Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
boAt Smart Ring Active: போட் ஸ்மார்ட் ரிங் - இந்த சின்ன மோதிரத்துல இவ்வளவு நன்மை இருக்கா? மிஸ் பண்ணிடாதீங்க...
boAt Smart Ring Active: இன்றைய நவீன உலகில் நம் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஸ்மார்ட் வாட்ச், ஃபிட் பேண்ட்டுகள், ஹைப்ரிட் வாட்ச்சுகள் மூலம் நமது ஆரோக்கியத்தை கண்காணித்து வந்த நிலையில், போட் நிறுவனம் ஸ்மார்ட் ரிங்கை அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது ஒரு ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சிறிய அளவிலான மோதிரத்தின் மூலம் ஒருவர் தங்கள் ஆரோக்கியம் குறித்த பல விஷயங்களை கண்காணிக்கலாம்.
இதுவரை நீங்கள் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் எப்படி ஒரு சிறிய கருவி பல மாயங்களை புரியுமோ, அதேப் போல் மணிக்கட்டில் ஒரு வாட்ச்சை அணிந்து, அதை உங்கள் ஃபோனுடன் ப்ளூடூத் வழியாக இணைத்து இசையை கேட்பது, ஆரோக்கியத்தை கண்காணிப்பது, கேம்ஸ் விளையாடுவது என்று பலவற்றை செய்து கொண்டிருந்திருப்பீர்கள்.

ஆனால் ஸ்மார்ட்வாட்ச்சை விட மிகச்சிறய அளவில் இருக்கும் போட் ஸ்மார்ட் ரிங் மூலம் நீங்கள் எதிர்பார்க்காத அளவில் பலவற்றை துல்லியமாக கண்காணிக்கலாம். இப்போது அந்த போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் எப்படி வேலை செய்கிறது மற்றும் அதன் நன்மைகள் என்னவென்பதையும், எப்போது இந்த ஸ்மார்ட் ரிங் வெளிவரவுள்ளது என்பதையும் காண்போம்.
போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் எப்படி வேலை செய்கிறது?
ஸ்மார்ட் வாட்ச் போன்றே ஸ்மார்ட் ரிங்கில் ஒருவரது உடல் செயல்பாடு, ஆரோக்கியம், இதயத்துடிப்பு மற்றும் வெப்பநிலை போன்றவற்றை கண்காணிக்கும் சென்சார்கள் உள்ளன. இந்த சென்சார் மூலம் பெறப்படும் தரவுகளைப் பெற, ஸ்மார்ட் ரிங்கை ப்ளூடூத் வழியாக ஸ்மார்ட்போனுடன் இணைத்து காணலாம்.
ஃபிட்னஸ் டிராக்கரைப் போலவே , இந்த ஸ்மார்ட் ரிங்கை மோதிரம் போன்று அணியலாம். சொல்லப்போனால் மற்றதை விட இது எடை குறைவாக இருப்பதால், அணிவதற்கு மிகவும் சௌகரியமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். மிகச்சிறியதாக விரல்களில் ஒட்டிக் கொண்டிருப்பதால், ஆரோக்கியத்தை நன்கு துல்லியமாக கண்காணிக்கலாம்.
ஸ்மார்ட் ரிங் மூலம் எந்த மாதிரியான தகவல்களை பெற முடியும்?
போட் நிறுவனம் வெளியிடவுள்ள ஸ்மார்ட் ரிங் ஏராளமான அதி நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. முக்கியமாக இது 5ATM தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதியைக் கொண்டது. இதன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைனானது கண்களைக் கவரும் வகையில் மிகவும் க்யூட்டாக இருப்பதால், விரல்களில் அணியும் போது ஒரு ஸ்டைலான தோற்றத்தையும் தரும். போட் ஸ்மார்ட் ரிங்கில் உள்ள சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
* இதயத் துடிப்பு மானிட்டர்
* பாடி ரிக்கவரி டிராக்கிங்
* உடல் வெப்பநிலை மானிட்டர்
* SpO2 மானிட்டரிங்
* ஸ்லீப் மானிட்டரிங்
* மாதவிடாய் டிராக்கர்
* ஸ்மார்ட் டச்
இந்த ஸ்மார்ட் ரிங்கை யாரெல்லாம் வைத்திருக்க வேண்டும்?
தற்போதைய ஆரோக்கியமற்ற மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையினால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் எழத் தொடங்கியுள்ளன. இப்படி அதிகரிக்கும் உடல் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றிற்கு உடனே சிகிச்சை பெற வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்கு பல்வேறு கருவிகள் சந்தைகளில் விற்கப்பட்டு வந்தாலும் ஒரு சிறிய ஸ்மார்ட் ரிங் இருந்தால் சிரமமின்றி ஆரோக்கியத்தை டிராக் செய்யலாம்.
முக்கியமாக இந்த ஸ்மார்ட் ரிங்கை வைத்திருந்தால், இதயத் துடிப்பை சரியாக கண்காணித்து இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்க முடியும். மேலும் உடலில் ஆக்ஸிஜன் குறைபாடு இருந்தால், அதை உடனே கண்டறிய முடியும். எனவே இந்த ஸ்மார்ட் ரிங் சுவாச பிரச்சனைகளைக் கொண்டவர்கள், ஆஸ்துமா நோயாளிகள், இதய பிரச்சனை மற்றும் நாள்பட்ட நுரையீரல் பிரச்சனைகளைக் கொண்டவர்களிடம் இருப்பது மிகவும் நல்லது.
ஒருவருக்கு தூக்கம் மிகவும் முக்கியம். இந்த தூக்கம் போதுமான அளவு இல்லாவிட்டால், அதுவே பல பிரச்சனைகளை வரவழைத்துவிடும். எனவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தூக்கம் தேவை, நீங்கள் எவ்வளவு தூக்கத்தைப் பெறுகிறீர்கள் என்பதை சரியாக புரிந்து கொள்ள, இந்த ஸ்மார்ட் ரிங்கை வைத்திருப்பது அவசியம். முக்கியமாக மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க பெண்களுக்கு இது உதவியாக இருப்பதால், பெண்களிடம் இருப்பது நல்லது.
எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது?
போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் இன்னும் சந்தையில் வெளிவரவில்லை. ஆனால் இது ஜூலை 20 ஆம் தேதி இந்தியாவில் சந்தைக்கு வரவுள்ளது. அதுவும் சிறப்பு சலுகை விலையில் ரூ. 2999-க்கு விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஜூலை 18 முதல் அமேசான், ஃபிலிப்கார்ட் மற்றும் போட் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். நண்பர்களே! மிஸ் பண்ணிடாதீங்க...
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications