Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Stomach Cancer: மௌத் வாஷ் வெச்சே வயிற்று புற்றுநோயை ஆரம்பத்திலேயே அறியலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க..
Stomach Cancer: தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் காரணமாக பல்வேறு வகையான புற்றுநோய்கள் பரவி வருகின்றன. அதில் ஒரு வகையான புற்றுநோய் தான் வயிற்றுப் புற்றுநோய். இந்த வகை புற்றுநோயானது வயிறு அல்லது இரைப்பையில் செல்கள் கட்டுபாட்டை மீறி வளரும் போது உருவாகிறது.
பெரும்பாலும் இந்த வகையான செல் வளர்ச்சி உணவுக்குழாய் அல்லது இரைப்பை உணவுக்குழாய் சந்திக்கும் பகுதிகளில் காணப்படுகிறது. அதுவும் சுமார் 95 சதவீதத்திற்கும் அதிகமான வயிற்றுப் புற்றுநோய் வயிற்று சுவற்றில் வளரத் தொடங்கி, மெதுவாக வளர்ச்சியடைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் நிபுணர்களின் கூற்றுப்படி, வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது எளிதானது அல்ல மற்றும் பெரும்பாலும் முற்றிய நிலையில் தான் கண்டறிய முடிகிறது. ஆனால் ஒரு சிம்பிளான மௌத் வாஷ் கொண்டு உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை தாக்கும் வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அறியலாம் என்பது தெரியுமா?
ஆம் ரட்ஜர்ஸ் ராபர்ட் வுட் ஜான்சன் ஸ்கூல் ஆஃப் மெடிசினைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஒரு மௌத் வாஷ் வயிற்றுப் புற்றுநோயுடன் தொடர்புடைய பாக்டீரியாக்களை கண்டறிய உதவுவதாக கூறுகின்றனர். அதுவும் வயிற்று புற்றுநோய் செல்கள் வளரத் தொடங்குவற்கு முன்னரே கண்டறிய உதவுவதாக கூறுகின்றனர்.
மௌஷ் வாஷ் எப்படி வயிற்று புற்றுநோயை கண்டறிய உதவுகிறது?
இந்த ஆராய்ச்சியில் வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதற்கான ஆபத்தில் இருப்பவர்களின் வாயில் உள்ள பாக்டீரியாக்களின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஆரம்பத்திலேயே வயிற்று புற்றுநோயை கண்டறிய உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சொல்லப்போனால் இந்த வகையான சோதனை வயிற்று புற்றுநோயை ஆரம்பத்திலேயே அறிந்து தடுக்க உதவும் ஒரு கருவியாக செயல்படுகிறது.
இந்த ஆய்வில் எண்டோஸ்கோபி செய்வதற்கு திட்டமிட்டிருந்த 98 நோயாளிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 30 நோயாளிகளுக்கு வயிற்று புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. மேலும் சிலர் புற்றுநோய் வருவதற்கான ஆரம்ப கட்டத்தில் இருப்பதும், மீதமுள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பதும் தெரிய வந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கலந்து கொண்டவர்களின் வாய் பாக்டீரியாக்களின் மாதிரிகளை எடுத்து, வயிற்று புற்றுநோயுடன் தொடர்புடைய குறிப்பிட்ட பயோமார்க்கர்களை அடையாளம் கண்டு அவற்றைக் கொண்டு ஒரு மௌத் வாஷை உருவாக்கினர். அதற்கு ஏற்ப அந்த மௌத் வாஷை பயன்படுத்தும் போது, புற்றுநோய் உள்ளவர்கள் மற்றும் அதன் ஆபத்தில் உள்ளவர்களின் மாதிரிகளுக்கு இடையே குறைவான வேறுபாடுகள் தென்பட்டன.
இந்த ஆய்வு குறைவான மக்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக இந்த கண்டுபிடிப்புகளை பரந்த மக்களுக்கு பயன்படுத்த முடியுமா என்பதை சோதிக்க பெரிய ஆய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
வயிற்று புற்றுநோயின் அறிகுறிகள்
வயிற்று புற்றுநோயானது ஆரம்ப கட்டங்களில் பெரிய அறிகுறிகளை வெளிப்படுத்தாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியே வெளிக்காட்டினாலும், அது நாம் தினசரி சந்திக்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகளாகவே இருக்கும். இதனால் நிறைய பேர் அதை அசால்ட்டாக எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகள் பெரும்பாலும் முன்னேறும் வரை அதிகம் வெளிக்காட்டப்படுவதில்லை. கீழே வயிற்று புற்றுநோயின் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
* பசியின்மை
* விழுங்குவதில் சிரமம்
* உடல் சோர்வு அல்லது பலவீனம்
* குமட்டல் மற்றும் வாந்தி
* நெஞ்செரிச்சல்
* அஜீரண கோளாறு
* கருப்பு நிறத்தில் மலம்
* இரத்த வாந்தி
* தொப்புளுக்கு மேல் பகுதியில் கடுமையான வலி
* வயிற்று உப்புசம்
* கடுமையான வாய்வு தொல்லை
* சிறிய அளவில் உணவு உட்கொண்டாலும் வயிறு நிரம்பிவிடுவது
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் அறிகுறிகளாக இருப்பதால், இந்த அறிகுறிகளை அதிகம் சந்தித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள். அதுவும் உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் வயிற்று புற்றுநோய் இருந்தால், தவறாமல் மருத்துவரிடம் சென்று இதுக்குறித்து பேச வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications