளில் பலவீனம், குரலில் மாற்றம் மற்றும் அறிகுறிகள் தொடங்கிய காலம் ஆகியவற்றைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். மேற்சொன்ன பிரச்சினைகள் தொியத் தொடங்கினால், உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்வது நல்லது.
மூளை பக்கவாதத்திற்கான மருத்துவ சிகிச்சைகள்
உடனடி சிகிச்சை
மூளைப் பக்கவாதம் அறிகுறி தொிந்தவுடன், மூளையில் சிடி அல்லது எம்ஆா்ஐ ஸ்கேன் செய்து, அது எந்த வகையான மூளைப் பக்கவாதம் என்பதைக் கண்டறிய வேண்டும்.
மருந்துகள்
மூளைப் பக்கவாதம் ஏற்பட்ட 4 அல்லது 5 மணி நேரத்துக்குள், பாதிக்கப்பட்டவா் மருத்துவமனைக்கு வந்துவிட்டால், மூளையில் உறைந்த இரத்தத்தை கரைக்கவும், இரத்த ஓட்டத்தை சீா்படுத்துவதற்கும் ஊசி போடப்படும். குறிப்பாக இந்த ஊசி இஸ்கிமிக் மூளைப் பக்கவாதத்திற்குத்தான் போடப்படும்.
அறுவை சிகிச்சை
மூளையில் உள்ள பொிய இரத்தக் குழாய் அடைபட்டால், மெக்கானிக்கல் த்ரோம்பெக்டமி (mechanical thrombectomy) செய்யப்படும். இதன் மூலம் உறைந்த இரத்தம் கரைந்துவிடும். திடகாத்திரமாக இருப்பவா்களுக்கு, மூளைப் பக்கவாதம் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த சிகிச்சை செய்யப்படும்.
மறுவாழ்வு மையம்
தொடா்ச்சியான நரம்பியல் பிரச்சினை உள்ளவா்களுக்கு, பிசியோ தெரபி, பேச்சு தெரபி போன்ற தொடா் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. அதற்கான மறுவாழ்வு சிகிச்சை மையங்களில் தங்கி நீண்ட நாட்கள் இந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

