Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
அடிக்கடி வயிற்றின் இந்த இடத்துல வலிக்குதா? அப்ப உங்களுக்கு வயிற்று புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
Stomach Cancer Symptoms In Tamil: உலகளவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. புற்றுநோய் என்பது உடலில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்படக்கூடியது. இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் வயிற்று புற்றுநோய். வயிற்றுப் புற்றுநோயானது உலகளவில் 5 ஆவது பொதுவான புற்றுநோயாகும். இந்த வயிற்று புற்றுநோயை இரைப்பை புற்றுநோய் என்றும் அழைப்பர். இது வயிற்றுப் பகுதியில் உள்ள செல்கள் அசாதாரணமாக வளரும் போது ஏற்படுகிறது.
வயிற்று புற்றுநோய் ஒருவருக்கு வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையான மற்றும் முக்கியமான காரணம் உணவுப் பழக்கவழக்கங்கள் தான். அதுவும் தற்போது செயற்கை சுவையூட்டிகள், அதிகப்படியான உப்பு மற்றும் எண்ணெய்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் நிறைந்த ஜங்க் உணவுகள் எங்கும் சூழ்ந்திருப்பதால், அப்படிப்பட்ட உணவுகளை ஒருவர் அடிக்கடி உட்கொண்டு வரும் போது, அதன் விளைவாக வயிற்று புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.

இந்த வயிற்று புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எந்த வகையான புற்றுநோயாக இருந்தாலும், அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே, எளிதில் சிகிச்சை அளித்து, குணப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதுவும் வயிற்று புற்றுநோய் ஒருவருக்கு இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு வெளிகாட்டும்.
ஆனால் இந்த அறிகுறிகள் நாம் தினசரி சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்றே இருப்பதால், பலரும் அவற்றைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொருவரும் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இப்போது வயிற்று புற்றுநோயின் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
வயிற்று வலி
வயிற்று புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் முக்கியமான அறிகுறிகளுள் ஒன்று தான் வயிற்று வலி. அதுவும் இந்த வகையான வயிறு வலி, வயிற்றின் மேல் பகுதியில் உணரப்படும். மேலும் இந்த வலி உணவு உண்ட பின் அதிகரிக்கும். இப்படியான வயிற்று வலியை ஒருவர் நீண்ட நாட்களாக சந்தித்து வந்தால், அதை புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
திடீர் எடை இழப்பு
எந்த ஒரு காரணமும் இல்லாமல் அல்லது எந்த முயற்சிகளையும் எடுக்காமல், திடீரென்று உடல் எடை குறைந்தால், சந்தோஷப்படாதீர்கள். ஏனென்றால், அது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் திடீரென்று எடை இழப்புடன், ஒருவர் பசியின்மையை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
உடல் சோர்வு மற்றும் பலவீனம்
வயிற்று புற்றுநோய் ஒருவருக்கு இருந்தால், அந்நபர் மிகுந்த உடல் சோர்வுடன், உடல் பலவீனமாக இருப்பதை உணரக்கூடும். எப்போது உடலில் புற்றுநோய் செல்கள் வளரத் தொடங்கியுள்ளதோ, அப்போது உடலின் ஆற்றல் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக மிகுதியான உடல் சோர்வை சந்திக்க நேரிடும். எனவே காரணமின்றி நீங்கள் உடல் சோர்வை சந்தித்தால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
குமட்டல், வாந்தி
வாந்தி, குமட்டல் போன்றவற்றை ஃபுட் பாய்சனிங் ஏற்பட்டால் சந்திக்க நேரிடும். ஆனால் இந்த அறிகுறிகளை வயிற்று புற்றுநோய் இருந்தாலும் சந்திக்கக்கூடும். அதுவும் இரத்தம் கலந்த வாந்தியை எடுத்தால், தாமதம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
இரத்தம் கலந்த மலம்
பொதுவாக மூலநோய் இருந்தால், மலம் கழிக்கும் போது இரத்தக்கசிவை சந்திக்க நேரிடும். ஆனால் அப்படி ஏதும் இல்லாமல், இரத்தம் கலந்த மலத்தை அடிக்கடி வெளியேற்றினால், வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
நெஞ்செரிச்சல் மற்றும் வாய்வு தொல்லை
அடிக்கடி நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லையால் அவதிப்பட்டு வந்தால், அது வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். வயிற்று புற்றுநோய் ஒருவருக்கு இருந்தால், முதலில் ஒருவரது செரிமான மண்டலம் தான் பாதிக்கப்படும். இதன் விளைவாக நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லை போன்றவற்றை சந்திக்க நேரிடும். எனவே இப்படியான அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications